உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐ.பி.எல்., கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் சலுகை: சென்னை மெட்ரோ ரயில் புது அறிவிப்பு

ஐ.பி.எல்., கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் சலுகை: சென்னை மெட்ரோ ரயில் புது அறிவிப்பு

சென்னை: ஐ.பி.எல்., போட்டியை காண செல்பவர்கள், போட்டியை காண்பதற்கான தங்கள் டிக்கெட்டை பயன்படுத்தி சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு; சென்னை அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மிக அருகில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் மார்ச் 23ல் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதை காண வரும் ரசிகர்களுக்கு தடையற்ற மெட்ரோ பயணத்தை வழங்க சென்னை மெட்ரோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.அதன்படி ஸ்பான்சர் செய்யப்பட்ட போட்டிக்கான பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் (போட்டியை காண்பதற்கான டிக்கெட்) பயணச்சீட்டுகளில் (both Digital & Physical) உள்ள தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம்.எந்த மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு இடையே மெட்ரோ ரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கடைசி மெட்ரோ ரயில் நள்ளிரவு 1 மணிக்கு விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலையம் மெட்ரோ நோக்கி புறப்படும். பயணிகள் கடைசி மெட்ரோ ரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் (நடைமேடைகள் 1 மற்றும் 2) வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம். போட்டியை காண செல்பவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இந்த வசதிகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

pmsamy
மார் 22, 2025 07:02

IPL ஒரு ஆரோக்கியமான போட்டி இல்லை இந்தியர்கள் இடையே போட்டி பொறாமையை வளர்க்கும் விளையாட்டு


m.arunachalam
மார் 21, 2025 21:01

இது சலுகை அல்ல மக்களை முட்டாள்களாக நினைத்து கவருகின்ற வேலை . வளர்ந்த நாடுகள் அனைத்திலும் இது போன்ற கபட வேலைகள் செய்கின்றார்கள் . விழித்துக்கொள்வது நல்லது . 1000 கோடி வரை சொத்து சேர்த்துள்ள வீரர்களின் தன்மையை உணர்ந்து செயல்பட வேண்டும் .


Gopalakrishnan Thiagarajan
மார் 21, 2025 19:26

waste. ஆயிரக்கணக்கில் கொடுத்து டிக்கெட் வாங்கி பார்க்கவருபவர்களுக்கு இலவச மெட்ரோ பயணம் அவசியமா.


ஆரூர் ரங்
மார் 21, 2025 19:03

1700 கொடுத்து கிரிக்கெட் டிக்கட் எடுத்த ஆட்களுக்கு 50 ரூபாய் ரயில் டிக்கட் எடுக்க முடியாதா? யார் அப்பன் வீட்டுப்பணம்?


முக்கிய வீடியோ