வாசகர்கள் கருத்துகள் ( 2 )
எங்கள் குழந்தைகளை வேறு மொழி கற்க கூடாது என்று தடுக்க உனக்கு என்ன உரிமை இருக்கு.
சும்மா கத்தீட்டு கெட
எந்த நிதியையும் தமிழகத்திற்கு தர முடியாது என சொல்லும் உரிமை, மத்திய அரசுக்கு கிடையாது. இந்தியா ஜனநாயக நாடு; மாநிலங்களுக்கும் அதிகாரம்; உரிமை இருக்கிறது.தமிழக மக்கள் போர் குணம் உடையவர்கள்; அவர்களுக்கு அது குறையவில்லை. இதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். பொது பட்டியலில் இருக்கக்கூடிய கல்விக் கொள்கையை, மத்திய அரசு மாநிலங்கள் மீது தொடர்ந்து திணிக்கிறது.யாரும் எந்த மொழியையும் படிக்கலாம்; தவறில்லை. ஆனால், எந்த மொழியையும் திணிக்கக்கூடாது. மொழி திணிப்பைதான் எதிர்க்கிறோம். மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்த போது, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழி சொல்லிக் கொடுத்தனர். பின், ஜெர்மன் மொழியை எடுத்துவிட்டு சமஸ்கிருதம் படிக்கச் சொன்னார்கள். இது தான் மொழி திணிப்பு; ஆதிக்கத்தினுடைய திணிப்பு. இதை மத்திய அரசு செய்வதாலேயே, புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம். - கனிமொழி, தி.மு.க., - எம்.பி.,
எங்கள் குழந்தைகளை வேறு மொழி கற்க கூடாது என்று தடுக்க உனக்கு என்ன உரிமை இருக்கு.
சும்மா கத்தீட்டு கெட