உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆதிச்சநல்லுார் அகழாய்வின் போது இரும்பின் மீது ஆர்வமில்லை தொல்லியல் அறிஞர் சத்தியமூர்த்தி பேட்டி

ஆதிச்சநல்லுார் அகழாய்வின் போது இரும்பின் மீது ஆர்வமில்லை தொல்லியல் அறிஞர் சத்தியமூர்த்தி பேட்டி

சென்னை:''ஆதிச்சநல்லுாரில் அகழாய்வு செய்த போது, அரசுக்கோ, மக்களுக்கோ, இரும்பின் மீதான ஆர்வம் இவ்வளவு தெளிவாக இல்லை,'' என, ஆதிச்சநல்லுார் அகழாய்வு இயக்குனரும், மத்திய தொல்லியல் துறையின் முன்னாள் கண்காணிப்பாளருமான சத்தியமூர்த்தி தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது: நான் பணியில் இருந்தபோது, நாட்டில் பல்வேறு பகுதிகளின் அகழாய்வுகளில் கிடைத்த இரும்பு பொருட்களில் மிகவும் பழமையானதாக, ஆதிச்சநல்லுாரில் இருந்த பொருட்கள் தெரிந்தன. அந்த அகழாய்வு முடிந்த பின், அதற்கான அறிக்கையை நான் எழுதவில்லை. நான் அகழாய்வு செய்தவற்றில், எதை ஆய்வுக்கு அனுப்பினர் என்பது தெரியாது. என்றாலும் அது, 2,900 ஆண்டுகளுக்கு முற்பட்டது என, அறிக்கையில் கூறப்பட்டது. அதேபோல், கேரள மாநிலம் மாங்காடு என்ற இடத்தில் அகழாய்வு செய்தபோது கிடைத்த இரும்பு, பொ.யு., 1000 அதாவது 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரிய வந்தது. நான் ஆதிச்சநல்லுாரில் அகழாய்வு செய்தபோது, இரும்பு குறித்து இவ்வளவு ஆர்வம் இல்லை. மத்திய அரசும் வெளிநாடுகளுக்கு மாதிரிகளை அனுப்பி சோதிக்க, செலவு செய்ய முன்வரவில்லை. ஆதிச்சநல்லுாரில் மறுபடி நடந்த அகழாய்வுகளில், இரும்பின் காலம் குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. ஆதிச்சநல்லுாரில் அகழாய்வை விரிவாக்கி, உரிய கரிமப்பொருட்களை பகுப்பாய்வு செய்தால், இரும்பின் காலம் பின்னோக்கி செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி