உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சி தான்

தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சி தான்

தமிழகத்தில், தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் தலா 30 சதவீத ஓட்டுகளை வைத்துள்ளன. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க., வலுவான கூட்டணி அமைத்து போட்டியிட்டும் 37 சதவீத ஓட்டுகளைத்தான் பெற்றது. 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி நடத்தியதால் ஏற்பட்ட அதிருப்தியுடன், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அ.தி.மு.க., 33 சதவீத ஓட்டுகளை பெற்றது. தி.மு.க.,வுக்கு இருந்தது போன்ற வலுவான கூட்டணியை, அ.தி.மு.க.,வும் கட்டமைத்திருந்தால் முடிவுகளே கூட மாறிப் போய் இருக்கலாம். வி.சி., போன்ற வலுவான கட்சிகளை கூட்டணியில் பெற்றிருந்ததாலேயே வெற்றி பெற முடிந்தது. இனி, ஆட்சியில் பங்கு கொடுப்பதாக ஒப்புக் கொண்டால் மட்டுமே, பெரிய கட்சிகள் ஆட்சிக்கு வர முடியும். அதாவது, அடுத்து தமிழகத்தில் யார் ஆட்சி அமைத்தாலும், அது கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்கும். அதை நோக்கிய அரசியல் தான் நடக்கிறது. - ஆதவ் அர்ஜுனா துணை பொதுச்செயலர், விடுதலை சிறுத்தைகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Rajarajan
செப் 23, 2024 03:33

நாட்டில் சிறுத்தைகள் நடமாட்டம் ஆபத்தாச்சே.


Indian
செப் 23, 2024 11:27

வெறி நாய் களிடமிருந்து ஆடுகளை பாதுகாக்க...