உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் இயக்குநர் பொறுப்பேற்பு

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் இயக்குநர் பொறுப்பேற்பு

சென்னை:இந்தியன் ஆயில் நிறுவனத்தில், செயல் இயக்குநராக இருந்த சவுமித்ரா ஸ்ரீவாஸ்தவா, மார்க்கெட்டிங் இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார். இவர், 30 ஆண்டு களுக்கும் மேலாக, இந்தியன் ஆயில் நிறுவனத்தில், பணியாற்றி வருகிறார். ரூர்கேலா ஐ.ஐ.டி.,யில் சிவில் பொறியியல் பட்டம் பெற்றவர் . மும்பை எஸ்.பி., ஜெயின் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்டு ரிசர்ச் கல்லுாரியில், எம்.பி.ஏ., படிப்பை முடித்தார். துவக்கத்தில் எல்.பி.ஜி., வர்த்தகத்தில், முக்கிய வர்த்தக பணிகள் சார்ந்த துறைகளில் பணியாற்றினார். டவுன்ஸ்ட்ரீம் ஆபரேஷன், மார்க்கெட்டிங், திட்டமிடல் ஆகிய துறைகளில் ஆழ்ந்த அனுபவம் வாய்ந்தவர். அவரால், முன்னெடுக்கப்பட்ட, 'த்ருவா - ரீடெய்லில்' வியத்தகு மாற்றம் செய்யும் திட்டம், தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்குதல் உள்ளிட்ட திட்டங்கள் வெற்றி பெற்றன. இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கான, சில்லரை வர்த்தக தலைவராகவும், மேற்கு உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் விற்பனைப் பிரிவு தலைவராகவும் இருந்துள்ளார். செயல் இயக்குநராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பொறுப்பில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மார்க்கெடிங் கட்டமைப்புகளை, புதிய உயரங்களை தொடச் செய்யும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை