உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ‛இண்டியா கூட்டம்: டில்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

‛இண்டியா கூட்டம்: டில்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின் டில்லி புறப்பட்டு சென்றார்.முதல்வர் அளித்த பேட்டி: தி.மு.க., கூட்டணி வெற்றி வரலாற்று சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது. இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் காக்க, அரசியல் செயல்பாடுகளை தொடர்ந்து தி.மு.க., முன்னெடுக்கும். இந்த வெற்றியை, 50 ஆண்டு காலம் தி.மு.க.,வை கட்டிக்காத்த கருணாநிதிக்கு காணிக்கையாக்குகிறேன். பிரதமர் பதவி குறித்து, ஏற்கனவே கருணாநிதி சொன்னது போல், என் உயரம் எனக்கு தெரியும். தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவந்த பின், பிரதமர் கருத்து குறித்து பேசலாம்.

கருத்துக்கணிப்பு

பிரதமர் மோடியின் எதிர்ப்பு அலை, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருக்கிறது. தமிழகத்தில் முழு அளவில் எதிர்ப்பு இருக்கிறது என்பதற்கு, தேர்தல் வெற்றி ஒரு எடுத்துக்காட்டு. ஒடிசாவில் தமிழர்களை கேவலப்படுத்தி, பிரதமர் மோடி பேசினார். வெறுப்பு பிரசாரத்திற்கு எதிராக, மக்கள் ஓட்டு அளித்துள்ளனர். இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் டில்லியில் இன்று கூடுகின்றனர். நானும் அக்கூட்டத்திற்கு செல்கிறேன். கருத்துக்கணிப்பு என்ற பெயரில், உளவியல் ரீதியான தாக்குதலை பா.ஜ., தொடுத்தது. அதை இண்டியா கூட்டணி தகர்த்தெறிந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Vijay D Ratnam
ஜூன் 05, 2024 19:28

துர்காம்மா விடம் சொன்னா வீட்டிலேயே ஹைஜீனிக்கா சூடா பகோடா போட்டு தேங்காய் சட்னியோட தருவங்களே. இதுக்காக டெல்லி போவோனுமா தலைவரே. அவனுங்க ஹிந்திலேயும் இங்கிலீஷிலேயும் பேசுறாய்ங்க. எவ்ளோ நேரம்தான் மோட்டு வளையத்தை பாத்துக்கிட்டே இருப்பீங்க. போரடிக்காது. சரி போயி தம்படிக்கு பிரயோஜனம் இருக்கான்னா அதுவும் இல்லே.


Bharathi
ஜூன் 05, 2024 12:55

Poyee... Onnum puriyaporadhilla


Ramesh Sargam
ஜூன் 05, 2024 12:41

"தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்". தர்மம் - பாஜக மற்றும் அதன் கூட்டணியினர். சூது - திமுக மற்றும் அதன் கூட்டணியினர்.


Mani . V
ஜூன் 05, 2024 10:03

எங்க சின்ன தளபதியை பிரதமர் ஆக முன்மொழிகிறேன்.


GMM
ஜூன் 05, 2024 08:57

காங்கிரஸ் போதிய பலம் பெற்று விட்டது. இனி அழையாத விருந்தாளியாக தான் திமுக செல்ல வேண்டும். ஜனாதன, இந்தி, நீட்... எதிர்ப்பு தடங்கல் ஏற்படுத்தும். ராகுல் இருந்தால் மட்டும் செல்லவும். இனி திமுக, மம்தாவிற்கு சோதனை காலம் கடுமையாக இருக்கும். முன்பு போல் வழக்கு மூலம் விரும்பும் உத்தரவு பெற முடியாது.


Jayaraman Sekar
ஜூன் 05, 2024 12:30

காங்கிரஸ் போதிய பலம் பெற்று விட்டது. 99 போதிய பலமா??


Barakat Ali
ஜூன் 05, 2024 07:18

தமிழகத்தைப் பொறுத்தவரை தொகுதிப்பணி செய்யாதவர்கள், எம் பி நிதியை மக்களுக்காகச் செலவழிக்காதவர்கள் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர் ..... இதன்மூலம் மக்கள்பணி செய்யாவிட்டாலும் ஒட்டுக்குப்பணம் கொடுத்தால் வெற்றிபெறலாம் என்பது தமிழக வாக்காளர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது .....


sankar
ஜூன் 05, 2024 06:22

மறுபடியும் கேன்டீனில் வேலை


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி