உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் குறைந்து வருகிறது தொழில் முதலீடு : சி.ஐ.ஐ., தலைவர் தகவல்

தமிழகத்தில் குறைந்து வருகிறது தொழில் முதலீடு : சி.ஐ.ஐ., தலைவர் தகவல்

மதுரை: ''தமிழகத்தில் தொழில் முதலீடு குறைந்து வருகிறது,'' என இந்திய தொழிற் கூட்டமைப்பின் தென்மண்டல தலைவர் டி.டி.அசோக் கூறினார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் உற்பத்தி தொழில் மற்றும் முதலீடு 8 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதமாக குறைந்துள்ளது. தமிழகத்திலும் முதலீடு குறைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் குஜராத்தில் 40 பில்லியன் டாலர் அளவும், தமிழகத்தில் 20 பில்லியன் டாலர் அளவும் முதலீடு உள்ளது. திறமையான பணியாளர்களுக்கு பற்றாக்குறை உள்ளதே காரணம். இங்கு 1.5 லட்சம் திறமையான பணியாளர்கள் தேவை. மேலும் அரசு நிர்வாகத்தை எளிமைப்படுத்த, இ-கவர்னன்ஸ் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் 'கிளஸ்டர்' (குழுமம்) அமைத்து செயல்படுவது, மருத்துவ சுற்றுலா, ஆட்டோமொபைல், ஏரோநாட்டிக்கல், சோலார் பவர் துறைகளில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தலாம். இதற்காக சி.ஐ.ஐ., சார்பில் முயற்சித்து வருகிறோம். தமிழகத்தில் திறமையான பணியாளர்களை உருவாக்க அரசு, நபார்டு வங்கியுடன் இணைந்து மையம் உருவாக்க உள்ளோம். இதில் 15 ஆயிரம் தாழ்த்தப்பட்டோருக்கு பயிற்சி அளிக்க உள்ளோம். மதுரை உட்பட டைடல் பார்க்குகள் அடிப்படை வசதிகளுடன் உள்ளன. சிறிய, புதிய கம்பெனிகள் இங்கு வருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். சுற்றுலா உட்பட தொழில் வளர்ச்சிக்காக, வரும் ஜனவரி 3ம் வாரத்தில் 'மதுரை விழா' நடத்தப்பட உள்ளது. வரும் அக்டோபரில் மதுரையில் இருந்து துபாய், சிங்கப்பூர், கோலாலம்பூருக்கு சர்வதேச விமான சேவை துவங்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். மதுரை தலைவர் ஷியாம் பிரகாஷ்குப்தா உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை