உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டா மாறுதலில் பழைய முறை பின்பற்ற அலுவலர்கள் வலியுறுத்தல்

பட்டா மாறுதலில் பழைய முறை பின்பற்ற அலுவலர்கள் வலியுறுத்தல்

சென்னை: தமிழக வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் தலைவர் முருகையன் கூறியதாவது: ஒரு சர்வே எண்ணுக்கு உட்பட்ட முழுச் சொத்தும் கைமாறும் நிலையில், அதற்கான பட்டா பெயர் மாற்றம் செய்யும் அதிகாரம், தலைமையிடத்து துணை தாசில்தாருக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதை ரத்து செய்து, பழைய நடைமுறையின்படி, மண்டல துணை தாசில்தாருக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்.மக்களுடன் முதல்வர், உங்களை தேடி உங்கள் ஊரில், முதல்வரின் முகவரி உள்ளிட்ட திட்டங்களில் பெறப்படும் மனுக்கள் மீது தீர்வு காண, உரிய அவகாசம் அளிக்க வேண்டும். திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கி, வருவாய் துறை அலுவலர்களுக்கு, அதீத பணி நெருக்கடி ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட, 97 பணியிடங்களை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், திருநெல்வேலி கலெக்டரின் ஊழியர் விரோத நடவடிக்கைகள் குறித்து, முதல்வரிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. வருவாய் துறை அலுவலர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருநெல்வேலியில் நடந்த சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை