வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஒரு அக்கா தலையை தலையை ஆட்டி இளம் விதவைகள் பற்றி மாநாடு நடத்துமே. அதை எங்காவது பார்த்தீர்களா?
திருநெல்வேலி: நெல்லையில் நடந்த தி.மு.க., ஆலோசனை கூட்டத்தில், தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி பேசியதாவது:அன்பும், உரிமையும் அதிகமிருக்கும் இடத்தில் தான் அதிகளவு சண்டையும் நடக்கும். நம்மில் நடக்கும் சண்டைகளை எல்லாம் மறந்து, அனைத்து மனமாச்சரியங்களையும் மறந்து தேர்தல் பணியை செய்ய வேண்டும். அனைத்து தொகுதிகளையும் வென்று காட்டுவோம் என தி.மு.க., தலைவருக்கு அளித்த உறுதியை சாத்தியமாக்க வேண்டும். எப்போதும் இணைய மாட்டோம் என கூறிவிட்டு, பிரிந்து கிடந்தவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து இந்த தேர்தலை பா.ஜ., சந்திக்கிறது. தமிழகத்தில் இனி ஒட்டும் இல்லை; உறவும் இல்லை என சொன்னவர்களை எல்லாம் ஒரே அணியில் திரட்டி பா.ஜ., தேர்தலை சந்திக்கிறது. காரணம், தி.மு.க.,வை பார்த்து எதிர்க்கட்சி கூட்டணி பயந்து விட்டது. அண்ணாதுரை, ஈ.வெ.ரா.,வை கொச்சைப்படுத்தி காணொளி வெளியிட்டதை எதிர்த்து கேட்கக்கூட திராணி இல்லாதவர்கள் அ.தி.மு.க.,வை நடத்துகின்றனர். இவ்வாறு அவர் பேசினார். நெல்லையில் நடந்த தி.மு.க., ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் நேரு மற்றும் கனிமொழி எம்.பி.,
ஒரு அக்கா தலையை தலையை ஆட்டி இளம் விதவைகள் பற்றி மாநாடு நடத்துமே. அதை எங்காவது பார்த்தீர்களா?