உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏ.டி.எம்., கட்டணம் உயர்வுக்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு!

ஏ.டி.எம்., கட்டணம் உயர்வுக்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க, கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.அவரது அறிக்கை: மத்திய அரசு அனைவரும் வங்கிக் கணக்குகளை திறக்க வலியுறுத்தியது. பின்னர் பணமதிப்பிழப்பு நடவடிக்கை வந்தது. டிஜிட்டல் இந்தியாவை முன்னிலைப்படுத்தியது. அதைத் தொடர்ந்து என்ன நடந்தது? டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான கட்டணம், ரிசர்வ் வங்கி மாத வரம்பிற்கு மேல் ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுப்பதற்கு ரூ. 23 வரை வசூலிக்க அனுமதித்துள்ளது. ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க கூடுதல் கட்டணம் வசூலிப்பது மக்கள் ஒரே நேரத்தில் தேவைக்கு அதிகமாக பணம் எடுக்கும் நிலை உருவாகும். ஏற்கனவே 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் தரப்படாமல் உள்ளது. ஏ.டி.எம்., கட்டண உயர்வால் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு மேலும் சுமை ஏற்படும். இது டிஜிட்டல் மயமாக்கல் அல்ல. ஏழைகளுக்கு கஷ்டத்தை கொடுக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 52 )

XYZ JALRA
மார் 30, 2025 22:16

ஸ்டாலின் சார் உங்களுடைய இந்த பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது.


Indian
ஏப் 02, 2025 16:03

அதை நீ 2026 தேர்தல் முடிவில் பாரு ? யார் வெற்றி பெறுவார் என தெரியும்


Barakat Ali
மார் 30, 2025 21:31

மக்களை வாட்டி வதைப்பதில்லையா திமுக ????


Bhakt
மார் 30, 2025 18:54

ஓங்கோல் நைனாவுக்கு உகாதிலு வாழ்த்துகலு


என்றும் இந்தியன்
மார் 30, 2025 18:19

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.???ஏன்??? அவர் முஸ்லீம் என்பதால் அப்படித்தானே... யுகாதி திருநாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.???ஏன்??? அவர் ஓங்கோல் தெலுங்கு என்பதால் அப்படித்தானே...???ஆனால் இந்து பண்டிகைக்கு வாழ்த்து கூறாது இந்த வாய் ஏனென்றால் ஹிந்து செகுலர் டோலெராண்டாக இருப்பதால்


என்றும் இந்தியன்
மார் 30, 2025 18:04

திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு என்று ஏன் உங்களுக்கு நீங்களே ISO 9001 பட்டம் கொடுத்துக்கொள்கிறீர்கள் . 5தடவை இருந்தது இப்போது 10 தடவை ATM ல் பணம் எடுத்துக்கொள்ளமுடியும் 11வது தடவை பணம் எடுத்துக்கொண்டால் மட்டும் தான் ரூ 25 கட்டணம் வசூலிக்கப்படும்.இந்த சிறிய சங்கதி கூட தெரியதா உங்களுக்கு??? வாழ்வின் நெளிவு சுளிவு கூடத்தெரியாத நீங்கள் எல்லாம் ஒரு தலைவர் பதவியில்???ஆகவே தான் நீங்க ஆளும் டாஸ்மாக்கினாடு நாடு இவ்வளவு நாசமான நிலையில் இருக்கின்றது


theruvasagan
மார் 30, 2025 17:40

அதாவது 100நாள் வேலை திட்டத்தில் சம்பளத்தை ரொக்கமா குடுக்காம வங்கி கணக்குல நேரடியா போட்டால் கட்சிக்காரன் கமிஷன் கட்டிங்குக்கு வாய்ப்பில்லை. அதனாலதான் மக்கள் மீது இம்புட்டு கரிசனம்.


visu
மார் 30, 2025 16:48

இது ஒரு தவறான செய்தி .மாதம் 5 முறை ATM ல் இலவசமா பணம் எடுக்கலாம் 6 வது முறை எடுக்க கட்டணம் பல ஆண்டுகளாக உள்ளது இதை 2 ரூபாய் ஏற்றியுள்ளார்கள் இதைத்தான் இப்படி ஊதி பெரிதாக்க முயற்சிக்கிறார்கள் .இப்ப தமிழ்நாட்டில் வீட்டுவரி பத்திரப்பதிவு கட்டணம் மின் கட்டணம் தண்ணீர் வரி எல்லாம் பலமடங்கு உயிர்தப் பட்டுள்ளதே இதெல்லாம் ஏழைகளை பாதிக்காதா


Natarajan Ramanathan
மார் 30, 2025 16:41

கக்கூஸில்கூட ஊழல் செய்யும் கேவலமான ட்ராவிஷ மாடல் அரசுக்கு இந்தமாதிரி எந்த கோரிக்கையும் வைக்க அருகதை இல்லை.


RAAJ68
மார் 30, 2025 16:39

உழைக்கும் வர்க்கம் ஏழை தொழிலாளிகளிடம் இருந்து பாட்டிலுக்கு 20 ரூபாய் பிடுங்குவது ஒரு கடைக்கு தினமும் 60 ஆயிரம் ரூபாய் வசூல் செய்கிறீர்கள் இது எல்லாம் ஏழைகள் பணம் இல்லையா ? சொத்து வரி பத்து மடங்கு உயர்வு மின்சார கட்டணம் 10 மடங்கு உயர்வு பதிவுத்துறையில் பல மடங்கு கட்டணம் உயர்வு. இவை எல்லாவற்றையும் உயர்த்தும்போது ஏழைகள் ஞாபகம் வரவில்லையா. மக்கள் பணத்தில் அப்பாவுக்கு கலைஞர் அறிவாலயம் கலைஞர் நூலகம் எல்லாவற்றிற்கும் 500 கோடிகள் எழுநூறு கோடிகள் செலவு செய்கிறீர்கள். அப்போது .ஞாபகம் வரவில்லையா ஏழைகளை பற்றிRAAJ


karupanasamy
மார் 30, 2025 16:37

அதெல்லாம் சரிதான் எல்லோருக்கும் எல்லாமே கொளகாயின் படி அடுத்த திமுக தலைவர் ஆஆஆ ராசா அடுத்த முரசொலி அறக்கட்டளை தலைவர் காட்பாடி துறை முருகன் என்று அறிவிக்கும் நாள் எந்நாளோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை