மேலும் செய்திகள்
மக்களை பிளவுபடுத்தி குளிர்காயும் கும்பல்
5 minutes ago
வங்கதேச துாதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
7 minutes ago
ஆதிதிராவிடர் நலத்துறை ஊழியர் போராட்டம் ஒத்திவைப்பு
8 minutes ago
சென்னை: 'பட்டா மாற்றம் என்பது நிர்வாகம் சம்பந்தப்பட்டது என, மனுதாரருக்கு கடிதம் அனுப்பிய, பொதுத் தகவல் அலுவலரின் பதில் அபத்தமானது' என, மாநில தகவல் ஆணையம் கண்டித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா, ஆயர்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவர், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், 'பட்டாவில் பெயர் மாற்றியது' தொடர்பாக தகவல் கேட்டு, கடந்த 2022ல், நெமிலி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார். மனுதாரருக்கு முழுமையான தகவல் வழங்கப்படவில்லை. எனவே, மாநில தகவல் ஆணையத்தில், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில், 2024, ஜூலை 7ம் தேதி, மாநில தகவல் ஆணையத்தில் விசாரணை நடந்தது. அதில், 'மனுதாரருக்கு, முழுமையான தகவல்களை முத்திரையுடன், பொதுத் தகவல் அலுவலர் சான்றொப்பமிட்டு, 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி பொதுத் தகவல் அலுவலர் தகவல் அளிக்காமல், தவறான நோக்கில் தகவல்கள் வழங்கியுள்ளதாக தெரிவித்து, மனுதாரர் மீண்டும் ஆணையத்தில், மனு தாக்கல் செய்தார். விசாரணைக்கு, மனுதாரர், நெமிலி தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தாரும், பொதுத் தகவல் அலுவலருமான சரஸ்வதி ஆகியோர் ஆஜராகினர். பொதுத் தகவல் அலுவலர் சரஸ்வதி கூறுகையில், ''ஆணையத்தின் உத்தரவுக் கிணங்க, 2024 செப்.,5 நாளிட்ட கடிதம் வாயிலாக மனுதாரருக்கு தகவல் வழங்கப்பட்டது,'' என்றார். இரு தரப்பினரையும் விசாரித்த பின், மாநிலத் தலைமை தகவல் ஆணையர் முகம்மது ஷகீல் அக்தர் பிறப்பித்த உத்தரவு: பொதுத் தகவல் அலுவலரின் பதில் கடிதத்தில், 'பட்டா மாற்றமானது, நிர்வாகம் சம்பந்தப்பட்ட நடவடிக்கை; தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பராமரிப்பில் உள்ள தகவல்களையே வழங்க இயலும்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் பதில், தவறானது மற்றும் அபத்தமானது. இது கண்டிக்கத்தக்கது. எனவே, செப்., 2024ல் பொறுப்பில் இருந்த, அப்போதைய பொதுத் தகவல் அலுவலர் சுரேஷ் மீது ஏன் நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது என்பதற்கான காரண விளக்கத்தை, ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், மனுதாரர் கோரிய தகவல்கள் மற்றும் நகல்கள், எந்த அலுவலகத்தில் பராமரிப்பில் உள்ளது என்பதைக் கண்டறிந்து, அவற்றை பெற்று, விரைவு தபாலில் மனுதாரருக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
5 minutes ago
7 minutes ago
8 minutes ago