உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தற்காலிக நிவாரணம் கொடுத்துவிட்டுப் போவதுதான் தான் தீர்வா: விஜய் கேள்வி

தற்காலிக நிவாரணம் கொடுத்துவிட்டுப் போவதுதான் தான் தீர்வா: விஜய் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''ஒவ்வொரு வருடமும் வரும் புயல் மற்றும் பேரிடரின் போது சம்பிரதாய நிகழ்வாக ஓரிரு நாட்கள் பாதிக்கப்பட்ட மக்கள் சிலரை ஆட்சியாளர்கள் சந்தித்துப் புகைப்படம் எடுத்துவிட்டு, தற்காலிக நிவாரணம் கொடுத்துவிட்டுப் போவதுதான் தான் தீர்வா,'' என த.வெ.க., தலைவர் நடிகர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: எவ்வளவு பெரிய புயல், இயற்கைப் பேரிடர் வந்தாலும் நம்மைக் காக்க, நாம் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த அரசு இருக்கிறது, ஆட்சியாளர்கள் உள்ளனர் என்ற நம்பிக்கையுடன் தான் மக்கள் இருப்பர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=35rdsuvu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசோ, ஆட்சி பீடமோ, ஆபத்தான ஒவ்வொரு சூழலிலும் மக்களைக் கைவிடும் என்பதை அனுபவித்து உணர்கிறபோது, அம்மக்களின் தாங்கொணாத் துயரை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. நமக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள் எனப் பரிபூரணமாக நம்பி வாக்களித்து, அதிகாரத்தில் அமர்த்தி அழகு பார்த்த மக்களைப் பாதுகாக்க, முறையான திட்டங்களைத் தீட்டவில்லை. குறைந்தபட்ச பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கூடச் செய்யாமல் அவர்களைக் கையறு நிலையில் பரிதவிக்க விடும் சுயநல ஆட்சியாளர்களை என்னவென்று சொல்ல?ஒவ்வொரு வருடமும் வரும் புயல் மற்றும் பேரிடரின் போது வருடாந்திர சம்பிரதாய நிகழ்வாக ஓரிரு நாட்கள் பாதிக்கப்பட்ட மக்கள் சிலரை ஆட்சியாளர்கள் சந்தித்துப் புகைப்படம் எடுத்துவிட்டு, தற்காலிக நிவாரணம் கொடுத்துவிட்டுப் போவதுதான் தான் தீர்வா? அந்த நேரத்துக்கான தீர்வைத் தந்துவிட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதும் மக்கள் துன்பத்தை ஒருநாள் சம்பிரதாயம் போல நினைத்து அன்றோடு மறந்துவிடுவதும் எந்த வகையில் நியாயம்? மழை வெள்ளம் போன்ற பேரிடர்க் காலங்களில் மக்களுக்கான அடிப்படைப் பாதுகாப்புத் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய தார்மீகமான தலையாய கடமை, முதலில் ஆட்சியாளர்களுக்கே இருக்கிறது. ஆனால் ஆட்சியாளர்கள் இதை முழுவதுமாகவே மறந்துவிடுகின்றனர். மக்களைப் பாதுகாப்பாக இருக்க வைப்பதற்கான நிரந்தரத் தீர்வை நோக்கி நகர்வது குறித்து அவர்கள் எள்ளளவும் சிந்திப்பதில்லை. காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர்ப் பாதுகாப்புச் சார்ந்து எந்த ஒரு முன்னெடுப்பையும் எடுப்பதில்லை. வெறும் தற்காலிகக் கண்துடைப்பு அறிவிப்புகளைச் செய்வதில் மட்டுமே முனைப்புடன் இருக்கின்றனர். இவ்வாறு செய்வதையே ஆட்சியாளர்கள் வாடிக்கையாகக் கொண்டிருப்பது உண்மையிலேயே வேதனையைத் தருகிறது. எவ்வகையிலாவது மக்களை ஏமாற்றி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்றும், எல்லாவற்றையும் மக்கள் மறந்துவிடுவர் என்றும், மமதையில் இருந்த எவரும் மக்கள் மன்றத்தில் நீடித்து நிலைத்ததே இல்லை என்பதுதான் வரலாறு. எது நடந்தாலும் எப்போதும் போல எதிர்க்கட்சிகள் மீது ஏளனமாக விமர்சனம் வைத்து, காவி வர்ணம் பூசி, கபட நாடகமாடித் தப்பித்துக்கொள்ளலாம் என்று தற்போதைய ஆட்சியாளர்கள் எம் மக்களை நிரந்தர நிர்க்கதிக்கு ஆளாக்கி வருகின்றனர். இந்த அடாத முயற்சிகள் அனைத்தும் மக்கள் சக்திக்கு முன்பு தோற்றுப் போகும் என்பதை இனிவரும் காலங்கள் கண்டிப்பாக உணர்த்தவே செய்யும். இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

சாண்டில்யன்
டிச 04, 2024 15:17

குஸ்க்கா பாயி போர்வையெல்லாம் இல்ல வெள்ளத்துல வீடிழந்தவர்கள் எல்லாம் வரிசையில வந்து இங்கேயே நில்லுங்க வீடு கட்டி கொடுக்கிறோம்


Karuthu kirukkan
டிச 04, 2024 06:38

அட என்னனென்னே நீங்க ,, திராவிடமும் , தமிழ் தேசியமும் ரெண்டு கண்கள், காதுகள் , கைகள், கால்கள்னு சொல்லிட்டு நம்ம திராவிடத்தை குறை சொல்லலாமா ..அட போங்கண்ணே ,,ஆன நீங்க MGR மாதுரி சும்மா தக தகன்னு இருக்கிங்கண்ணே ..சும்மா சும்மா சொன்னேண்ணே...எழுதிக்கொடுத்ததை வீட்லே நல்லா படுச்சுட்டு வாங்கண்ணே , அப்போதான் மேடையிலே ஒரு terrora பேச முடியும் நம்ம சுடலைமாதுரி ...


J.V. Iyer
டிச 04, 2024 05:22

தலீவர் பேச, பேசத்தான் உண்மை முகம் மக்களுக்கு தெரியும். நிறைய பேசுங்க தலீவா..


Raj
டிச 04, 2024 04:48

தற்காலிக நிவாரணம் : இந்த முறை தான் தமிழகத்தில் காலம்.... காலமாக நடக்கிறது மரணத்தின் விகிதாசாரத்தை பொருத்து நிவாரணம் வழங்கி பின்பு அதற்கு தீர்வு காண்பது கிடையாது, மக்களும் மறந்து விடுவார்கள்....


தாமரை மலர்கிறது
டிச 03, 2024 22:30

தமிழகத்தில் இவ்வளவு பேர் உனக்கு விசில் அடிச்சான் குஞ்சுகளாக இருக்காங்களே. அப்போதே தெரிந்து இருக்கணும், இவனுங்க தேர்ந்தெடுக்கிற திராவிட ஆட்சி இப்படித்தான் இருக்கும். இருந்தாலும் ஜோசெப் சார் இதுவரை காலை தண்ணீரில் வைக்கலை.


Dhanraj
டிச 03, 2024 22:10

வாங்க வாங்க..... வரவேற்கிறோம். குழு அமைத்து, பல்வேறு பிரச்சனைகள் குறித்து நிரந்தர தீர்வுக்கான வழிமுறைகளை ஆராய்ந்து தெளிவான அறிக்கைகளை வெளியிடவும்...


Pandianpillai Pandi
டிச 03, 2024 22:10

உங்கள் கட்சி மாநாட்டில் பங்கேற்க வந்தவர்கள் எத்தனை பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு என்ன செய்தீர்கள். உங்கள் மாநாட்டில் உணவு எவ்வாறு பரிமாறப்பட்டது. இதெற்கெல்லாம் பதிலலிக்காத தாங்கள் ஆட்சியாளர்களை குற்றம் சுமத்துவது எந்த விதத்தில் உங்களுக்கு நியாயமாக தெரிகிறது. சுதந்திரம் அடைந்த நாள் முதல் இன்றைய நாள் வரை தி மு க செய்திட்ட திட்டங்கள் தமிழர்களின் உரிமையை காத்திட என்னற்ற தியாகங்களை செய்துள்ளது. தமிழர்களின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளது. தி மு க வின் பெயரில் மற்ற கட்சிகள் பிரகாசிக்கின்றன. தி மு க இன்றளவும் பிராகாசித்து கொண்டிருப்பதற்கு காரணம் மக்களிடம் உண்மையாக இருப்பது தான். வரும் காலங்களில் மட்டுமல்ல எந்த காலத்திலும் தி மு கவிற்கு நிகராக யாரும் வந்திட முடியாது. படத்தில் வசனம் பேசுவது போல் பேசிவிட்டு சென்றுவிட முடியாது. கதாநாயகி இல்லாமல் ஒரு படத்திலாவது நீங்கள் நடித்திருக்கீர்களா? டான்ஸ் இல்லாமல் ஒரு படத்திலாவது நடித்திருக்கீர்களா? உங்கள் படம் தோல்வியே தழுவவில்லையா?


R S BALA
டிச 03, 2024 22:06

ரசிக்கும்படி இல்லை இந்த வசனங்கள்..


Rajkumar Ramamoorthy
டிச 03, 2024 21:37

DMK has no shame, every year they will make the Chennai float in rain.. No long term city planning.. The Chennai corporation is worthless and only working for commission. During rain they will give milk and biscuit packet and forget the entire issue.


Kumar
டிச 03, 2024 21:32

போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும் நீங்கள் செய்வதை செய் .கறை படியாத கை, மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு உழைப்பால் நிச்சயம் வெற்றி கிட்டம். வாழ்த்துக்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை