உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வந்தேபாரத் ரயிலுக்கு வந்த சோதனை; முறையாக பராமரிக்க வேண்டுகோள்

வந்தேபாரத் ரயிலுக்கு வந்த சோதனை; முறையாக பராமரிக்க வேண்டுகோள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விருதுநகர் : வேகத்திலும், வசதியிலும் 'பிரீமியம்' ரயிலாகத்திகழும் வந்தே பாரத் ரயில்கள் கடந்த சில நாட்களாக தொழில்நுட்பக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருகின்றன.நாடு முழுதும் முக்கிய வழித்தடங்களில் மணிக்கு 160 கி.மீ., வரை செல்லும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தெற்கு ரயில்வே சார்பில் தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் --- கோவை (8 பெட்டிகள்), கோவை --- பெங்களூரு (8), எழும்பூர் --- திருநெல்வேலி (16), எழும்பூர் --- நாகர்கோவில் (16), மதுரை --- பெங்களூரு (8) ஆகிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.ஏ.சி., பெட்டிகள், விசாலமான ஜன்னல்கள், வசதியான இருக்கைகள், அலைபேசி சார்ஜிங் வசதி, தானியங்கி கதவுகள், சி.சி.டி.வி., கவாச் தொழில்நுட்பம், பயோ கழிப்பறைகள், சென்சார் வசதி கொண்ட தண்ணீர் குழாய்கள், பயணிகளுக்கான தகவல் அமைப்பு உள்ளிட்ட வசதிகள் உள்ளன.கட்டணம் அதிகம் இருந்தாலும் விரைவான பயணம் என்பதற்காக பயணிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது. அதன் காரணமாக எழும்பூர்--- திருநெல்வேலி வந்தே பாரத் ஜன., 10 முதல் 8ல் இருந்து 16 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டது.நாட்டிலேயே 2வது அதிக துாரம் (724 கி.மீ.,) செல்லும் எழும்பூர் --- நாகர்கோவில் வந்தே பாரத் இன்று (மே 8) முதல் 20 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.கடந்த சில நாட்களாக இவ்வகை ரயில்கள் தொழில்நுட்பக் கோளாறால் தாமதமாக பயணித்தன. மே 3ல் எழும்பூர் -- நாகர்கோவில் ரயில் (20627/20628) மூன்று மணி நேரம் தாமதமாக பயணித்தது.மே 4ல் பெங்களூரு -- மதுரை ரயில் (20672) மின்சாரம் செயலிழப்பு காரணமாக ஒன்றரை மணிநேரம் நடுவழியில் நின்றது. கதவுகளை திறக்க முடியாமல் மூச்சுத்திணறலால் பயணிகள் அவதி அடைந்தனர். எழும்பூர் --- மதுரை தேஜஸ் ரயிலிலும் தானியங்கி கதவுகள் சில நேரங்களில் பழுதடைகின்றன.பயணிகள் கூறுகையில், கூடுதல் கட்டணம் வசூலித்தும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாமதமாகச் செல்வதை ஏற்க முடியாது. இந்த ரயில்களை ரயில்வே முறையாக பராமரிக்க வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Hepsi Jeba
மே 09, 2025 23:46

பத்தல பத்தல பத்தல உணவு மற்றும் அவசர மருத்துவ தேவைக்காக ஒரு தனி பெட்டி வேண்டும் 600கிமீ தூரம் 4 மணி நேரத்தில் கடக்க வேண்டும் Swiggy Zomato சேவை வேண்டும் App மூலம் உணவு ஆர்டர் செய்ய வசதி வேண்டும் கழிவறைக்கு access card முறை கொண்டு வந்தால் யார் தவறாக உபயோகிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்


Ramesh Sargam
மே 08, 2025 21:28

பயணியர்களும் கண்டதை தின்றுவிட்டு கழிவறையில் போட்டுவிடுகின்றனர். அப்புறம் கழிவறையில் அடைப்பு ஏற்பட்டு கழிவறை பயனற்றதாகிவிடுகிறது. முதலில் பயணியர்கள் திருந்தவேண்டும்.


ஆரூர் ரங்
மே 08, 2025 14:35

மாநில போக்குவரத்துத்துறையின் SETC நீண்டதூர பஸ்களில் பயணித்து பாருங்க. புகாரே சொல்ல மாட்டீங்க.


KB TRADERS Agro foods (T. Vinayagamoorthy)
மே 08, 2025 12:42

முன்பதிவில்லா ரயில்களை சென்னை டு திருச்சி மதுரை மார்க்கம் சென்னை டு தஞ்சாவூர் புதுக்கோட்டை ராமேஸ்வரம் மார்க்கம்.. சென்னை டு மயிலாடுதுறை திருவாரூர் பேராவூரணி மார்க்கம் ஆகிய பகுதிகளுக்கு பகல் நேரங்களில் ரயில்களை இயக்க. பணிவுடன் வேண்டுகிரேன் ஐயா. நன்றி.


Ethiraj
மே 08, 2025 11:28

Privatise maintenance with strict penalty clauss


மேனாகுமார்
மே 08, 2025 11:15

மேட் இன் இந்தியா. பச்சைக் கொடி ஆட்டி ஜீ துவக்கி வெச்ச முதல் நாள் ஓடும். அப்புறம் உங்க அதிருஷ்டம்.


R Hariharan
மே 08, 2025 10:19

வந்த பாரத் தேவை இல்லை. பயண கட்டணம் மிகையும் ஜாஸ்தி. 80 கிலோ மீட்டர் மேல் ஸ்பீட் இல்லை. பேருக்கு 130 என்று சொல்கிறார்கள். அதற்கு படிகளை எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட், பாஸ்ட் பஸ்சேன்ஜ்ர் போன்றவைகள் தேவை. சில இடங்களில் போதுமான ரயில் சேவை இல்லை.


Ramesh Sundram
மே 08, 2025 10:05

மதுரை டிவிசன் ரயில்வே ஊழியர்கள் அனைவரும் கம்யூனிஸ்ட் மன நிலையில் உள்ளவர்கள் இரவு 11.55 கடைசி கொடி அசைத்து பிறகு காலை 04.55 முதல் ரயிலுக்கு கொடி அசைக்க வேண்டும் மீதி நான்கு மணி நேரம் தூங்க வேண்டும் மன நிலை உள்ளவர்களை திருத்தவே முடியாது


G Mahalingam
மே 08, 2025 09:53

இப்போது அதிகாரிகள் மிரட்டி வேலை வாங்க முடியாது. அப்படி மிரட்டினால் புகார் கொடுப்பார்கள். வேலையை விட்டு நீக்கவும் முடியாது. அது போல ஆசிரியர்கள் மாணவரை அடக்க முடியாது. அதனால்தான் இப்போது தனியார்யிடம் கொடுத்து வேலை வாங்குகிறார்கள். சமூக நீதி பேசும் திமுகவும் நிறைய வேலையை தனியாரிடம் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
மே 08, 2025 09:40

இதுதான் இங்கே பிரச்னை. மக்களிடம் கொள்ளையடிப்பதற்காக வேகமாக ஆரம்பிப்பார்கள். அப்புறம் எதையும் முறையாக பராமரிக்காமல் விட்டுவிடுவார்கள். காசு அதிகமாக கொடுத்தும் கஷ்டப்பட வேண்டுமென்பது பொதுமக்களின் தலையெழுத்தா? அரசு நிர்வாகத்தை கேள்வி கேட்பார் யாருமில்லை. ஏன் அரசே வேலை செய்யாத அரசு ஊழியர்களையும் அதிகாரிகளையும் கேள்வி கேட்பதில்லை. அவர்களுக்கு எந்தவித நெருக்கடிகளும் இல்லை. வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் மாதாமாதம் சம்பளம் வந்துவிடும். அப்புறம் கிம்பளம் வேறு. மோடிஜியின் அரசு நிர்வாகம் வரவர கேவலமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.


தத்வமசி
மே 08, 2025 11:14

நீ அந்த ரயிலில் பிரயாணம் செய்ய வேண்டாம். யாருக்குத் தேவையோ அவர்கள் பயணிப்பார்கள். பத்தாயிரம் பேரில் ஓரிருவர் புகார் கொடுத்தால் அது புகார் ஆகாது. ரயிலே இல்லாமல் ரயிலை இயக்கினால் ஏன் என்று கேள்வி? வந்தே பாரத் வண்டி எங்கள் ஊரில் நிற்க வேண்டும் என்று ரயிலையே காணாத கூட்டம் கொடி தூக்குகிறது. அதே கூட்டம் குறை சொல்லித் திரிய வேண்டியது.


சமீபத்திய செய்தி