உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சந்தையில் ஐ.பி.எல்., டிக்கெட்; ரசிகர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் துணிகரம்

கள்ளச்சந்தையில் ஐ.பி.எல்., டிக்கெட்; ரசிகர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் துணிகரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஐ.பி.எல்., கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றி கூடுதல் விலைக்கு கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்கும் துணிகர மோசடி சென்னையில் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக அடுத்தடுத்து பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. அவற்றில் முக்கியமானது கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்வது. கடந்த முறை நடந்த போட்டியின் போது கவுன்டரிலேயே கூடுதல் விலைக்கு டிக்கெட் பெற்றதாக ரசிகர்கள் புகார் கூறினர். டிக்கெட் கட்டணம், கேளிக்கை வரி, ஜிஎஸ்டி தொடர்பான பிரேக் அப் எதுவும் இல்லாமல் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இம்முறை நடந்த போட்டியின் போது கள்ளச் சந்தையில் தனி நபர்கள் டிக்கெட் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. உண்மையான கட்டணத்தை விட பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி இவர்கள் ரசிகர்களிடம் விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதித்துள்ளனர்.

11 பேர் கைது

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று (ஏப்ரல் 05) சென்னை- டில்லி இடையே போட்டி நடந்தது. கள்ளச்சந்தையில் ஐ.பி.எல் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக ரசிகர்கள் அளித்த புகாரின் பேரில் சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்ற 11 பேர் கைது செய்யப்பட்டனர். 34 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்கான டிக்கெட் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுவதால், கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

NACHI
ஏப் 06, 2025 23:36

நேரத்தை வினடிகாதிர் ....


Kulandai kannan
ஏப் 06, 2025 23:09

சேப்பாக்கம் என்றாலே ஃபிராடுதான்


தமிழன்
ஏப் 06, 2025 13:30

இவனுக புடுங்குற ஆணிக்கு கள்ளசந்தை டிக்கெட் வேற கேடா?? அப்பட்டமான சூதாட்டம் இது வருடாவருடம் பல லட்சம் கோடிகள் உலகம் முழுவதும் புரள்கிறது இந்த ஐபிஎல் போட்டிகளில் கருப்பு பணம் மட்டுமே வருடாவருடம் விளையாடுகிறது சிஎஸ்கே மீதான நம்பிக்கையும் போய்விட்டது


Ramesh Sargam
ஏப் 06, 2025 12:49

Need to b a n this IPL matches in India for some years.


ஆரூர் ரங்
ஏப் 06, 2025 12:16

மனநிலை சரியில்லாத ஜென்மங்கள் திமிரில் பணத்தை வாரி கொடுத்து பார்க்கிறது. அவர்களை ஏமாற்றவும் ஏராளமான பேர் இருக்கிறார்கள். சூதாட்ட கிரிக்கெட்டை ஒழிப்பது எப்படி என்றுதான் யோசிக்க வேண்டும்.


Vasan
ஏப் 06, 2025 11:05

Please dont waste your time in seeing the IPL matches. If you want, see match summary and points .


Gopinathan S
ஏப் 06, 2025 11:03

இந்த கேடு கெட்ட சூதாட்ட விளையாட்டை தடை செய்யவே முடியாதா? போட்டிக்கு நடுவில் வரும் விளம்பரங்களை கவனியுங்கள். பெரும்பாலும் ஆன்லைன் சூதாட்ட செயலிகள். மற்றும் போதை வஸ்து பாக்கு பொட்டலங்கள். கொடுமை


கல்யாணராமன் சு.
ஏப் 06, 2025 11:29

கருத்தடை சாதனங்களின் விளம்பரங்களும் நிறைந்துள்ளன ...


தல தோனி வெறியன்
ஏப் 06, 2025 10:13

என்னோட தங்க செயின் அடகு வச்சி 8500ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கின கடைசில நேத்து டெஸ்ட் மேட்ச் மாதிரி ரொம்ப ஸ்லோ.


Gopinathan S
ஏப் 06, 2025 10:54

இப்படி ஒரு பாரம் தேவைதானா?


கல்யாணராமன் சு.
ஏப் 06, 2025 11:31

தல தோனி வெறியன், சும்மாதானே சொல்றீங்க ? நீங்க புத்திசாலிதானே, அப்படியான முட்டாள்தனத்தை செஞ்சிருக்க மாட்டீங்கதானே ??


Svs Yaadum oore
ஏப் 06, 2025 09:26

சென்னை- டில்லி இடையே போட்டி நடந்ததாம் ... கள்ளச்சந்தையில் ஐ.பி.எல் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாம். ஒரு டிக்கெட் விலை 15000 ரூபாய் கொடுத்து வாங்கிய திராவிட தற்குறி ...இவனுங்கதான் கார்பொரேட் கார்பொரேட் அம்பானி அதானி என்று கூவுபவர்கள் ....இந்த போட்டி சூதாட்டம் வியாபார விளம்பரம் நடத்தி இதில் கல்லா கட்டுவது மொத்தமும் விடியல் திராவிட கார்பொரேட் கம்பெனி... .படித்து முன்னேறிய மாநிலமாம் ....தமிழ் தமிழன் தமிழன்டா ....


அப்பாவி
ஏப் 06, 2025 09:26

பெர்னார்ட் ஷா அன்னிக்கே சொன்னாரு. கிரிக்கெட் என்பது 11 ...கள் விளையாடி 11000 ...கள் பாத்து ரசிப்பதுன்னாரு. இன்னிக்கி 11, 11 அணியா நிறைய பேர் விளையாடி, கோடிக்கணக்கில் நேரிலும், டி.வி யிலும் பாத்து கைதட்டறாங்க. உடுங்க. உலகமே முட்டாள்களை வெச்சுதான் காசு சம்பாரிக்கிது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை