ஆவணங்கள் தொலைந்து போனால் போலீஸ் நிலையம் போக வேண்டாம் ஆன்லைனில் விண்ணப்பித்தால் போதும்
சென்னை: 'பள்ளி, கல்லுாரி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் தொலைந்து போனால், புகார் தெரிவிக்க காவல் நிலையம் வர வேண்டாம்' என, போலீஸ் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாஸ்போர்ட், வாகன பதிவு எண் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், பள்ளி, கல்லுாரி சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகள் தொலைந்து போனால், காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கும் நடைமுறை இருந்தது. போலீசார் விசாரணை நடத்தி, மாநில குற்ற ஆவண காப்பகம் வாயிலாக, சம் பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து ஆவணங்கள் பெற்றுத்தருவர். இதனால், பொது மக்களுக்கு அலைச் சல் ஏற்பட்டது. இதை தவிர்க்கும் வகை யில், 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பித்து, தொலைந்து போன ஆவணங்களை பெற வசதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: பாஸ்போர்ட், பள்ளி, கல்லுாரி சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்கள் தொலைந்து போனால், eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இந்த ஆவணங்களை பெற, பொது மக்கள் காவல் நிலையங்களுக்கு வர வேண்டாம். ஆன்லைன் விண்ணப்பங் கள் குறித்து விரிவாக விசாரித்து, அந்தந்த துறை களி டம் இருந்து ஆவணங் கள் பெற்று, பொது மக்களின் இ - மெயில் முகவரிக்கே அனுப்பி வைக்கிறோம். இவ்வாறு அவ ர்கள் கூறினர்.