உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 4 ஆண்டுகளில் ஈர்த்த முதலீடு ரூ.10 லட்சம் கோடி: முதல்வர் ஸ்டாலின்

4 ஆண்டுகளில் ஈர்த்த முதலீடு ரூ.10 லட்சம் கோடி: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தர்மபுரி: தமிழகம் அமைதியான மாநிலமாக இருக்கும் காரணத்தினால் தான், கடந்த 4 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை நாம் ஈர்த்து இருக்கிறோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.தர்மபுரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். தமிழகத்தில் முதன்முறையாக தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் இணைய வழியில் பயிர்க் கடன் வழங்கும் திட்டத்தைத் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: விவசாயிகளுக்கு உடனுக்குடன் பயிர் கடன் வழங்கப்படுகிறது. ஆன்லைனில் விண்ணப்பித்த அன்றே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பயிர்க்கடன் வரவு வைக்கப்படும். நேரடியாக கடன் பெறும் நடைமுறையை மாற்றி இணைய வழியில் பயிர்க்கடன் பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

சில விஷமிகள்...!

நாட்டில் உள்ள அனைத்து வளர்ச்சி திட்டங்களுக்கும் தமிழகம் தான் முன்னோடி. திராவிட மாடல் தான் இந்தியாவுக்கான திசைக்காட்டி. இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் இருப்பதாக நானோ, நீங்களோ மட்டும் கூறவில்லை. மத்திய அரசின் புள்ளி விபரங்களே கூறுகின்றன. இதை பொறுத்து கொள்ள முடியாமல் ஆட்சிக்கு எதிராக சில விஷமிகள் அவதூறுகளை அள்ளி வீசிக்கொண்டு இருக்கிறார்கள்.

அவதூறுகள்

எதிர்க்கட்சிகள் சொல்வதை பற்றி நான் கவலைப்படுவதில்லை. அது தான் அவர்கள் அரசியல். அவர்களை விடவும் ஒருவர் மலிவான அரசியல் செய்கிறார். யார் என்று உங்களுக்கு தெரியும். அவர் தான் மத்திய பாஜ அரசால் நியமிக்கப்பட்டு இருக்கும் நமது கவர்னர் ரவி. கவர்னர் மாளிகையில் இருக்கும் அவர் செய்கிற என்ன வேலை தெரியுமா?

ரூ.10 லட்சம் கோடி

திமுக ஆட்சி மீது அவதூறுகளை பரப்புகிறார். திமுக மீது அவதூறு பரப்புவார். சட்டங்களுக்கு ஒப்புதல் தரமாட்டார். இல்லாத திருக்குறளை அச்சிட்டு கொடுப்பார். தமிழகம் அமைதியான மாநிலமாக இருக்கும் காரணத்தினால் தான், கடந்த 4 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை நாம் ஈர்த்து இருக்கிறோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

புதிய அறிவிப்புகள்

தர்மபுரி மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அறிவித்த புதிய திட்டங்கள் விபரம் பின்வருமாறு:* அரூர் வருவாய் வட்டத்தில் 63 மலைக் கிராமங்கள் இணைக்கப்படும்.* நல்லம்பள்ளியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ரூ.7.5 கோடியில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.* ஆட்டுகாரன்பட்டி - பென்னாகரம் வரை இருவழிச் சாலை 4 வழிச் சாலையாக மேம்படுத்தப்படும்.* ரூ.11 கோடிகள் புளி வணிக மையம் அமைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 73 )

C.SRIRAM
ஆக 23, 2025 12:45

அத்தனையும் பொய் . ஈர்த்ததில் எவ்வளவு முதலீடாக வந்திருக்கிறது ?


sankar
ஆக 18, 2025 14:15

எவனாவது சரிபாக்கவா போறான் - அப்படி எவனாவது சொன்னால் இருக்கவே இருக்கு சொம்பு ஊடகங்கள்


என்றும் இந்தியன்
ஆக 17, 2025 20:48

ரூ 10 லட்சம் கோடி 4 ஆண்டுகளில் ஈர்த்த முதலீடு The debt burden of the Tamil Nadu government will burgeon to ₹9,29,959.30 crore by March 31, 2026, according to the budget documents for the year 2025-26. இதைத்தான் அவர் சொல்கின்றார் முதலீடு என்று. ஏனென்றால் ஸ்டாலினுக்கு முதலீடு கடன் வரவு எதற்கும் அர்த்தம் தெரியாது வித்தியாசம் தெரியாது


Natarajan Ramanathan
ஆக 17, 2025 19:39

தைரியம் இருந்தால் ஒரு வெள்ளை அறிக்கை விடலாமே.வந்த முதலீடுகளைவிட வாங்கிய கடனும் லஞ்சமும் பலமடங்கு அதிகம் என்பது நம் அனைவருக்குமே தெரியும். நாசமாய் போன நாலாண்டுகள்.


Nanchilguru
ஆக 17, 2025 19:28

ஒரு இருபது லட்ச்சம் கோடி என்று அடித்து விட வேண்டியது தானே, யாரு கேட்க போறாங்க


ராமகிருஷ்ணன்
ஆக 17, 2025 19:01

10 லட்சம் கோடிகளை பற்றிய விரிவான முதலீடு அறிக்கை வேணும், எங்கு எந்த மாதிரியான தொழில்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரியணும். சும்மா மொட்டையா சொல்லக்கூடாது


சிட்டுக்குருவி
ஆக 17, 2025 18:18

உங்கள் சுகபோகங்களுக்காக நீங்கள் வாங்கிய கடன்தான் பத்துலட்சம் கோடி என்று மக்களுக்குத்தெரியும் .ஆனால் முதலீடாக வந்ததாக மக்களுக்கு தெரியாது .அதனால் எந்தெந்த புதிய தொழிற்சாலைகளை வந்தன ஒவ்வொருதொழிற்சாலையிலும் புதிய முதலீடு எவ்வளவு புதிய வேலைவாய்ப்புகள் /வேலைபெற்றோர் எவ்வளவு நீங்கள் பதவியேற்கும்போது வேலையின்மை எவ்வளவு புதியதாக வேலைவாய்ப்பிற்குத்தகுதிபெற்றோர் எவ்வளவு தற்போது வேலையின்மை எவ்வளவு என்ற தரவுகளை மக்களுக்கு தெரியப்படுத்தினால் உங்கள் தன்னலமிக்க அயராத உழைப்பை மக்கள் அறிவார்கள் .


Ramesh Sargam
ஆக 17, 2025 18:17

வாயால் வடைசுடுகிறார்கள் என்று சொல்வார்கள். இவர் என்னவென்றால் வாயால் பிரியாணியே செய்கிறார்.


c.mohanraj raj
ஆக 17, 2025 17:53

இவர்கள் குடும்பம் வெளிநாட்டில் செய்த முதலீடுகளைச் சொல்கிறார் போல


venugopal s
ஆக 17, 2025 17:49

இங்கு எல்லாரும் முதல்வரை தனிமனித தாக்குதல்கள் நடத்துகின்றனரே தவிர ஒருத்தராவது தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் முதல்வர் கூறியது தவறு என்று நிரூபிக்க முடிகிறதா?அவர்கள் மூடர்கள் கூட்டம் என்பதை மறுபடியும் நிரூபிக்கின்றனர்!


vivek
ஆக 17, 2025 20:58

அறிவிலி. ரீலு விட்டவன் தான் ஆதாரம் காண்பிகணும்


venugopal s
ஆக 18, 2025 07:19

அதை ரீல் என்று சொல்பவன் தான் முதலில் நிரூபிக்க வேண்டும்!


புதிய வீடியோ