உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  லஞ்ச புகாரில் சிக்கிய இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட்

 லஞ்ச புகாரில் சிக்கிய இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளிக்கும் நெடுஞ்செழியன் என்ற கட்டு பாண்டி 45, வெளியிட்ட லஞ்ச புகார் வீடியோவையடுத்து இன்ஸ்பெக்டர் சீனிபாபு 52, ஏட்டு ஜெயராஜை 45, ராமநாதபுரம் டி.ஐ.ஜி., மணிவண்ணன் சஸ்பெண்ட் செய்தார்.நெற்குப்பை ஆத்திக்காடு நெடுஞ்செழியன் சிங்கம்புணரியில் சித்த மருத்துவம் மூலம் எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இதனால் அப்பகுதியினர் அவரை புத்துார் கட்டு பாண்டி என அழைக்கின்றனர்.முறையான கல்வி சான்று இன்றி சிகிச்சை அளிப்பதாக மருத்துவ இணை இயக்குனர் புகாரில் போலீசார் ஜனவரியில் அவரை கைது செய்து கிளினிக்கிற்கு சீல் வைத்தனர். பின் ஜாமினில் வந்தவர் தன் தோப்பில் செம்புவேல் முருகன் கோயில் கட்டி அங்கு சிகிச்சை அளித்து வந்தார். இன்ஸ்பெக்டர் சீனிபாபு மாதந்தோறும் பணம் கேட்டு தொல்லை கொடுப்பதாகவும், கொடுக்காவிட்டால் பொய் வழக்கு போடுவேன் என மிரட்டுவதாகவும் கட்டுபாண்டி வீடியோ வெளியிட்டார். இதற்கு முன்பாகவும் இன்ஸ்பெக்டராக இருந்த தயாளன் (தற்போது திருச்சியில் பணிபுரிகிறார்) பெயரை கூறி ஏட்டு ஜெயராஜ் 4 மாதங்களுக்கு முன் பணம் பெற்றதாகவும் வீடியோ வெளியிட்டிருந்தார்.இந்த வீடியோ புகாரின் உண்மை தன்மையை அறிய விசாரணைக்கு எஸ்.பி., அபிேஷக் குப்தா உத்தரவிட்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சீனிபாபு, ஏட்டு ஜெயராஜை டி.ஐ.ஜி., மணிவண்ணன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 23, 2026 21:45

ஒரு விதத்தில் இந்த ஆட்சியை பாராட்டத்தான் தோன்றுகிறது. ஏற்கனவே இருந்த விடியலப்பா ஆட்சியில், இலஞ்சம் வாங்கியவர்களிடம் இலஞ்சம் வாங்கிக்கொண்டு குறைந்த பட்ச சஸ்பெண்டு கூட இல்லாமல் இருந்தது. இப்போது சஸ்பெண்ட் என்ற பெயரில் 90 நாட்களுக்கு இலஞ்சத்துக்கு விடுமுறை கொடுக்கிறார்கள்.


K.n. Dhasarathan
ஆக 23, 2026 21:28

போலீஸ் துறையில் லஞ்சம் வாங்கினால் 3 மடங்கு தண்டனை கொடுக்க வேண்டும் இந்த சஸ்பெண்ட் எல்லாம் வேலைக்கு ஆகாது, அடுத்த வாரத்தில் பணிக்கு வந்துவிடுவார்கள், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கேஸ் முடியும் வரை சஸ்பென்ஷன் என்று சொல்லுங்கள் பார்க்கலாம். நீதி துறைதான் கடும் நடவடிக்கை எடுக்கணும், ஐயா சி.ம். நடக்குமா ?


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 23, 2026 21:25

இலஞ்சத்தை சஸ்பெண்டு செய்யவே மாட்டார்களா? ஆட்களை மட்டுமே சஸ்பெண்டு செய்கிறார்கள்.


Prem Kumar
ஆக 23, 2026 20:09

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் கொடுப்பதால் அவர்கள் லஞ்சம் வாங்குவதில் இருந்து தடுக்கப்படும் என்ற புதிய விளக்கத்தை அதி மேதாவியாக தன்னை கருதும் மாணிக்கம் தாகூர் கூறுகிறார். நமது சுதந்திர இந்தியாவில் அரசு அளித்த வாகனம் உள்பட பல சலுகைகளை பெற்று சுக வாழ்க்கை வாழ்ந்த மக்கள் பிரதிநிதிகள் லஞ்சம் வாங்கி சிறைவாசம் அனுபவித்த செய்திகளை பொது மக்களே அறிந்திருந்த போது இவருக்கு இது பற்றி தெரியாதா? மேலும் லஞ்ச ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தால் தண்டிக்கபட்ட ஒவ்வொரு உயர் அரசு அதிகாரிகளுக்கும் அரசு சார்பில் சொகுசு கார் மற்றும் பங்களா போன்ற சலுகைகளை பெற்றவர்கள் தானே. அதிக சொத்து சுகங்கள் அடையும் கனவோடும் ஆசைகளோடும் பொது வாழ்க்கைக்கு வரும் சூழ்நிலையை நாமே நாட்டில் உருவாக்கி விட்ட நிலையில் லஞ்சத்தையும் ஊழலையும் எந்த அரசாலும் ஒரு சதவிகிதம் கூட குறைக்கவோ ஒழிக்கவோ முடியாத நிலையில் ஒழிப்போம் அல்லது ஒழித்து விட்டோம் என கூறுவது வெறும் கை தட்டல் பெற பேச்சு.


Krishna
ஆக 23, 2026 20:09

If True investigate With NonPolice Officials, as Truths Will be Suppressed by Police, Sack Arrest Defame Prosecute Punish them


Perumal Pillai
ஆக 23, 2026 19:27

வீடியோவில் வந்தால் மட்டும் தான் நடவடிக்கையா ?


Rameshmoorthy
ஆக 23, 2026 19:13

We should dismiss these people else there will Not be any fear, will Gen Z demand this?


D.Ambujavalli
ஆக 23, 2026 18:46

அப்பாடா முதல்வர். ஆட்சியில். லஞ்சம். ஓடியே. போய்விட்டது இரண்டு பேரும் அடுத்த வாரமே. வேறு. ஊருக்கு. மாற்றல். பெற்று. அங்கும். ஜாம். ஜாமென்று. இதே. லஞ்சத்தை. வாங்குவார்கள் எல்லாருமா புகார். செய்து. கொண்டிருப்பார்கள்?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை