உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜல்லிக்கட்டு போட்டியில் விபரீதம்; மாடு முட்டி இன்ஸ்., படுகாயம்

ஜல்லிக்கட்டு போட்டியில் விபரீதம்; மாடு முட்டி இன்ஸ்., படுகாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுக்கோட்டை:இலுப்பூர் அருகே இருந்திரப்பட்டியில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில், போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தார்.புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே இருந்திரப்பட்டியில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை, விராலிமலை தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர் மற்றும் இலுப்பூர் ஆர்.டி.ஓ., அக்பர் அலி துவங்கி வைத்தனர்.இந்த ஜல்லிக்கட்டு நடைபெற்று கொண்டிருக்கும் போது, வாடிவாசலுக்கு அழைத்து வரப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளில் ஒன்று திடீரென தாவிக்குதித்து காளை உரிமையாளர் கட்டுப்பாட்டில் இருந்து மீறி, ஆக்ரோஷமாக ஓடி, திடீரென அப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த விராலிமலை இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் என்பவரை முட்டித் தள்ளியது.இதில், இடுப்பு பகுதியில் படுகாயமடைந்த இன்ஸ்பெக்டர் சந்திரசேகரனுக்கு, எம்.எல்.ஏ., டாக்டர் விஜயபாஸ்கர் மற்றும் அங்கிருந்த ஜல்லிக்கட்டு முகாம் டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில், அதிக ரத்தம் வெளியானதால் அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை