90 அணைகளில் உட்கட்டமைப்பு
நீர்வளத்துறை பராமரிப்பில், 90 அணைகள் உள்ளன. இவற்றில், சேலம் - மேட்டூர்; திருப்பூர் - அமராவதி; ஈரோடு - பவானிசாகர்; கோவை - ஆழியாறு; தேனி - வைகை அணைகளில், உட்கட்டமைப்பை மேம்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக நீர்வளத்துறை வாயிலாக, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. பூங்கா, உணவகம், சிறுவர் விளையாட்டு திடல், நடைபாதை உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட உள்ளன.