உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்திய ராணுவத்தில் சேர இளைஞர்களுக்கு அழைப்பு

இந்திய ராணுவத்தில் சேர இளைஞர்களுக்கு அழைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இந்திய ராணுவத்தில் சேர, தகுதியான நபர்களிடம் இருந்து, 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:இந்திய ராணுவத்தில், அக்னிவீர் பொதுப்பணி, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு, எட்டு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழகத்தில், கடலுார், வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் நிக்கோபர் தீவுகளைச் சேர்ந்த, திருமணமாகாத இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்.தமிழ் உட்பட 13 மொழிகளில், 'ஆன்லைன்' வழியே தேர்வு நடத்தப்படும். விருப்பம் உள்ளவர்கள், 'www.joinindianarmy.nic.in' என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஏப்ரல், 10 விண்ணப்பிக்க கடைசி நாள். ஆன்லைன் எழுத்து தேர்வு ஜூன் மாதம் நடக்கும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

xyzabc
மார் 17, 2025 12:48

சிங்கப்பூர் போல compulsory ஆக்க வேண்டும்.


Ramesh Sargam
மார் 17, 2025 11:48

இப்படி செய்தால் என்ன? அரசியலில் கால் பாதிக்க விரும்புபவர்கள், கட்டாயம் ஒரு ஐந்து வருடம் ராணுவத்தில் பணிபுரியவேண்டும் என்று சட்டம் இயற்றினால் என்ன? அப்படி ராணுவத்தில் பணிபுரிந்தால்தான், அவர்களுக்கு நாட்டின் மீது ஒரு பற்று வரும். அதைவிட்டு, வாரிசு என்கிற முறையில் அரசியலில் குதிப்பது, அல்லக்கைகளாக அரசியல் களத்தில் குதிப்பது... இதெல்லாம் சரியல்ல.


சமீபத்திய செய்தி