உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்

பட தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்

சென்னை, : இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த தடை விதித்த நீதிமன்ற உத்தரவை மீறியதாக, குட் பேட் அக்ளி பட தயாரிப்பு நிறுவனமான, 'மைத்திரி மூவி மேக்கர்ஸ்' நிறுவனத்துக்கு, நீதிமன்ற அவமதிப்பு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், நடிகர் அஜித் நடிப்பில் குட் பேட் அக்ளி திரைப்படம், சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில், தன், 'இளமை இதோ இதோ, ஒத்த ரூபாய் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி' ஆகிய பாடல்களை, அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளதாக கூறி, இசையமைப்பாளர் இளையராஜா சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், குட் பேட் அக்ளி படத்தில், இசையமைப்பாளர் இளையராஜவின் பாடல்களை பயன்படுத்த, இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அதை மீறி, இளையராஜா பாடல்களை, சம்பந்தப்பட்ட படத்தில் தொடந்து பயன்படுத்தி வருகின்றனர். அதை உடனே நிறுத்த வேண்டும்; நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்வதை தவிர, வேறு வழியில்லை எனக் கூறி, இளையராஜா தரப்பில், பட தயாரிப்பு நிறுவனத்துக்கு, நீதிமன்ற அவமதிப்பு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

raja
செப் 17, 2025 06:57

கைதி மற்றும் ஜெயிலர் நல்ல உதாரணம்


K.P SARATHI
செப் 16, 2025 14:30

புதிய படத்தில் இன்றைய தலைமுறை ரசிக்கும் வகையில் இவர் இசை அமையவில்லை பழைய பாடல்களை மட்டும் கேட்கறோம்


venkatarengan.
செப் 16, 2025 12:12

இளையராஜா பாட்டு வேண்டாம். ஏ ஆர் ரகுமான் பாடலை அனுமதி இல்லாமல் பயன்படுத்துங்கள்.


ram
செப் 16, 2025 12:58

எந்த படமும் ஓடாது ரகுமான் பாடலை USE செய்தால்


Ramesh Sargam
செப் 16, 2025 12:07

ஏன் இப்படி நடந்துகொள்கிறார் இளையராஜா? நாளை பொதுமக்கள் அந்த பாடலை பாடினாலும், முணுமுணுத்தாலும் அவர்களுக்கும் கோர்ட் நோட்டீஸ் அனுப்புவார் இந்த மகானுபாவர்.


Manaimaran
செப் 16, 2025 12:07

இவருக்கு இதே வேல பேராசக்காரர்


Dv Nanru
செப் 16, 2025 11:28

இளையராஜாவுக்கு இதே வேலையா போச்சு உலகத்தில் இல்லாத காப்பது உரிமை ..இளையராஜா இசை அமைத்தற்கு ஒவொரு படத்துக்கும் payment வாங்கிகிட்டு தான் டொம்மு அடிச்சாரு அதற்க்கு அப்பறம் ஏன் காப்பு உரிமை எந்த இசை அமைப்பாளரும் கேட்டகாதது அவர் மட்டும் கேட்பது ஏன் ...


Indian
செப் 16, 2025 12:03

everyone getting copyright read full history about this subject


vbs manian
செப் 16, 2025 09:02

இவரை ஞானி மேதை என்றெல்லாம் போற்றுகிறார்கள். ஏன் இவருக்கு பெருந்தன்மை இல்லை. முணுக்கென்றால் கோர்ட்டுக்கு போகிறார். பற்று அற்ற ஆன்மிகவாதியாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் இவர் ஏன் இப்படி பிரண்டு போகிறார்.


Vasan
செப் 16, 2025 09:38

Rajnikanth Sir TOLDED. 1/2 bottle beer.


புதிய வீடியோ