உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சர்வதேச போதைப்பொருள் கடத்தல் குருவி சிக்கியது; விமான நிலையத்தில் ரூ.23.5 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல்

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் குருவி சிக்கியது; விமான நிலையத்தில் ரூ.23.5 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.23.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச போதைப்பொருள் கடத்தல் 'குருவி'யாக செயல்பட்ட பெண் உட்பட 3 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு பெருமளவு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்படி, சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பயணிகள் சிலரது நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமாக இருந்தது. சோதனையில், ரூ.23.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dc3xgu57&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தாய்லாந்தில் இருந்து குளிர்பான பவுடர் பாக்கெட்டில் கஞ்சாவை மறைத்து கடத்தி வந்தது விசாரணையில் அம்பலம் ஆனது. இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 3 பேரையும் தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தியதில், அவர்கள் கடத்தலுக்கு 'குருவி'யாக செயல்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. கடத்தலுக்கு முக்கிய தலைவனாக உள்ளவரை சுங்கத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Ramesh Sargam
ஜன 29, 2025 20:24

குருவி சிக்கியது. பருந்து, கழுகு எங்கே?


Nagarajan D
ஜன 29, 2025 21:47

அது எப்போதும் சிக்காது... அதுகள் ஆட்சியில் அமர்ந்திருக்கும் கட்சியை சேர்ந்ததுகளாக இருக்கும் அன்று சிக்கினானானே oruvan அவனை போல ஒரு பதவியிலும் இருக்க வாய்ப்புள்ளது.


N.Purushothaman
ஜன 29, 2025 18:39

முக்கிய தலைவர் திருட்டு திராவிட அனுதாபியா இருப்பான்


Ray
ஜன 29, 2025 20:39

விமான நிலைய CISF மோடி அரசின் கையில் தானே உள்ளது இதில் எங்கே வந்தது திராவிட அனுதாபி? அப்படியிருந்தா இன்னும் பத்துமடங்கு வன்மத்தை காட்டியிருக்க மாட்டானுங்களா? எந்த காலத்திலும் மாட்டுவது குருவிகள்தான்.


N.Purushothaman
ஜன 29, 2025 18:34

அறிவாலயத்துக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை ....


Kumar Kumzi
ஜன 29, 2025 17:29

எங்கள் ஓங்கோல் விடியலின் திருட்டு திராவிஷ குருவிகளாக இருக்க கூடும்


என்றும் இந்தியன்
ஜன 29, 2025 16:53

குருவி மட்டும் தான் சிக்கும் எப்போதும் அதை ஆள்பவன் சிக்கவே மாட்டான் அவ்வளவு தான் இவர்களுக்கு சமர்த்து


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 29, 2025 16:14

ஜார்ஜ் கோட்டையில் ஒளிந்திருப்பார்கள். அங்க போனா பிடிக்கலாம்.


தமிழன்
ஜன 29, 2025 15:08

எந்த கட்சி இந்த குருவி..


Barakat Ali
ஜன 29, 2025 13:02

பெரும்பாலும் அவர்களது பெயர்கள் வெளியிடப்படுவதில்லை ....... ஏன் ????


நாஞ்சில் நாடோடி
ஜன 29, 2025 13:59

ஒரு மார்க்கமான மர்ம மனிதர்களாக இருக்கலாம் ...


Ray
ஜன 29, 2025 22:15

வெளியிட்டால் ராகுல் முன்பு ஒரு சமயம் கேட்ட கேள்வி உறுதியாகிடும் மீண்டும் வழக்கு பதவியிழப்பு நீதிமன்றம் தலையீடு இப்படீபோகும் அதனால்தான் பேர் சொல்வதற்கில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை