உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாபியா பிடியில் மாவட்டம்; காங்கிரஸ் எம்.எல்.ஏ., காட்டம்: கனிம கொள்ளையை தட்டிக்கேட்கிறார் தாரகை!

மாபியா பிடியில் மாவட்டம்; காங்கிரஸ் எம்.எல்.ஏ., காட்டம்: கனிம கொள்ளையை தட்டிக்கேட்கிறார் தாரகை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டமே மாபியா பிடியிலும், குவாரி முதலாளிகளின் பிடியிலும் இருக்கிறது என்று, காங்கிரஸ் எம்.எல்.ஏ., தாரகை குற்றம் சாட்டியுள்ளார்.கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ., தாரகை கத்பர்ட் சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது: கன்னியாகுமரி மாவட்டம் இயற்கை சூழ்ந்த ஒரு மலைப்பகுதியாக உள்ளது. இயற்கை வளங்கள் அதிக அளவு கொட்டிக் கிடக்கிறது. ஆனால் இந்த இயற்கையை அழித்தே தீருவேன் என கங்கணம் கட்டி கொண்டு சில குவாரிகாரர்கள், சிலரை உடந்தையாக வைத்துக்கொண்டு கனிமவளங்களை கேரளாவுக்கு லாரிகளில் கடத்துகிறார்கள்.

சாலைகள் சேதம்

இது எப்படி அனுமதி இல்லாமல் கடத்தி செல்கிறார்கள் என்பது கேள்வியாக உள்ளது. கனிம வளங்களை கடத்தி செல்லும் லாரி டிரைவர்கள் விளவங்கோடு தொகுதி, மார்த்தாண்டம் வழியாக செல்வதால், ரோடுகள் மிகவும் பாதிக்கப்பட்டு குண்டும் குழியாக மாறுகிறது.தினமும் விபத்துக்களும் அதிகம் நடக்கிறது. உயிர்சேதமும் ஏற்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன், இரண்டு லாரிக்காரர்கள் முந்திச்செல்ல முயன்றதால் விபத்து ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருவர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறைப்பிடிப்பேன்

கன்னியாகுமரி மாவட்டம் ஒரு மாபியா கொள்ளைக்காரர்கள் மற்றும் குவாரி முதலாளிகளிடம் சிக்கி இருக்கிறதோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. இனிமேல் அதிகம் பாரம் ஏற்றிக்கொண்டு லாரிகள், மார்த்தாண்டம் வழியே சென்றால், எனது தலைமையில் மிகப்பெரிய சாலை மறியல் போராட்டம் செய்து லாரிகளை சிறைப்பிடிப்பேன் என உறுதியாக கூறி கொள்கிறேன். உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

kulandai kannan
செப் 05, 2024 12:24

தமிழக MLA கத்பெர்ட். ஆஹா! என்ன ஓர் தூய தமிழ் பெயர்.


S R Rajesh
செப் 05, 2024 09:36

யாதும் ஊரே, பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டிய மார்த்தாண்டம் மேம்பாலம் என்ன ஆனது ? கொஞ்சம் தெரிந்தால் சொல்லுங்களேன்.


கோவிந்தராசு
செப் 05, 2024 08:40

வாழ்த்துகள்


Venkateswaran Rajaram
செப் 05, 2024 08:20

இந்த அம்மாவிற்கு வரவேண்டிய பங்கு வரவில்லை போல் தோன்றுகிறது.... என்ன ஒரு அக்கறை மக்கள் மீது திடீரென்று


Kalyanaraman
செப் 05, 2024 08:18

எல்லாம் அரசியல் ஸ்டான்ட். ஆளுங்கட்சி எம்எல்ஏவுக்கு தெரியாம எதுவும் நடக்காது. அங்கு பிஜேபி பொது மேடையில் வெளிப்படுத்தியதால் அதை எதிர்கொள்ளவே இது போன்ற கண்துடைப்பு அறிக்கையோ.


Sampath Kumar
செப் 05, 2024 08:04

நல்லது தாயீ அப்டியே செய்ங்க


Svs Yaadum oore
செப் 05, 2024 08:02

கன்னியாகுமரி மாவட்டம் ஒரு மாபியா கொள்ளைக்காரர்கள் மற்றும் குவாரி முதலாளிகளிடம் சிக்கி இருக்கிறதோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளதாம் .....இப்போதுதான் இந்த ஐயம் ஏற்பட்டதா ??....கன்யாகுமரி ஏதோ முன்னேறிய மாவட்டம் படித்த மாவட்டம் சுற்று சூழல் பாதிப்பை பொறுத்து கொள்ள மாட்டார்கள் என்ற உருட்டல் எல்லாம் முன்பு இருந்ததே?? அதெல்லாம் இப்போது எங்கே போனது?? அணைத்து சுற்றுசூழல் பாதுகாப்புடன் பொன் ராதாகிருஷ்ணன் அறிவித்த குமரி துறைமுகம் வர விடாமல் தடுத்தது எந்த கட்சி?? இப்பொது மாவட்டமே கொள்ளை போகுது ...கேட்க நாதி இல்லை ...எல்லாம் காசு பணம் கொள்ளை ...


mathan
செப் 05, 2024 07:57

கட்டிங் வரலையா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை