பயங்கரவாதிகள் ஒழிப்பில் இந்தியா முன்னுதாரணம்
தமிழகத்தில் மின்சாரம் தேவைக்கும் அதிகமாக உற்பத்தி ஆகிறது என்கின்றனர்; ஆனால், மின்தடை உள்ளது. இரு நாட்களுக்கு முன், என் வீட்டிலேயே மூன்று மணி நேரம் மின்சாரம் இல்லை. பயங்கரவாதிகளை ஒழிப்பதில், ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இந்தியா உள்ளது. சாமானிய மக்களை பாதிக்கும் பயங்கரவாதத்தை, ஜனநாயக முறைப்படி ஒழிக்கும் பணியில் முன்னோடியாக பிரதமர் மோடி திகழ்கிறார். இப்படிப்பட்ட ஒரு பிரதமரைத்தான், தமிழகத்தில் இருக்கும் சிலர் விமர்சிக்கின்றனர்; இது கண்டிக்கத்தக்கது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு 10 மாதங்களே உள்ளன. ஒவ்வொரு அமைச்சரின் பிரச்னையையும் தீர்ப்பதற்கே, 10 மாதங்கள் சரியாகி விடும். மோடி அரசில் ஒரு அமைச்சர் மீது கூட ஊழல் குற்றச்சாட்டு இல்லை. ராணுவ தளவாடங்கள் வாங்கப்பட்டதால், இன்று நாம் எதிரியை பலமாக வீழ்த்தி வருகிறோம்.-தமிழிசை, மூத்த தலைவர், தமிழக பா.ஜ.,