மேலும் செய்திகள்
ஊர்க்காவல் படையில் சேர அழைப்பு
18-Oct-2024
ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்
13-Nov-2024
சென்னை: ஊர்க்காவல் படையில் பணியாற்றுவோர் இறந்தால், அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகையை, 1 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ஊர்க்காவல் படையில் பணியாற்றுவோர் இறந்தால், அவர்கள் குடும்பத்திற்கு, தமிழ்நாடு ஊர்க்காவல் படை நலன் மற்றும் கருணை கொடை நிதியில் இருந்து, 15,000 ரூபாய், காயமடைந்தோருக்கு, 10,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்தொகையானது முறையே, 1 லட்சம், 50,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என, கடந்த ஜூன் 29ல், சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.அதன்படி தொகையை உயர்த்தி வழங்க, அரசாணை வெளியிடும்படி, அரசுக்கு டி.ஜி.பி., கருத்துரு அனுப்பினார். அதை பரிசீலனை செய்த அரசு, முதல்வர் அறிவித்தபடி, தொகையை உயர்த்தி வழங்க, அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.தற்போது ஊர்க்காவல் படையில், 15,000 பேர் உள்ளனர். அவர்களிடம் கருணை கொடை நிதிக்காக, மாதம் 1 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இழப்பீடு தொகை உயர்த்தப்பட்டு உள்ளதால், ஊர்க்காவல் படையினரிடம் பிடித்தம் செய்யப்படும் தொகை, இனி, மாதம், 10 ரூபாயாக இருக்கும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதற்கான அரசாணையை, தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ளார்.
18-Oct-2024
13-Nov-2024