உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அவதூறு வழக்கில் கோர்ட்டில் இ.பி.எஸ்., ஆஜர்: விசாரணை ஒத்திவைப்பு

அவதூறு வழக்கில் கோர்ட்டில் இ.பி.எஸ்., ஆஜர்: விசாரணை ஒத்திவைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தயாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்காக, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று (மே 14) அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., ஆஜர் ஆனார். இதையடுத்து, வழக்கு மீதான விசாரணை ஜூன் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. லோக்சபா தேர்தலில், தி.மு.க., சார்பில், மீண்டும் மத்திய சென்னை வேட்பாளராக தயாநிதி போட்டியிட்டார். அவர் தற்போதும், அந்த தொகுதி எம்.பி.,யாக உள்ளார். சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., மீது, அவர் அவதுாறு வழக்கு தொடர்ந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jxnwf8mz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0‛‛ பிரசாரத்தில் என் தொகுதி மேம்பாட்டு நிதியில், 75 சவீத தொகையை நான் செலவு செய்யவில்லை. நலத்திட்டப் பணிகளை செய்யவில்லை என்று, கூறியுள்ளார். இது அப்பட்டமான பொய். வேண்டுமென்றே, என் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், அவதுாறு பரப்பும் வகையில் இ.பி.எஸ்., பேசியுள்ளார்'' என தயாநிதி குற்றம் சாட்டியிருந்தார்.

ஒத்திவைப்பு

இந்த வழக்கின் விசாரணைக்கு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று (மே 14) அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., ஆஜர் ஆனார். இதையடுத்து வழக்கு மீதான விசாரணை ஜூன் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஸ்ரீநிதி
மே 14, 2024 14:19

பலே.. பலே... நீதிமன்றத்துக்கு வந்தாலே வாய்தா... 2047 க்குள்ளாற நல்லா விசாரிச்சு தீர்ப்பு வழங்கி, நாலு சாட்சி பல்டி அடிச்சு.. வெளங்கிடும்.


ஆரூர் ரங்
மே 14, 2024 11:27

323 திருட்டு லைன் புகழுக்கு களங்கம் விளைவிக்கலாமா? அந்த பஞ்சாயத்தை சூனா பானா கலைத்த கஷ்டம் உங்களுக்குத் தெரியுமா? பாவம்.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ