உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாநில அரசை தண்டித்து இந்தியா வளர முடியாது: முதல்வர் ஸ்டாலின்

மாநில அரசை தண்டித்து இந்தியா வளர முடியாது: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மாநில அரசுகளைத் தண்டிப்பதன் வழியாக இந்தியா வளர்ச்சி பெற முடியாது. 8 ஆண்டுகளுக்கு முன்பே ஜிஎஸ்டி வரியை குறைத்து இருக்கலாம்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: ஜிஎஸ்டி வரிக்குறைப்பாலும் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை உயர்த்தியதாலும் இந்தியர்கள் 2.5 லட்சம் கோடி ரூபாயைச் சேமிக்கலாம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இதைத்தானே தொடக்கத்தில் இருந்தே எதிர்க்கட்சிகளான நாங்கள் வலியுறுத்தி வந்தோம்? 8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், இந்தியக் குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை எப்போதோ சேமித்திருக்குமே?மேலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரிக்குறைப்பில் சரிபாதி அளவு மாநில அரசுகளின் பங்கிலிருந்துதான் செய்யப்படுகிறது. இந்த உண்மையை மத்திய அரசு மறைப்பதாலும் பாராட்ட மறுப்பதாலும் இதனைச் சுட்டிக்காட்ட வேண்டியது எனது கடமையாகிறது. மற்றொரு புறம், மத்திய பாஜ அரசு மாநிலங்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய நிதியைத் தர மறுத்து வருகிறது.ஹிந்தித் திணிப்பை ஏற்க மறுக்கும் ஒரே காரணத்துக்காக, ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதி மறுக்கப்படுகிறது. இந்த அநீதி எப்போது முடிவுக்கு வரும்? தங்கள் உரிமைகளைப் பாதுகாத்து, தம் மக்களுக்காக முன்நிற்கும் மாநில அரசுகளைத் தண்டிப்பதன் வழியாக இந்தியா வளர்ச்சி பெற முடியாது.கூட்டாட்சிக் கருத்தியலுக்கு மதிப்பளியுங்கள், உரிய நிதியை விடுவியுங்கள், மக்களுக்கு நியாயமாகச் சேர வேண்டியதைத் தந்து அவர்களைப் பயனடைய விடுங்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆலோசனை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் லோக்சபா, ராஜ்ய சபா திமுக எம்பி.,க்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பணிகளை திமுக தீவிரப்படுத்தி உள்ளது. ஒவ்வொரு திமுக எம்பிக்கும் 3 முதல் 4 தொகுதிகள் வரை பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு உள்ளது. கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:வாரத்தில் 4 நாட்கள் தொகுதியில் எம்எல்ஏக்கள் தங்கி இருந்து பணி செய்ய வேண்டும். தங்கள் தொகுதிக்கு உட்பட இடத்தில் நடக்கும அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் மாவட்ட செயலாளர்களுடன் எம்எல்ஏக்கள் இணைந்து பணி செய்ய வேண்டும். விடுப்பட்ட வாக்காளர்களை கண்டறிய வேண்டும்.தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து எம்எல்ஏக்கள் ஆய்வு செய்ய வேண்டும். எம்எல்ஏக்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 62 )

V.Mohan
செப் 26, 2025 14:54

கலைஞர் கல்லூரி படிப்பு படிக்காதவராக இருந்தாலும், பட்டறிவும், பொது அறிவும் நிறைந்து விளங்கினார். பேச்சுத்திறனும், தமிழ் மொழி அறிவும் சிறப்பாகவும் இருந்தது. எந்த விஷயத்திலும் அவர்முழுவதும் தெரிந்து கொண்டு தனது சொந்த புரிதலில் உள்ள கருத்து மற்றும் நிலைப்பாட்டையும் கொண்டிருந்தார் தமிழ் ஈழ விஷயத்தில் தவறாக இருந்தாலும் . திருவாளர். ஸ்டாலின் அவருக்கு நேர் எதிர். தமிழ் மொழி அறிவோ, பேச்சுத்திறனோ என்ற எதுவும் இல்லை. பட்டறிவும் பொது அறிவும் சந்தேகத்துக்கிடமானது. யாரோ சம்பந்தமற்ற திராவிடர் கழக "" அறிவாளி"" எழுதிக்கொடுக்கும் முன் பின தொடர்ச்சியற்ற பேச்சுரைகளை, தப்புத்தப்பாக படித்து உரையாற்றுவதாக பாவலா காட்டுகிறார். ஜி.எஸ்.டி. குறைப்பு பற்றி தமிழக நிதி அமைச்சர் பேசிய பேச்சுக்களை ஆய்வுக்கு உட்படுத்தினால் முதலமைச்சர் உண்மையை அறியலாம். உங்களிடம் ஜி.எஸ்.டி பற்றிய போதுமான புரிதல். இல்லை மற்றும் தமிழ்நாட்டு ஆட்சி பற்றி இவரது தற்பெருமை சகிக்கவில்லை. . தமிழநாடு வளர இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களும் உதவுகின்றன என்பதே புரியாமல் இருக்கும் இவர் எப்படி நல்லாட்சி தர முடியும்???? பேசாமல் காங்கிரஸூடன் திமுகவை இணைத்து விட்டீரென்றால் மக்களுக்கு கன்பியூஷன் குறைந்துவிடும்


M Ramachandran
செப் 24, 2025 22:53

திருந்து. திருந்தாவிடில் திருத்த படுவாய்.


சந்திரன்
செப் 24, 2025 08:20

நாராயணா இந்த கொசுவை ஏதாச்சும் செய் ஆண்டவா


panneer selvam
செப் 23, 2025 22:37

Last four years , your minister had attended GST meeting but at that time he did not complaint . In fact your finance minister Thangam Thenarasu was against GST reduction since it brings losses to state exchequer . So Stalin ji , do not talk without knowing the topic


vbs manian
செப் 23, 2025 21:00

வேறு எந்த முதல்வரும் இது போன்று புலம்பவில்லை. . அமைதியாக பணி செய்கிறார்கள்.


கண்ணா
செப் 23, 2025 20:43

துண்டு சீட்டு முதல்வரே காங்கிரஸ் கிட்டே போய் கேட்கவும். அவர்கள் ஆட்சியில் எத்தனை வரி விகிதம் விதித்தார்கள் என்று .


ManiK
செப் 23, 2025 20:24

வெளிநாட்டு டோப்பாக்கு ஜிஎஸ்டி அதிகமாக ஆக்கிடாயங்களோ?...ஒரே பொலம்பலா இருக்கே!!


GMM
செப் 23, 2025 18:50

அரசியல் வேறு. அரசியல் அமைப்பு வேறு. மத்திய அரசு தாய் போல். மாநிலங்கள் குழந்தை போல் சாசனம் வடிவமைக்க பட்டது. திராவிடம் பங்காளி போல் அறிக்கை விட்டு அலுத்து வருகிறது. காங்கிரஸ் அன்னியர் வளர்ப்பு தாய். அக்கறை இருக்காது. பிஜேபி போன்ற கட்சிகள் பெற்ற தாய் போல். அனைத்து மாநிலங்களும் வளர வேண்டும் என்று எண்ணுகிறது. 3 மொழி கொள்கையில் 2 தேசிய மொழி. 1 ஆங்கிலம். திராவிடம் ஒடுக்குவது ஒடுக்கப்பட்ட ஏழை கிராம நகராட்சி பள்ளி மாணவர்கள் மட்டும் தான். தமிழக வளர்ச்சிக்கு முன்னோர்கள் காரணம்.


VENKATASUBRAMANIAN
செப் 23, 2025 18:46

திருட்டு கும்பல். இவர்கள்தான் ஜிஎஸ்டி அதிகம் என்று கூறினார்கள்


venugopal s
செப் 23, 2025 18:41

செவிடன் காதில் ஊதிய சங்கு தான், இருந்தாலும் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி பெறும்! வாழ்த்துகள்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை