உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிரம்ப் வரி விதிப்பால் இந்தியா வலிமை பெறும்: சத்குரு பேட்டி

டிரம்ப் வரி விதிப்பால் இந்தியா வலிமை பெறும்: சத்குரு பேட்டி

கோவை: ''அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள 50 சதவீத வரி, இந்தியாவை சவால்களை எதிர்கொள்ளும் வலுவான நாடாக மாற்றும்,'' என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்தார். கோவை ஈஷா அறக்கட்டளை யோக மைய நிறுவனர் சத்குருவுக்கு, சமீபத்தில் சவாலான இரண்டு மூளை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. இருப்பினும், இமயமலையில் உள்ள கைலாயத்துக்கு பைக்கில் 17 நாட்கள் யாத்திரை மேற்கொண்டார். இப்பயணத்தை முடித்து, டில்லியில் இருந்து நேற்று மாலை விமானத்தில் கோவை திரும்பினார். ஈஷா யோக மைய பக்தர்கள் வரவேற்றனர்.

யோகாவுக்கு சக்தி உண்டு

விமான நிலையத்தில், சத்குரு நிருபர்களிடம் கூறியதாவது: மூளையில் இரண்டு முறை ஆபரேஷன் செய்திருந்ததால், இரு சக்கர வாகனத்தில் பயணிக்கக் கூடாது என மருத்துவர்கள் கூறியிருந்தனர். மனித மூளைக்கு ஆற்றல் உண்டு; அந்த சக்தி யோகாவுக்கு உண்டு என்பதை நிரூபிக்க இப்பயணம் உதவியது. முடியவே முடியாது என்பதை முடிக்கும் சக்தி யோகாவுக்கு உண்டு என்பதை உணர முடிந்தது. எவ்வித சிரமமும் இல்லாமல், எளிதாக சென்று வந்து விட்டேன். எனது கைலாய யாத்திரை, வாழ்க்கையில் ஒரு அதிசயம் அல்ல; வாழ்க்கையே ஒரு அதிசயம் என்பதை நிரூபிக்கிறது. அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்திருந்தாலும், அது தவிர்க்க முடியாதது. அதற்காக, நம்முடைய மதிப்பை இழந்து நடந்துகொள்ள முடியாது. ஒரு சவால் நம் முன் வந்தால், அதை எதிர்கொள்ள, உறுதியான நாடு சரியான, வலிமையான நாடு என்பதை காட்ட, இது ஒரு வாய்ப்பாக உள்ளது. பாதிப்பு இருந்தாலும், எதிர்கொள்ளும் சக்தியும், வலிமையும் நமக்கு வரும். தடைகளை கடப்போம் இந்தியாவின் உறவு முற்றிலும் முறிந்து விட்டதாக சொல்ல முடியாது. பல்வேறு வகைகளில் கலாசாரம், மக்கள், உறவுகளால் அமெரிக்காவுடன் இணைந்து உள்ளோம். அவற்றை எளிதாக விட்டு விட முடியாது. அரசியல் ரீதியாகவும் நீண்டகால தொடர்பில் அமெரிக்கா இருந்து வருகிறது. உலகிலேயே 500 சிறப்பு நிறுவனங்கள் உள்ள அமெரிக்காவில், 50 நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இந்தியர்கள் உள்ளனர். எல்லா சமயங்களிலும் எல்லாம் நன்றாக நடக்கும் என எதிர்பார்க்க முடியாது. அதில், இதுவும் ஒன்று. தடைகளை கடந்து செல்வோம். இவ்வாறு, சத்குரு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

viki raman
ஆக 30, 2025 14:44

jakki yoga la ellam saraiya poidum. Adhu varai kum thiruppur workers ivar Asiramathula freeya thangi sapidalam.


Barakat Ali
ஆக 30, 2025 13:03

யாரு வேணும்னாலும் எதை வேணும்னாலும் பேசலாம் ன்னு ஆயிப்போச்சு .....


அப்பாவி
ஆக 30, 2025 10:52

அமெரிக்காவுக்கு இருக்கும் கடனை அடைக்க ஒரு டிரில்லியன் குடுங்களேன்.


ஆரூர் ரங்
ஆக 30, 2025 11:22

டால‌ர் பிரிண்டிங் பிரஸ் மட்டுமே போதும். எல்லாக் கடன்களையும் அடைத்து விடலாம்.


Raja k
ஆக 30, 2025 09:20

அடுத்த பிரதமர் வாய்ப்பு உங்களுக்குதான் தராங்கலாம்


Pandi Muni
ஆக 30, 2025 08:28

தமிழ்நாட்டிற்கு ஒரு சுடாலின் அமெரிக்காவிற்கு ஒரு டிரம்ப். ரெண்டுமே இனி உருப்படாமல்தான் போகும்


Natarajan Ramanathan
ஆக 30, 2025 08:25

கைலாய யாத்திரை வாழ்க்கையில் ஒரு அதிசயம் அல்ல வாழ்க்கையே ஒரு அதிசயம்தான். ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் என்பது இதுதான்.


மண்ணாந்தை
ஆக 30, 2025 08:06

மனுஷனுக்கு என்ன வேணும். சுவாசிக்க காற்று. ஒருத்தர் தங்க 100 சதுர அடி ரெஸ்ட் ரூம் வசதியுடன் இடம். உடுத்த ஐந்தாறு செட் டிரஸ். (முடிந்தவரை iron free clothings) காலைக்கு 3 இட்லி ஒரு வடை ஒரு காபி, மதியத்துக்கு ஒரு சப்பாத்தி, சாதம், சாம்பார், பொறியல், தயிர் மாலை சிறிது சுண்டல், டீ இரவுக்கு கஞ்சி. இது இருந்தால் போதும். மிஞ்சிய பணம் ஒரு ரூபாயோ அல்லது பல கோடியோ அதை வைத்து விளையாடுங்கள். சாதிக்காரன், பணக்காரன், முதலாளி, சாமியார் endru யாரையும் நம்பாதீர்கள்.


KRISHNA
ஆக 30, 2025 11:56

ஞானிகள், நல்லவர்கள் யாரையும் நம்பாதீர்கள் மண்ணாந்தை போன்ற மாமேதைகளை மட்டும் நம்புங்கள். உருபடுவீர்கள்.


சுந்தர்
ஆக 30, 2025 08:01

ட்ரம்ப் வெளில போனா எல்லாம் சரியாகிவிடும் சத்குரு. அதுவரைக்கும் நாம வேற முயற்சிகளை எடுப்போம். யோகா செய்வதின் சிறப்பை கைலாய மலைக்கு நீங்கள் இரு சக்கர வாகனத்தில் யாத்திரை சென்று வந்ததன் மூலம் காண்பித்து விட்டீர்கள். சிறப்பு.


Protests Blogger
ஆக 30, 2025 07:33

சத்குரு அமெரிக்காவுக்கு குடியேறும் முயற்சியா?


karthik
ஆக 30, 2025 08:35

அவர் அப்படி எங்க சொன்னார்?


Ms muralidaran
ஆக 30, 2025 07:04

சத்குரு னா சத்குரு தான் கோடி நமஸ்காரம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை