உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடவுள் சிவனாக நடித்து வம்பு இழுக்கிறாரா நடிகர் மன்சூர் அலிகான்?

கடவுள் சிவனாக நடித்து வம்பு இழுக்கிறாரா நடிகர் மன்சூர் அலிகான்?

தான் தயாரிக்கும் இசை ஆல்பத்தில் கடவுள் சிவனாக நடிக்கிறார் மன்சூர் அலிகான். ஆல்பத்திற்கு 'அகம் பிரம்மாஸ்மி' (நானே கடவுள்) என்று பெயர் வைத்துள்ளார். ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய, மாற்று மதத்தை சார்ந்த இவர் ஹிந்து கடவுள் வேடமிட்டு நடிப்பது ஏன் என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆல்பத்தில் கடவுள் சிவனை இவர் எப்படி காட்டுகிறார் என்பது பற்றிய தகவல் இதுவரை இல்லை.அவ்வப்போது மற்றவர்களை வம்பு இழுத்து, சர்ச்சையாக பேசி, எதையாவது வித்தியாசமாக செய்து, அதன் மூலமாக பப்ளிசிட்டி தேடிக் கொள்பவர் நடிகர் மன்சூர் அலிகான். இப்போது அவர் கடவுள் சிவனை வம்பு இழுக்கிறார். ஆம், சமஸ்கிருத மந்திரங்கள் பயன்படுத்தி பாடல் எழுதி, இசையமைத்து, பாடி, நடித்து, இயக்கி, ஒரு ஆல்பம் தயாரித்துள்ளார். அந்த ஆல்பத்தின் பெயர் 'அகம் பிரம்மாஸ்மி'.இந்த ஆல்பம் விரைவில் வெளியாக போகிறது. அந்த ஆல்பத்தில் மன்சூர் அலிகானே சிவனாக நடித்துள்ளார். அந்த போட்டோக்கள் வெளியாகி உள்ளன. இதற்கு ஹிந்து அமைப்புகள், ஹிந்து மத நம்பிக்கை உடையவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க துவங்கி உள்ளனர்.மன்சூர் அலிகான் யார்? அவர் பின்னணி, செயல்பாடுகள் எப்படி இருக்கும் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அவர் சிவனாக நடித்து, அகம் பிரம்மாஸ்மி ஆல்பத்தில் நடிக்க வேண்டிய அவசியம் என்ன?சமீபத்தில் அவர் மகன் போதை விவகாரத்தில் உள்ளே சென்றவர். நில மோசடி உள்ளிட்ட விவகாரங்களில் இவரும் சிறை சென்று இருக்கிறார். அப்படிப்பட்டவர் கடவுள் சிவனாக நடித்து வருவது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடவுள் சிவனை இவர் எப்படி காட்டுகிறார் என்று தெரிந்தால் தான் இவரது நோக்கத்தை அறிந்து கொள்ள முடியும் என்று பலரும் காத்திருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Balakrishnan karuppannan
ஜூலை 27, 2025 07:38

தில் இருந்தால் நபிகள் நாயகமா நடிக்க வேண்டியது தானே


Ramesh Sargam
ஜூலை 26, 2025 21:10

இந்த மன்சூர் அலிகானுக்கு உண்மையில் தைரியமிருந்தால், அவர் மத தெய்வத்தை பற்றி இப்படி சித்தரித்து ஒரு படம் எடுக்கட்டும் பார்க்கலாம்.


ராமகிருஷ்ணன்
ஜூலை 26, 2025 20:44

கொடூர அரக்கன் வேஷத்திற்கு பொருத்தமான முகத்தை இந்து தெய்வ வேஷம் போட்டுள்ளதற்கு இந்துக்கள் இவரை தண்டிக்க வேண்டும்


அப்பாவி
ஜூலை 26, 2025 20:41

எம்.எஃப்.ஹுசைன்னு ஒரு ஆளு நமது பெண் தெய்வங்களை நிர்வாணமா வரைஞ்சு கலைன்னு சொன்ன போது கைதட்டி ரசிச்ச கூட்டம் நம்மளது. முகமது சந்திர பிம்பமோ ந்னு தூய தமிழில் பாபநாசம் சிவன் பாட்டெழுதினா புது ரெண்டு குல்லாய்கள் அது எங்க ஆளைக் குறிக்கிதுன்னு குதிக்க வதனமே சந்திர பிம்பமோ ந்னு மாத்தி எழுதின பெருந்தன்மை நம்மளது. இவன் ஆல்பத்தையும் வாங்கி மதச் சார்பின்றி வாங்குவோம். இவனுக்கும் நம்ம சிவன் தான் படியளக்கிறார் என்பதை நினைக்கும் போது மெய் சிலிர்க்கிறது.


vijai hindu
ஜூலை 26, 2025 19:59

மூஞ்ச பாத்தாவே கேவலமா இருக்கு .இதுல வேற சிவன் வேஷம் போட்டு சிவன் பெயரை கெடுக்கிற தைரியம் இருந்தா உங்க மதத்தை கடவுள் வேஷம் போட்டு நடிங்க


வாய்மையே வெல்லும்
ஜூலை 26, 2025 19:07

அவளும் அவனும் என்கிற நூலின் கதாநாயகன் மைண்ட்வாய்ஸ்.. டேய் எனக்குன்னே ஏழரை தூக்கிட்டு வருவீர்களா ?? இப்போதான் தமிழகமே ஒன்றிணைவோம் வா என்கிற மெகா ட்ராமா ஓடிட்டு இருக்கு .. அதுக்க்குள்ள நிலைகுலைய செய்ய பார்க்கிறார் வீணாப்போன மன்சூரூ ...


என்றும் இந்தியன்
ஜூலை 26, 2025 18:51

நடிகன் ,நடிகை என்றால் பணம் பணம் பணம் கொடு ...எதற்கு வேண்டுமானாலும் ரெடி என்ற குலத்தை சேர்ந்தவர்கள்...


பேசும் தமிழன்
ஜூலை 26, 2025 18:29

உங்க மத இறைவன் போல் வேடம் போட்டு கொண்டு போக வேண்டியது தானே....


vijai hindu
ஜூலை 26, 2025 18:13

இந்த மூஞ்சியும் மொகரையும் வச்சுக்கிட்டு ஏன் எங்க கடவுள அசிங்கப்படுத்துற


theruvasagan
ஜூலை 26, 2025 17:32

இந்துக் கடவுள் வேடம் ஏன் போட்டார்னு கேக்கக்கூடாது. ஒருதலைபட்சமாக இல்லாமல் அவர்கள் கடவுள் மாதிரியோ சமயப் பெரியோர் மாதிரியோ வேடம் போட்டு நடிக்கணும்னு வற்புறுத்த வேண்டும்.


முக்கிய வீடியோ