உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேற்கு தொடர்ச்சி மலையில் சட்டவிரோத குவாரிகள்; விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற நேரிடும்

மேற்கு தொடர்ச்சி மலையில் சட்டவிரோத குவாரிகள்; விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற நேரிடும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், சட்டவிரோதமாக மண் அள்ளிய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற நேரிடும்' என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.கோவை மாவட்டம், ஆலாந்துறை, வெள்ளிமலை பட்டினம் உள்ளிட்ட இடங்களில், சட்டவிரோத குவாரிகளில் செம்மண் எடுக்கப்படுவதாக, சிவா என்பவர் தொடர்ந்த வழக்கை, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய, சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பகுதிகளை, கோவை மாவட்ட கலெக்டர், போலீஸ் எஸ்.பி., கனிம வளத் துறை மற்றும் வனத் துறை அதிகாரிகளுடன் சென்று, கோவை மாவட்ட சட்டப்பணிக் குழு தலைவர் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய, சிறப்பு அமர்வு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சட்டப்பணிக் குழு தலைவர் அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு, நேற்று சிறப்பு அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வனத் துறை தரப்பில் சிறப்பு பிளீடர் டி.சீனிவாசன் ஆஜராகி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை குறித்து விளக்கம் அளிக்க அவகாசம் கேட்டார்.மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் ஆஜராகி, ''அந்த அறிக்கை வாயிலாக, 40 சதவீதம் மட்டுமே வெளிவந்துள்ளது. முழுமையாக ஆய்வு செய்யும்போது, முழுமையான விபரம் தெரியவரும். மனுதாரரை தாக்கியவர்களில் ஒருவரை கூட, இதுவரை போலீசார் கைது செய்யவில்லை,'' என்றார்.இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது:இந்த அறிக்கையை பார்க்கும்போது, சட்டவிரோதமாக பெரியளவில் 10 மீட்டர் ஆழத்துக்கும் மேல் மண் எடுக்கப்பட்டுள்ளது. புகைப்பட ஆதாரங்களை பார்க்கும்போது, சுற்றுச்சூழலுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பை எப்படி ஈடுகட்ட போகிறீர்கள்?பெரும் மலைகள் காணாமல் போய் உள்ளன. சட்டவிரோதமாக மண் எடுப்பதை தடுக்க, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; இவ்விவகாரத்தில், கனிம வளத் துறை உதவி இயக்குனர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்?சட்டவிரோதமாக மண்ணை கொண்டு செல்ல வசதியாக, நீரோடை மீது பாலம் அமைத்துள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் அறிக்கையில் உள்ளன. சட்டவிரோதமாக மண் எடுத்தது யார் என தெரியவில்லை என, போலீசார் கூறுவதை, இந்த நீதிமன்றம் நம்ப வேண்டுமா? மண் எடுத்தவர்கள் யார் என்பதை, இரண்டு நாட்களில் கண்டுபிடிக்க முடியாதா?இந்த விஷயத்தில், அரசும், அதிகாரிகளும் தீவிரம் காட்டாவிட்டால், வழக்கை சி.பி.ஐ., போன்ற வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற நேரிடும்; சம்பந்தப்பட்டவர்களை 'சஸ்பெண்ட்' செய்ய உத்தரவிடவும் நேரிடும்.வனப் பகுதியில் சட்டவிரோதமாக மண் எடுப்பது குறித்து, வனத்துறை தகவல் தெரிவித்தும், கனிம வளத் துறை உதவி இயக்குனர், சம்பந்தப்பட்ட பகுதியை நேரில் ஆய்வு செய்து, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்?இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சட்டவிரோதமாக மண் எடுப்பதை தடுக்க, என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது; சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பை சரி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்படும்; வனப் பகுதியில் எவ்வளவு பரப்புக்கு சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டுள்ளது; சட்டவிரோதமாக மண் எடுக்க உடந்தையாக இருந்த அதிகாரிகளுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விபரங்களுடன் விரிவான அறிக்கையை, தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். முழுமையாக அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற நேரிடும். வழக்கின் அடுத்த விசாரணையின்போது கனிம வளத்துறை ஆணையர், கோவை மாவட்ட எஸ்.பி., மாவட்ட வன அதிகாரி ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும்.இந்த அறிக்கை அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்த பரிந்துரைகளுடன், மனுதாரர் தரப்பும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு, டிச., 6ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 28, 2024 12:53

சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது.... எந்தக்கொம்பனும் .........


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
நவ 28, 2024 09:43

நீதிமன்றங்கள் முதலிலேயே கண்டிப்புடன் செயல்பட்டிருந்தால் நாட்டில் முக்கால்வாசி குற்றங்கள் குறைந்திருக்கும். முதல் சட்டவிரோத குவாரி செயல்பட ஆரம்பிக்கும்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் எப்படி இவ்வளவு இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும்? அப்போதெல்லாம் கண்ணை மூடி சும்மா இருந்துவிட்டு இப்போது அதை எப்படி ஈடு செய்ய முடியும்? நாம் அனைவரும் வாழ்வது கொஞ்ச காலந்தான். அதற்குள் நம் சந்ததிகள் அனைவருக்கும் பொதுவான இயற்கை வளங்களை எல்லாம் அழித்து வருகிறோம். அரசாங்கம் என்று வைத்துக் கொண்டு அவர்களே இந்த கொள்ளையில் ஈடுபடுகிறார்கள். நீதிமன்றங்களும் கண்டுகொள்வதில்லை. கேள்வி கேட்பார் யாருமில்லை. அதனால்தான் இந்த அவலம்.


GMM
நவ 28, 2024 08:14

சட்ட விரோத குவாரி. மாநில நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வழக்கு சிபிஐக்கு தானே மாறவேண்டும். சிபிஐ இந்திய அரசு சட்டப்பூர்வ துறை தானே. அதன் பணி குற்ற தடுப்பு தான் . குற்றம் தடுக்க நீதிமன்றம், மாநில நிர்வாகம் அனுமதி விசாரணைக்கு முன் ஏன் தேவை. ? என்ன காரணத்திற்கு இந்த முன் அனுமதி. ? இப்படி குழப்பமான முறை இருந்தால், சிபிஐ எதற்கும் பயன்பட்டது. மக்களை ஏமாற்ற தான் உதவும்.


raja
நவ 28, 2024 07:39

திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்ட விடியல் மாடல் கூட்டம் ஆட்சிக்கு வந்ததே சட்ட விரோதம் தான் யுவர் ஆனர்....


Palanisamy T
நவ 28, 2024 07:32

நல்ல எச்சரிக்கையை நீதிமன்றம் வழங்கியுள்ளது. நீதிமன்றத்தை பாராட்டவேண்டும்.


Svs Yaadum oore
நவ 28, 2024 07:26

இந்த விடியல் ஆட்சிக்கு வந்த பிறகு மணல் கொள்ளை மலை அழிப்பு , செம்மண் கொள்ளை என்று இயற்கை அழிப்பு பல மடங்கு அதிகரிப்பு ....இது போன்ற ஆற்று மணல் கொள்ளை மனித வரலாறு காணாதது .....ஆற்று மணல் சேர பல நூறு ஆண்டுகள் ஆகும் ....அது மொத்தமும் அழித்து விட்டார்கள் ....இதன் பாதிப்பு என்ன என்று யாருக்கும் தெரியாது ....இப்படியே விட்டால் மேற்கு தொடர்ச்சி மலை காணாமல் போகும் ..தமிழ் தமிழன் தமிழன்டா .....


Svs Yaadum oore
நவ 28, 2024 07:21

கோவை மாவட்டம், ஆலாந்துறை, வெள்ளிமலை பட்டினம் உள்ளிட்ட இடங்களில், சட்டவிரோத செம்மண் குவாரி... சட்டவிரோதமாக பெரியளவில் 10 மீட்டர் ஆழத்துக்கும் மேல் மண் எடுக்கப்பட்டுள்ளதாம் ..பெரும் மலைகள் காணாமல் போய் உள்ளன. ....சட்டவிரோதமாக மண்ணை கொண்டு செல்ல வசதியாக, நீரோடை மீது பாலம் அமைத்துள்ளனராம் ....இவ்வளவு அக்கிரமம் அநியாயம் நடக்குது .....தமிழ் நாட்டில் விவசாயமே அழிந்து விடும் ...இதை கேட்க நாதி இல்லை ....இங்கு மணல் கொள்ளை நடத்தி மணல் ஜல்லி கேரளாவுக்கு ஏற்றுமதி ....இதை கேட்டால் இங்குள்ள தமிழ் பற்றாளனுங்க, தமிழ் காப்பாளர்கள் ஒன்றிய அரசு ஹிந்தி திணிப்பு என்று விஷயத்தை திசை திருப்புவானுங்க ....திராவிட கொள்ளை கூட்டம் ...


Kasimani Baskaran
நவ 28, 2024 06:22

காவல்துறை மனுதாரரை கைது செய்யாமல் விட்டு வைத்ததே அவர் செய்த பூர்வ புண்ணியதால் மட்டுமே. தாக்கியவருக்கு பாராட்டுப்பத்திரம் கூட கொடுக்க தயங்க மாட்டார்கள். தீமூகாவினரையே கூட காவலர்களாக நியமித்து இருந்தால்கூட இவ்வளவு விசுவாசம் காட்டியிருக்க மாட்டார்கள் - காவல்த்துறை அவ்வளவு சிறப்பாக செய்திருக்கிறது என்று நீதிமன்றம் பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது...


Mani . V
நவ 28, 2024 05:39

சி.பி.ஐ.,க்கு மாற்றி? சட்ட விரோத குவாரி, திருட்டை தடுக்க முடியாதுதானே?


Palanisamy Sekar
நவ 28, 2024 05:31

இப்படியெல்லாம் நீங்கள் செய்வீர்கள் என்றுதான் சட்டவிரோதமாக மண்ணெடுத்து கிடைத்த பணத்தையெல்லாம் பெரிய குடும்பத்துக்கு செல்ல ஏதுவாக ஆட்சிக்கு வந்த உடனே சிபிஐ தமிழகத்தில் செயல்பட அனுமதி இல்லை என்று தீர்மானமே போட்டோமே. ஹஹஹஹா எங்ககிட்டயா உங்க பாட்சா பலிக்காதுங்க. பெரிய பெரிய மலையெல்லாம் காணாமல் போய்விட்டன. கூப்பாடு போடாத நாளே இல்லை. ஆனாலும் பாருங்கள் யாருக்கோ துணிச்சல் வந்து வழக்கு போட்டு, அவருக்கு ஆயுள் கெட்டியா இல்லையான்னு போகப்போக தெரியுமுங்க. கிட்டத்தட்ட லட்சம் கோடிக்கும் மேலே சன்பாதித்துவிட்டார்கள். அப்படிப்பட்ட பணத்தை வைத்துதான் இதுவரை தேர்தலில் ஜெயித்தும் வந்திருக்காங்க. அடுத்த தேர்தலை நேர்கொள்ள இந்த மாதிரியான பணம்தான் கைகொடுக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருக்காங்க. படிக்காத கும்பல்கள் வெட்டுகுத்துக்கு அஞ்சாத கும்பல்கள் கொலைக்கு கூட சர்வ சாதாரணமாக செய்கின்ற கும்பல்களை போலீஸ் தரப்பே கூட அஞ்சுகின்ற சூழலில் நீதியரசர் விடுக்கும் எச்சரிக்கையெல்லாம் காலில் போட்டு மிதித்து போய்க்கொண்டே இருப்பார்கள். ஆட்சியாளர்கள் பக்கபலமாக இருக்கும்வரை சிபிபிபிஐ எல்லாம் ஒண்ணும் பீப் பீப் பீப் ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை