உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெளி சந்தையில் விலை ஏற்ற திட்டமா?

வெளி சந்தையில் விலை ஏற்ற திட்டமா?

ரேஷன் கடைகளில், நவம்பர் மாதத்திற்கான துவரம் பருப்பு இதுவரை வழங்கப்படவில்லை. இம்மாதத்தின் 22 நாட்கள் கடந்து விட்ட நிலையில், பல ரேஷன் கடைகளுக்கு வெறும் 200 கிலோ துவரம் பருப்பு மட்டும் வழங்கப்பட்டதாகவும், பெரும்பாலான கடைகளுக்கு துவரம் பருப்பே வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ரேஷன் கடைகளில் தடையின்றி துவரம் பருப்பு வழங்குவது எளிதான ஒன்றுதான். அதைக்கூட தமிழக அரசால் செய்ய முடியாதது ஏன் என்பது தான் தெரியவில்லை. ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதன் நோக்கமே, வெளிச்சந்தையில் அவற்றின் விலைகளை கட்டுப்படுத்துவது தான். சில மாதங்களாக, ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு முறையாக வழங்கப்படாததால், கடந்த ஜூன் மாதத்தில், 180 ரூபாயாக இருந்த ஒரு கிலோ துவரம் பருப்பின் விலை 210 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. வெளி மார்க்கெட்டில் பருப்பு விலை உயருவதற்காக, அரசு திட்டமிட்டு ரேஷன் கடைகளில் பருப்பு வழங்காமல் தாமதப்படுத்துகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. - ராமதாஸ்,பா.ம.க., நிறுவனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ