உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மே மாதம் சர்வதேச சைவ சித்தாந்த மாநாடு: தருமபுரம் ஆதீனம் தகவல்

மே மாதம் சர்வதேச சைவ சித்தாந்த மாநாடு: தருமபுரம் ஆதீனம் தகவல்

மயிலாடுதுறை:''தருமபுரம் ஆதீனம், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து நடத்தும் ஆறாவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு, மே 3 முதல் 5ம் தேதி வரை சென்னை காட்டாங்கொளத்துாரில் நடைபெற உள்ளது,'' என, தருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ளார்.தருமபுரம் ஆதீன திருமடத்தில், 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அளித்த பேட்டி:செந்தமிழும், சிவ நெறியும் வளர்க்கும் ஞானப்பண்ணையாக விளங்கி, சைவ சித்தாந்தத்தை உலகெங்கும் பரவ செய்யும் நோக்கோடு தருமை ஆதீனம் 26வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், 1984ம் ஆண்டு அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தை துவங்கினார்.இந்நிறுவனம் சார்பில் இதுவரை, தருமபுரம், மலேஷியா, வாரணாசி, மதுரை, சென்னை ஆகிய ஐந்து இடங்களில் மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. சென்னை முதல் கன்னியாகுமரி வரை, தருமை ஆதீன சைவ சித்தாந்த மாலை நேர கல்லுாரியில் சித்தாந்த வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.தற்போது தருமபுரம் ஆதீனம், எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து ஆறாவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு, சென்னை காட்டாங்கொளத்துாரில் மே 3, 4, 5 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது. 'சங்க இலக்கியங்கள் முதல் சமகால இலக்கியம் வரை சித்தாந்த பதிவுகள்' எனும் பொது தலைப்பின் கீழ் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.மாநாட்டில், சைவ ஆதீனங்களின் குரு மகா சன்னிதானங்கள், பிரதமர், கவர்னர்கள், முதல்வர்கள், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், உள்நாட்டு, வெளிநாட்டு அமைச்சர்கள், சிவாச்சாரியார்கள், பல்கலை பேராசிரியர்கள், சைவ சமய அறிஞர்கள், கோவில் அறங்காவலர்கள், சமய ஆர்வலர்கள் பங்கேற்க உள்ளனர்.சிங்கப்பூர், மலேஷியா, இலங்கை, லண்டன், ஜெர்மன், சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா, நைஜீரியா, மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அறிஞர்களும், ஆர்வலர்களும் பங்கேற்கின்றனர்.மாநாட்டுக்கான சிறப்பு மலர், ஆய்வாளர்களின் ஆய்வு கட்டுரைகள் அடங்கிய ஆய்வு கோவை மற்றும் 10க்கும் மேற்பட்ட நுால்கள் வெளியிடப்பட உள்ளன. முதற்கட்டமாக சிறப்பு மலர் குழு, கருத்தரங்க குழு, நுால் வெளியீட்டு குழு என, மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ray
பிப் 20, 2025 01:00

ஐயோ ஆளுநர்களா கலந்துகொள்ள போகிறார்கள் என்றுள்ளதே சிவா சிவா ஒருத்தர் இங்க கலக்குறாரு இன்னும் சிலர்னா .... என்னே ஈசனுக்கே வந்த சோதனை.


தமிழன்
பிப் 19, 2025 21:02

எவ்ளோ பெரிய தலைப்பாகை கழுத்து வலியே வராதா??? அதை எப்படி கீழே விழாமல் அணிவது??


Sidharth
பிப் 19, 2025 10:59

தென்னாடுடைய சிவனுக்கு எதுக்கு சர்வதேச மாநாடு ?


Amsi Ramesh
பிப் 19, 2025 16:36

தென்னாடுடைய சிவனேபோற்றி என்ற முதல் வரியை தெரிந்து வைத்திருக்கும் நீர், என்னாட்டவர்க்கும் இறைவா என்ற அடுத்த வரியை தெரிந்து கொள்ள வில்லையா?


Ray
பிப் 20, 2025 00:50

சிவனுக்கு தென்னமரிக்காவிலும் இந்தோனீசியாவிலும் Pluit பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட ஆலயங்கள் உண்டு


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 19, 2025 10:06

துவக்க விழாவுக்கு கட்டாயம் துணை முதல்வர் நீலகிரி எம் பி மற்றும் கி வீரமணி ஆகியோரைக் கூப்பிட்டே ஆகவேண்டும்


MUTHU
பிப் 19, 2025 09:57

ஏகன் அநேகன் என்றார் மாணிக்கவாசகர். அதாவது இறைவன் ஒருவனே. அவனே படைப்பின் பலரூப அனைத்து தோற்றமெடுக்கின்றான் என்று பொருள். இதை ஆதீனங்களும் மக்களுக்கு விளக்கமாய் சொல்லுகின்றனர். மக்கள் தான் புரிந்து கொள்ளாமல் பெரியார் போன்ற அரைகுறை சித்தாந்தவாதிகளை தலைமேல் தூக்கி கொண்டாடுகின்றனர்.


Ray
பிப் 20, 2025 00:54

WE LIVE IN A UNIVERSE THAT IS AT ONCE VAST ENOUGH TO ENCLOSE US, AND SMALL ENOUGH TO FIT IN OUR HEART. IN THE SOUL OF A MAN IS THE SOUL OF THE WORLD, THE SILENCE OF WISDOM. - PAULO COELHO - THE AUTHOR OF ALCHEMIST


Ray
பிப் 20, 2025 00:54

WE LIVE IN A UNIVERSE THAT IS AT ONCE VAST ENOUGH TO ENCLOSE US, AND SMALL ENOUGH TO FIT IN OUR HEART. IN THE SOUL OF A MAN IS THE SOUL OF THE WORLD, THE SILENCE OF WISDOM. - PAULO COELHO - THE AUTHOR OF ALCHEMIST


சமீபத்திய செய்தி