உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தோனி வழக்கை நிராகரிக்க கோரிய ஐ.பி.எஸ்., அதிகாரி மனு தள்ளுபடி

தோனி வழக்கை நிராகரிக்க கோரிய ஐ.பி.எஸ்., அதிகாரி மனு தள்ளுபடி

சென்னை: நுாறு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்டு, கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக்கோரி, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஐ.பி.எல்., சூதாட்ட வழக்கு தொடர்பாக, 'டிவி' விவாதத்தில், தனக்கு எதிராக அவதுாறான கருத்துக்கள் கூறியதாக, ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார், 'ஜீ' மீடியா கார்ப்பரேஷன், ஹிந்தி செய்தி தொலைக்காட்சியான, 'நியூஸ் நேஷன் நெட்வொர்க் பிரைவேட் லிமிட்டெட்' ஆகியோருக்கு எதிராக, 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு, கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, 2014ல், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நிராகரிக்க கோரி, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கில் சாட்சி விசாரணை துவங்கிய நிலையில், இந்த மனுவை ஏற்றால், வழக்கு முடிவுக்கு வர, இன்னும் பல ஆண்டுகளாகும் எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, சம்பத்குமார் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜோதிராமன் அடங்கிய அமர்வு, சம்பத்குமாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை