உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது நடந்து இருந்தால்..! தமிழகத்தில் மாற்று அரசியல் இருந்திருக்கும்; சொல்கிறார் சீமான்

இது நடந்து இருந்தால்..! தமிழகத்தில் மாற்று அரசியல் இருந்திருக்கும்; சொல்கிறார் சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'இன்னும் 10 ஆண்டுகள் விஜயகாந்த் இருந்திருந்தால் தமிழகத்தில் மாற்று அரசியலை உருவாக்கி இருப்பார்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தினார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: விஜயகாந்தின் நினைவு தினத்தை முன்னிட்டு நடக்க இருந்த மவுன ஊர்வலத்திற்கு, அனுமதி மறுத்திருப்பது அவசியமற்றது. நினைவை போற்றும் வகையில் நடக்கும் ஊர்வலம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியான முறையில் தான் நடைபெறும். அனுமதி மறுப்பு என்பது அவ்வளவு பெரிய மகத்தான மனிதருக்கு அவமதிப்பாக நான் கருதுகிறேன். சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்று தெரிந்தே பல இடங்களில் அனுமதி கொடுத்த அரசு, இந்த ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்திருக்கக் கூடாது என்பதுதான் எனது கருத்து. விஜயகாந்த் எல்லோரிடமும் அன்பு செலுத்தக் கூடியவர். கருணாநிதி, ஜெயலலிதா, இருக்கும்போதே அரசியலுக்கு வந்தவர்கள் நாங்கள் தான். மக்கள் மீது அதிக பாசம் கொண்டவர் கேப்டன் விஜயகாந்த். அவர் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்து விட்டவர். அவரால் வாழ்ந்தவர்கள் பலர் உண்டு எல்லோரிடமும் சமமாக பழகக் கூடியவர். இன்னும் 10 ஆண்டுகள் அவர் உயிரோடு இருந்திருந்தால் தமிழகத்தில் பெரிய ஆற்றலாகவும், மாற்று அரசியலையும் உருவாக்கியிருப்பார். தமிழக மக்கள் அதை இழந்துவிட்டனர். இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Seekayyes
டிச 28, 2024 21:37

அவரைத்தான் கிண்டல் பண்ணியே ஒழித்தானுங்களே இந்த டுமிலர்ஸ்.


jayvee
டிச 28, 2024 19:33

என் ..ருமை சைமன் தீவிரவாதிய அப்பன்ன்னு கூப்பிடுவார் ..அதேவாயல விஜயகாந்தை அண்ணன்னு கூப்பிடுவார் ..


Natarajan Ramanathan
டிச 28, 2024 16:46

கோவையில் தீவிரவாதகளின் ஊர்வலத்துக்கு எல்லாம் அனுமதி கொடுப்பார்கள். ஆனால் மக்கள் போற்றும் ஒரு மகத்தான தலைவரின் நினைவு ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பார்கள்.


MURALI
டிச 28, 2024 13:22

குண்டு வைக்கும் கூட்டத்துக்கு மட்டுமே இங்கு அனுமதி உடனே கிடைக்கும்


Madras Madra
டிச 28, 2024 12:39

விஜயகாந்தை எதிர்க்கட்சி ஆக்கி அழகு பார்த்தவர் அம்மா இன்னும் கொஞ்சம் விவரமாக இருந்திருந்தால் அரசியலில் ஜொலித்திருப்பார் தவறான வர்களை நம்பி ஏமாந்தவர் ஆனாலும் அவரின் அன்பான உள்ளம் பல காலம் நினைவு கூரப்படும்


Kasimani Baskaran
டிச 28, 2024 12:27

தங்கள் வீட்டுக்கு வெளியே மட்டும் கடவுள் இல்லை என்று சொல்லும் ஒரு கூட்டத்தின் பகுத்தறிவுக்கு அடிமைப்பட்டு கிடைக்கும் தமிழனால் ஒன்றும் செய்ய முடியாது.


Dhurvesh
டிச 28, 2024 14:04

பின்னர் கற்பனையில் கதை கட்டி ஒரு நாட்டையே அடிமை படுத்த உங்க கூட்டத்தால் தான் முடியும்


Shankar
டிச 28, 2024 12:14

நேரத்துக்கு தகுந்த மாதிரி பேசுறதுல சீமான் வல்லவர்.


GoK
டிச 28, 2024 11:43

தமிழகம், தமிழ்நாடு ...அரசியல் மாறாது. கிட்டத்தட்ட 150 ஆண்டுகளாக வெள்ளையர்களால் எழுதப்பட்டு அதை "வேதவாக்காக"சரித்திரமாக மாற்றி அதை பாடங்களாக ஆரம்பித்து, கற்பித்து மூளைச்சலவை செயது கொண்டிருக்கிறார்கள். பாரதம் எனும் இந்தியா ஒரு நாடு இல்லை, அதற்க்கு என்று பண்பாடு, கலாச்சாரம், வரலாறு இல்லை பல மொழிகள் பல கடவுள்கள் பல நம்பிக்கைகள் பல வேறுவிதமாக காணப்படும் மக்கள், பல பழக்க வழக்கங்கள்....எப்படி அது ஒரு நாடாகும்? ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய காவியங்கள், நிர்மாணித்த கோவில்கள், அவற்றில் இருக்கும் கல்வெட்டுகள், அயோத்தியப்பட்டணம், ராமேஸ்வரம், கங்கை எ சோழன், தொல்காப்பியம், தமிழ் சமஸ்க்ரித தொடர்புகள் , சமீபத்திய மரபியல் ஜெனெடிக்ஸ் அனைத்தும் எப்படி ஹிமாலயமலை வடக்கிலும் இந்தியக்கடல் தெற்க்கிலுமடங்கிய நாடு என்று பல்லாயிரக்கணக்காடுகளுக்கு முன் எழுதிய ஆதாரங்கள் ...இவற்றை முற்றிலுமாக இல்லை மக்களை பிரித்து ஆதிக்கம் செய்ய தேவையானவற்றை மட்டும் எழுதப்பட்ட சரித்திரங்கள், பாடங்கள் அதிலேயே தேர்ச்சி பெற்று அவர்களிடமிருந்தயே சான்றிதழ்கள் வாங்கி இன்றும் பிழைப்பு நடத்தும் எழுத்தாளர்கள், "புகழ்" வாய்ந்த சரித்திர நிபுணர்கள்...அறிவற்ற அரசியல்வாதிகள் சுயநலனுக்காக எதையும் சொல்லலாம் ஆயிரம் முறை ஒரே பொய்யய் சொன்னால் அது உண்மை என மக்களை மூளைச்சலவை செய்தவர்கள் இன்றும் செய்கிறார்கள் . என்றும் எப்பொழுதும் சுதந்திரம், விடுதலை வேண்டும் என நினைப்போர் எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும் அதன் விலை அப்படித்தான். தமிழ் இனம் வஞ்சிக்கப்படுவதில், முல்லைச்சலவை செய்வதுஹில் இந்த சீமானுக்குப் பெரும் பங்கு இருக்கிறது. சிற்றறிவு பெரும் அபாயம் விளைவிக்கும்.


Dhurvesh
டிச 28, 2024 11:43

வோட்டு பிரிக்க நோட்டு வாங்கும் பலே களவாணி , அது இன்றி உன்னிடம் சீட்டு பெரும் உன் கட்சி தொண்டனிடமே நோட்டு வாங்கும் நம்பிக்கை அற்றவன் திரள் நிதி திருடன் பின்னர் எப்படி OMR இல் வீடு AC காரு எப்படி சாத்தியம் எல்லாம் திரள் நிதி தான் EVANAO உழைக்க நீ சுகமா இருக்க


TMM
டிச 28, 2024 10:56

இந்த ஆளு ஒத்தன்…குறுக்குசால் ஓட்டுவதல் கில்லாடி. முன்னுக்குப் பின் முரணாக பேசுவது,சமயத்துக்கு ஏற்றால்போல் மாற்றி பேசுவது இவன நம்புனா அவ்வளவுதான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை