உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாக்., உளவாளியா பையா சன்னி யாதவ்? என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை

பாக்., உளவாளியா பையா சன்னி யாதவ்? என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை

சென்னை: இருசக்கர வாகனத்தில் பாகிஸ்தான் சென்று திரும்பிய, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த, 'யு டியூபர்' பையா சன்னி யாதவை பிடித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் பையா சன்னி யாதவ், 26; யு டியூபர். இவர் இருசக்கர வாகனத்தில், நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று, சமூக வலைதளங்களில் வீடியோ பதிவு செய்து வந்தார். இருசக்கர வாகனத்தில், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திற்கும் சென்று திரும்பி உள்ளார். பாகிஸ்தானில் அரசு அதிகாரிகளையும் சந்தித்துள்ளார். பையா சன்னி யாதவின், 'ஹெல்மெட்'டில் கேமரா பொருத்தப்பட்டு இருக்கும். இவர், பாக்., உளவாளியாக செயல்பட்டு இருக்கலாம் என, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்து உள்ளது.அதனால், சென்னையில் இருந்த பையா சன்னி யாதவை, தெலுங்கானா மாநில என்.ஐ.ஏ., அதிகாரிகள், கடந்த வியாழனன்று இரவு பிடித்து, அம்மாநிலத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை