உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது; யாரை சொல்கிறார் துரைமுருகன்!

எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது; யாரை சொல்கிறார் துரைமுருகன்!

வேலூர்: 'எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது' என விஜய் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.வேலூர் மாவட்டம், காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதன் விபரம் பின்வருமாறு: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yqolecv7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கேள்வி: சேலத்தில் கருணாநிதி சிலை மீது கருப்பு மை பூசப்பட்டுள்ளது?துரைமுருகன் பதில்: யாரோ ஒரு காலி பையன் ஊத்தி இருக்கான் கருப்பு மையை ஊற்றி இருக்கான்.கேள்வி: புத்தக வெளியீட்டு விழாவில் பேசும்போது, சீனியர்கள் தான் தூண்கள். அவர்கள்தான் சிகரம் என கடந்த முறை பேசியது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். இதை எப்படி பார்க்கிறீர்கள்?துரைமுருகன் பதில்: நான் பார்த்தேன். அவருக்கு (ரஜினி) நான் போன் பண்ணி பேசினேன். ரொம்ப தேங்க்ஸ் சார் இப்பவாவது மறக்காமல் பேசி இருக்கிறீர்கள் என்று கூறினேன்.கேள்வி: நீங்கள் செய்த தவறை நீங்களே சரி செய்துவிடுங்கள் என த.வெ.க., தலைவர் விஜய் பேசியுள்ளாரே?துரைமுருகன் பதில்: ஏன் கேள்வி கேட்பதற்கு கூட அவர் வரமாட்டாரா? எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

அருண் பிரகாஷ் மதுரை
ஜூலை 15, 2025 22:38

விஜய் சட்டசபை வர வேண்டும் என்று நினைத்தால் தனித்து நின்றாலும் அல்லது அதிமுக கட்சியோடு கூட்டணி வைத்தாலும் போதும்.. இவர் என்னமோ ஓட்டு போடப் போகிற மாதிரி பேசுகிறார்..தீர்மானிப்பது மக்கள்..


ராமகிருஷ்ணன்
ஜூலை 15, 2025 21:28

கடந்த காலங்களில் திமுக செய்த காலிதனங்கள், கொலைகள், அராஜக அட்டூழியங்களை நினைத்து பாருங்கள் துச்சாதனனா.


HoneyBee
ஜூலை 15, 2025 21:00

மக்கள் இதை பார்த்து திருந்த வேண்டும்... அடிமைகளாக எத்தனை யுகங்கள் இருப்பார்கள்


Ramesh Sargam
ஜூலை 15, 2025 20:13

இதுபோன்ற ஆணவப்பேச்சுக்கள் திமுகவை அழித்துவிடும். திமுகவை அழிக்க வேறு யாரும் அதிக சிரமப்படவேண்டாம்.


Ramesh Sargam
ஜூலை 15, 2025 19:42

பேச்சிலேயே மிரட்டுகிறார். செயலில் இவர் எப்படி செயல்படுவார் என்று யோசியுங்கள்.


MARAN
ஜூலை 15, 2025 19:31

துரை முருகன் இது 1982 என்று நினைத்து கொண்டு உள்ளார், இது 2025 , அடாவடி செய்ய நினைத்தால் என்ன ஆகும் என்று உங்களுக்கே தெரியும்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 15, 2025 19:17

எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு வர முடியாது உங்களை திருபுவனம் காவல் நிலையத்துக்கு அனுப்பிவிடுவோம்.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 15, 2025 18:51

யானை தன்தலையில் தானே மண்ணள்ளி போட்டுக்கொள்ளுமாம்


Balaa
ஜூலை 15, 2025 18:48

Flash back. இந்தாளுக்கு கருணாநிதி கஷ்டபட்டது ஞாபகம் வந்திட்டுது. அந்த ஆளு திமுக வின் ஒரே எம் எல் ஏ வாக இருந்த பொழுது சட்டசபைக்கு வர பயந்து கொண்டு , மாதம் ஒரு முறை கையெழுத்து மட்டும் போட்டு விட்டு செல்வார். அஞ்சாமை திராவிட உடைமை.


V Venkatachalam
ஜூலை 15, 2025 18:43

திமுகவை ஒழிக்க ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொள்கிறார்.‌ விஜய்யால் முடியும் என்பதையும் ஒப்புக் கொள்கிறார். அது போதும்.‌ துச்சாதனன் பாடு திண்டாட்டமாகவே இருக்கிறதுன்னு தகவல் வந்த வண்ணம் இருக்கிறது.‌ பயம் இருக்கிறது அல்லவா? பார்க்கலாம்.‌


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை