உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பல ஆயிரம் கோடி கைமாறியது உண்மையா? திமுக அரசு மீது இபிஎஸ் சந்தேகம்

பல ஆயிரம் கோடி கைமாறியது உண்மையா? திமுக அரசு மீது இபிஎஸ் சந்தேகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் 1250 குடியிருப்புகளை கட்ட அனுமதி அளித்துள்ளதன் மர்மம் என்ன ? இதற்காக பல்லாயிரம் கோடி கை மாறியதாக வரும் செய்திகள் உண்மையா? என்பதை திமுக அரசு தெளிவுபடுத்த வேண்டும்,' என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை; பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சி அதிகாரத்தை எப்படியேனும் கைப்பற்றி குடும்ப ஆதிக்கத்தை வளர்க்க நினைக்கும் மக்கள் விரோத திமுக அரசு, கடந்த 2006-2011 மைனாரிட்டி திமுக ஆட்சியின்போது கண்ணில் பட்ட சொத்துக்களை எல்லாம் கபளீகரம் செய்ததும், அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த புகார்களை விசாரிக்க 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் “நில அபகரிப்பு பிரிவு' என்ற தனிப் பிரிவை தமிழக காவல் துறையில் உருவாக்கி பாதிக்கப்பட்டவர்களின் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டதும் மக்கள் நன்கறிவார்கள். 2021ல் விடியா திமுக ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் மீண்டும் தன்னுடைய பினாமி நிறுவனங்கள் மூலம் மக்கள் சொத்துக்களை மிரட்டி கபளீகரம் செய்வதுடன், அரசுக்குச் சொந்தமான நிலங்களையும் பெரு முதலாளிகளுக்கு கோடிக்கணக்கில் கையூட்டு பெற்றுக்கொண்டு தாரை வார்க்கத் தொடங்கியுள்ளது.தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கர் சதுப்பு நிலக் காடுகள் உள்ளன. குறிப்பாக சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பருவமழைக் காலங்களில் சென்னையில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுக்கும் வடி நிலமாகவும், பல்லுயிர் பெருக்கத்திற்கு இதயமாகவும் விளங்குகிறது. எனது தலைமையிலான அரசு பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களைமீட்டெடுக்க ஏற்கெனவே 16 கோடி ரூபாய் மதிப்பில் அனுமதிக்கப்பட்ட திட்டத்தை விரிவுபடுத்தி, மத்திய அரசின் நிதியுதவியுடன் ரூ.165.68 கோடி செலவில் “தேசிய பருவநிலை மாற்றத் தழுவல் நிதி”யின் கீழ், 695 ஹெக்டேர் சதுப்பு நிலத்தில் “பள்ளிக்கரணை சுற்றுச்சூழல் மீட்பு திட்டத்தினை” 2018-2019ல் செயல்படுத்த ஒப்புதல் வழங்கி, சதுப்பு நிலம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.பள்ளிக்கரணை சதுப்புநிலம் “ராம்சார் ஒப்பந்தம்'-படி பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியாகும். இதன்படி “ராம்சார் அறிவிக்கை செய்யப்பட்ட சதுப்பு நிலத்திலோ, அல்லது அதன் எல்லையிலிருந்து ஒரு கிலோ மீட்டருக்குள் எந்தவிதமான கட்டுமானங்களோ, சாலை கட்டுமானங்களோ மேற்கொள்ள அனுமதி அளிக்கக்கூடாது' என்று தென்மாநிலங்களுக்கான தேசிய பசுமை தீர்ப்பாயம் 24.9.2025 அன்று வழங்கிய தீர்ப்பினை சிஎம்டிஏ, தன்னுடைய அலுவலர்களுக்கு 6.10.2025 அன்று சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது.சுற்றுச்சூழலை பாதுகாக்க சதுப்பு நிலங்கள் உயிர்நாடியாக திகழ்கின்றன என்ற காரணத்தினால், அவற்றை வேறு பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தக்கூடாது என்பது ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நியதியாகும். இதை விடியா திமுக அரசு தளர்த்தி சுமார் 15 ஏக்கர் நிலத்தை “பிரிகேட்” என்ற தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு, 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 1250 குடியிருப்புகளை கட்ட அனுமதி வழங்கியுள்ளதாகச் செய்திகள் வருகின்றன.என்னதான் நவீன தொழில்நுட்பத்துடன் சதுப்பு நிலத்தில் கட்டிடங்கள் கட்டப்பட்டாலும், அக்கட்டிடத்தின் அஸ்திவாரங்கள் அமைவதும், அதன்மேல் எழுப்பப்படும் கட்டிடங்களின் உறுதித் தன்மையும் கேள்விக்குறியதே! என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஒரு பெரும் வெள்ளத்திற்கும், புயலுக்கும் அக்கட்டிடங்கள் தாங்காது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றார்கள்.இத்திட்டத்தில் திமுக அரசு பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாடுவதை ஏற்க முடியாது. சென்னையின் சுற்றுச்சூழலை பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த நாசகாரதிட்டத்திற்கு தமிழக வனத் துறை, வருவாய்த் துறை, சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட அரசு துறைகள் அனுமதி அளித்துள்ளதன் மர்மம் என்ன ? இதில் தொங்கி நிற்கும் ஊழல் என்ன ? இதில் பல்லாயிரம் கோடி கை மாறியதாக வரும் செய்திகள் உண்மையா ? என்பதை இந்த திமுக அரசு தெளிவுபடுத்த வேண்டும். சென்னையை வெள்ள பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் அரணாகத் திகழக்கூடிய இந்த சதுப்பு நிலத்தில் எந்தவொரு கட்டுமான திட்டத்தையும் செயல்படுத்த இந்த அரசு அனுமதிப்பதை அதிமுக கை கட்டி வேடிக்கை பார்க்காது. அதிமுக அரசு அமைந்தவுடன் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு தவறிழைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

தமிழ் நிலன்
அக் 27, 2025 00:06

விளம்பர மாடல் அரசு ஊழல் செய்வதில் உலக முன்னோடியாக உள்ளது. அதை பார்த்து அதிமுக பொறுமுகிறது. விஞ்ஞான ஊழல் பட்டம் என்ன சும்மாவா கிடைத்தது


மணிமுருகன்
அக் 26, 2025 23:05

ஏற்கனவே தண்ணீர் போக வழியில்லாமல் ஓடைகள் ஏரிகள் அடைக்கப்பட்டு கட்டிடமாக்கப் பட்டு உள்ளது நிலத்தன்மை அறியாமல் கட்டுமானங்களை தொடங்கி மெட்ரோ பாலம் இடிந்து விழுதல் திடீர் பள்ளம் தோனடறுதல் என்று பல ப் பிரச்சனை உள்ள நிலையில்அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல்கட்சி திமுகா கூட்டணி குடும்பத்திற்கு சொத்து சேர்ப்பதில் குறியாக இருப்பதையே கட்சி கொள்கையாக கொண்டுிள்ளது60 வருடமாக


Sreenivas Jeyaraman
அக் 26, 2025 21:40

லீக் மறுப்பு அறிக்கையை படிக்கவும்.. மடைமாற்று செய்து இந்த சம்பவத்தை திசைதிருப்பவது விடியல் ஊழல் அங்கத்தினருக்கு கை வந்த கலை...


Anantharaman Srinivasan
அக் 26, 2025 20:57

பள்ளிக்கரணை சதுப்புநிலம் கட்டிடம் கட்ட தடை என்பதை விசாரிக்காமல் விளம்பரத்தைப்பார்த்து போய் விழும் மக்களை என்னவென்பது..?


Vasan
அக் 26, 2025 21:55

அரசாங்க அனுமதி இருக்கும் போது ஏன் வாங்கக்கூடாது?


Vasan
அக் 26, 2025 20:16

2016-21 கால கட்டத்தில், PWD காண்ட்ராக்ட் அனைத்தும் எடப்பாடியின் சம்பந்திக்கே கொடுக்கப்பட்டது உண்மையா?


ramesh
அக் 26, 2025 20:15

அப்பாவி மக்கள் பணம் 33000 கோடி LIC மூலமாக நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுடன் அதானி நிறுவனங்களில் முதலீடு செய்து உள்ளதாக குற்ற சாட்டு வந்துள்ளது அமெரிக்கா மற்றும் இந்தியா செய்திதாள்களில் .பழனிசாமி இதை படிக்க வில்லையா


kjpkh
அக் 26, 2025 23:21

இப்போ பழனிச்சாமி கேட்டதற்கு பதில் சொல்லாமல் அமெரிக்கா இந்தியா செய்தித்தாள்களைப் பார்க்கவில்லை என்று கேட்கிறார். என்றைக்குமே திமுகவுக்கு முட்டுக் கொடுப்பவர்கள் சம்பந்தமில்லாத பதில் சொல்லுவார்கள் என்று மக்கள் கூறிக் கொள்கிறார்கள்.


Haja Kuthubdeen
அக் 26, 2025 20:00

இதை தடுக்க எடப்பாடியார் இப்பவே நடவடிக்கையில் ஈடுபடனும்.


சிட்டுக்குருவி
அக் 26, 2025 19:30

கட்டட நடவடிக்கை நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதைவிட இப்போதே உயர்நீதிமன்றத்திக்கு எடுத்துசெல்லவேண்டும் .தீவிரவிசாரணைக்கு உட்படுத்தபட்டு யாரெல்ல்லாம் சட்டமீறல்களில் ஈடுபட்டு ஒப்புதல் அளித்தார்களோ அவர்களுக்கெல்லாம் தகுந்த தண்டனைவழங்கும்வரை இதை கொண்டுசெல்லவேண்டும் .


S.L.Narasimman
அக் 26, 2025 19:20

இன்னும் ஆறு மாதங்கள்தானே இருக்கு தேர்தலுக்கு. அதற்குள்ளே தமிழ்நாட்டிலே எவ்வளவு சுரண்ட முடியோமோ சுரண்டிவிடியல் குடும்பம் பாலைவனமாக்கிவிடுவார்கள்


Sudha
அக் 26, 2025 19:20

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பல தகவல்களை பெறலாம், நீதி மன்றத்தை அணுகி 2026 தேர்தல் வரை காலம் தாழ்த்தலாம்


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 26, 2025 19:37

திமுக விசயத்தில் இன்னமும் நீங்கள் நீதிமன்றங்களை நம்புவது வேடிக்கையாக இருக்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை