மேலும் செய்திகள்
இந்திய நாட்டிய விழா விண்ணப்பங்கள் வரவேற்பு
30-Nov-2024
சென்னை:தமிழக சுற்றுலா துறை சார்பில், மாமல்லபுரத்தில் ஒரு மாதம் நடக்கும், 'இந்திய நாட்டிய விழா' டிச. 22ம் தேதி துவங்குகிறது.இதுகுறித்து, சுற்றுலா துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்திற்கு வரும் சுற்றுலா பயணியரின் எண்ணிக்கையை அதிகரிக்க, ஆண்டுதோறும் மாமல்லபுரத்தில், 'இந்திய நாட்டிய விழா' நடத்தப்படுகிறது. ஒரு மாதம் நடக்கும் இந்த விழாவில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, நாட்டிய, இசை கலைஞர்கள் பங்கேற்று, பரதநாட்டியம், குச்சிப்புடி, கதகளி, ஒடிசி, மோகினியாட்டம், பொய்க்கால் குதிரை உட்பட, அவரவது மாநிலத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்துவர்.இந்த ஆண்டு நாட்டியவிழா டிச.22ம் தேதி துவங்கி, அடுத்த மாதம் இறுதி வரை நடைபெற உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
30-Nov-2024