உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் முதலீடு: ஸ்டாலினுடன் அனில் பேச்சு

தமிழகத்தில் முதலீடு: ஸ்டாலினுடன் அனில் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதிக்காத காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்க சாதகமான சூழல் நிலவுகிறது. இதனால், பல நிறுவனங்களும் அதன் மின் நிலையங்களை, தமிழகத்தில் அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றன.இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த முகேஷ் அம்பானியின் சகோதரரும், தொழில் அதிபருமான அனில் அம்பானி, தமிழகத்தில் முதலீடு செய்வது தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில், தொழில் துறை அமைச்சர் ராஜா மற்றும் உயர் மட்டத்தினருடன் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார்.அனில் அம்பானி, ரிலையன்ஸ் பவர் நிறுவனம் வாயிலாக தமிழகத்தில் பசுமை மின் திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதாக தெரியவந்துள்ளது. முன்னதாக, முதல்வர் ஸ்டாலினையும் அனில் அம்பானி நேற்று சந்தித்து பேசிய தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Mani . V
அக் 06, 2024 06:57

இந்தியாவின் இரண்டு பணக்கார தொழிலதிபர்கள் பேச்சு.


Lion Drsekar
அக் 05, 2024 16:23

அன்று வந்ததும் இதே நிலா சச்சச்சா இன்று வந்ததும் அதே நிலா, என்றும் உள்ளது ஒரே நிலா சச்சச்சா இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா, நாடுதோறும் வந்த நிலா நாகரீகம் பார்த்த நிலா, பார்த்து பார்த்து சலித்த நிலா பாதி தேய்ந்தது வெள்ளை நிலா பாடல் இக அருமையாக இருக்கிறது, அன்று எமெர்ஜெனிசி எதிரி காங்கிரஸ், தேர்தலில் கூட்டு இன்றுவரை ஒற்றுமை, அன்று செந்தில் பாலாஜி இன்று , அன்று அம்பானி, இன்று , அன்று அதானி இன்று அவர் மகன் முக்கிய பிரமுகரை சந்திப்பு ஆக நாளை என்பது எப்படிவேண்டுமானாலும் மாறலாம், இதுதான் மனித இனம், மன்னிப்போம் மறப்போம், வந்தே மாதரம்


கல்யாணராமன் சு.
அக் 05, 2024 15:15

சின்ன தத்தி பெரிய தத்தியை சந்திச்சிருக்கு ............. நான் சின்ன தத்தின்னு சொன்னது அனில் அம்பானியை .....


ஆரூர் ரங்
அக் 05, 2024 15:14

இந்த அனிலை நம்புவதை விட சொந்த அணிலை நம்பினால் கேரண்டியாக கிடைப்பது கிடைக்கும்.


Matt P
அக் 05, 2024 12:57

நம்ம முதல்வருக்கும் தெரிஞ்சிருக்கணும் யாரை புடிச்சா அவர் தொழில் நல்ல்லா நடக்கும் என்றும் . ஏனென்றால் அவரும் ஒரு தொழில் அதிபர் தானே. அவர் சக அமைச்சர்களும் தொழில் அதிபர்கள் தானே. கப்பல் அதிபர்கள். சாராய தொழில் அதிபர்கள் ....


Ramesh Sargam
அக் 05, 2024 12:43

முதல்வர் அம்பானி சந்திக்கிறார். துணை முதல்வர் உதய நிதியை அதானி குழும தலைவர் ஒருவர் சந்திக்கிறார். என்னதான் நடக்குது தமிழகத்தில். தட்சணை நன்றாக கிடைத்திருக்கும் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும். தட்சணை என்றால் பரிசு, வேறு ஏதாவது தவறாக அர்த்தம் காணாதீர்கள்.


கனோஜ் ஆங்ரே
அக் 05, 2024 10:57

தனது சுய கௌரவத்தை விட்டுவிட்டு... தன் மாநில மக்கள் நலன் கருதி... யார் காலில் விழுந்தாவது... தன் பிறந்த மண்ணான தமிழ்நாட்டு பொருளாதாரத்தை உயர்த்துகிறாரா இல்லையா...? தன் மாநில தொழிற்சாலைகளை உருவாக்கி தன் மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுத் தருகிறாரா, இல்லையா...? தனது மாநில மக்களுக்காக எவன் காலில்கூட விழுபவன்தான் நல்ல முதலமைச்சர்...?


ஆரூர் ரங்
அக் 05, 2024 15:13

ஆமாம். தன்மான இனமான உணர்வுள்ள ஸ்டாலின் கிட்டத்தட்ட திவாலாகும் நிலையில் உள்ள அனிலிடம் முதலீட்டை ஈர்க்கிறார். ஃபாரின் டூர் போனது வேஸ்டா? கொடுமை.


கல்யாணராமன் சு.
அக் 05, 2024 15:13

சுய கவுரவமா ? யாருக்கு ?? மாநில மக்கள் = மன்னர் குடும்பம் + குறுநில மன்னர்கள் குடும்பம் அவ்வளவுதான் ....


Srinivasan Krishnamoorthi
அக் 05, 2024 10:54

இவருடைய பல தொழில்கள் நஷ்டமாகி தாய் தயவால் முகேஷ் காப்பாறும் நிலையில் பதினைந்து வருஷம் இருந்தார். தமிழக முதல்வர் கவனமாக இருக்க வேண்டும்


xyzabc
அக் 05, 2024 10:31

துபாய் ஸ்பெயின் அமெரிக்கா பயணம் முடிந்தது. இப்போ உள் நாட்டு ஆட்களை பார்ப்போம்.


narayanansagmailcom
அக் 05, 2024 10:23

மானம் உள்ளவர்கள் ஹிந்தி பேசுபவர்கள் கூட பிசினஸ் செய்வார்களா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை