உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்., வெளியேற தயாரா? கேட்கிறார் அண்ணாமலை

தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்., வெளியேற தயாரா? கேட்கிறார் அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்., வெளியேற தயாரா? குறைந்தபட்சம் மானத்தை காப்பாற்றுவதற்காக தனியாக போட்டியிட தயாரா?'' என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: அற்புதமான ஆட்சியாளர் காமராஜர் வீழ்த்தப்பட்டதற்கு தி.மு.க.,வே முக்கிய பொறுப்பு, முதன்மை பொறுப்பு. 1967ம் ஆண்டு தேர்தலில், எவ்வளவு பொய்களை சொல்லி கர்மவீரர் காமராஜரை வீழ்த்தினார்கள். அதன் பிறகு காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுப்பட்ட போது, இந்திரா தி.மு.க., உடன் இணைந்து தமிழகத்திலும் வர கூடாது, இந்தியாவிலும் வர கூடாது என்பதற்காக செயல்பட்டார்கள் என்பதற்கு 1971ம் ஆண்டு தேர்தல் ஒரு எடுத்துக்காட்டு.

குட்டையில் ஊறிய மட்டைகள்

கர்மவீரர் காமராஜர் பற்றி பேசுவதற்கு தி.மு.க.,வுக்கு அருகதை இல்லை. ஒரு சதவீதம் கூட உரிமை இருப்பதாக நான் பார்ப்பதில்லை. 1967ம் ஆண்டு தேர்தலின் போது கருணாநிதி பேசியது, எல்லாவற்றையும் எடுத்து போட்டு காட்டினால், மானம் இருக்கும் ஒரு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூட தி.மு.க., கூட்டணியில் இருக்க மாட்டார்கள். கடைசி காலம் வரை சொத்துக்களை சேர்க்காதவர், எளிமையானவர். தி.மு.க., அ.தி.மு.க., குட்டையில் ஊறிய மட்டைகள் என்று கூறியவர் காமராஜர்.

தனியாக போட்டியிட தயாரா?

வரலாற்றை மாற்றி திரித்து பேசுவதை கண்டிக்கிறேன். மானம் இருக்கும் காங்கிரஸ் கட்சி பார்த்து கொண்டு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்., வெளியேற தயாரா? குறைந்தபட்சம் மானத்தை காப்பாற்றுவதற்காக தனியாக போட்டியிட தயாரா? இன்னொரு கூட்டணிக்கு போங்க என்று நான் சொல்லவில்லை. தி.மு.க., கூட்டணியில் இருந்து வருவதற்கு தயாரா? ஆனால் அவர்கள் வர மாட்டார்கள். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரைக்கும் இன்றைக்கு, நாளைக்கு கொஞ்சம் சவுண்ட் விடுவார்கள். https://www.youtube.com/embed/RORg4pbXxBQநாளை மறுதினம், தி.மு.க.,வில் இருந்து யாராவது டில்லியில் ராகுல், சோனியாவை சந்திப்பார்கள். அதன் பிறகு, டோஸ் விட்ட பிறகு, தி.மு.க.,வினரின் அடிமாடாக காங்கிரஸ் கட்சியினர் வேலை செய்வார்கள். இது காலம் காலமாக காங்கிரஸ் கட்சியை மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். புதிதாக எதும் நடக்கப்போவதில்லை.

ஒரே ஒரு விஷயம்

இதனால் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கும், முக்கிய தலைவர்களுக்கும் நான் கேட்க கூடிய ஒரே ஒரு விஷயம். கர்ம வீரரை காமராஜரை தவிர காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்திற்கு எந்தவொரு அடையாளமும் கிடையாது. வேறு எந்தவொரு தலைவரையும் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அப்படிப்பட்ட தலைவரை அசிங்கப்படுத்திய பிறகு நீங்கள் கூட்டணியில் இருக்க வேண்டுமா என்ற கேள்வியை நான் மட்டுமல்ல சாதாரண மக்களும் கேட்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

Sri Renugambal Enterprises, Theni
ஜூலை 18, 2025 11:08

அண்ணாமலையாரே நல்ல தலைவராக இருந்து மட்டும் பிரயோஜனம் இல்லை. முதலில் உங்கள் கட்சியை வளர்க்க பாடுபடுங்கள். கட்சியில் பூத் ஏஜன்ட்கள் இருக்கிறார்களா? அமித்ஷா U.P யில் இருந்து எப்படி கட்சியை வளர்த்தார் என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் கட்சியில் பத்து தொகுதிக்கு மேல் நிற்பதற்கு தகுதியான வலுவான வேட்பாளர்கள் இருக்கிறார்களா? அடுத்த கட்சியை அழித்து/மிரட்டி உங்கள் கட்சியை வளர்க்க வேண்டும் என்று நினைக்காதிர்கள். இரண்டு MLA களை வைத்து கொண்டு கூட்டணி ஆட்சி அமைக்க நினைப்பது நியாயமா?


ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 19, 2025 01:42

இப்படி கண்ணாபின்னான்னு கேள்வி கேட்டு அண்ணாமலையை காண்டாக்கினால் Sri Renugambal Enterprises, க்கு அவரோட தலைவன் அமீத் சா கிட்டே சொல்லி ஈ.டி ரெயிடு விட்டுருவார். உடனே போயி கவனிச்சுங்க. அடுத்த பாதயாத்திரைக்குன்னு சொல்லி ஒரு கோடி கொடுத்துடுங்க. இல்லாட்டி விளைவுகள் பஜங்கரமா இருக்கும்.


Mariadoss E
ஜூலை 18, 2025 09:45

"தி.மு.க., அ.தி.மு.க., குட்டையில் ஊறிய மட்டைகள் என்று கூறியவர் காமராஜர்" அதுல ஒரு குட்டையில கெடந்துக்கிட்டு இன்னொரு குட்டையை குறை சொல்ல முடியுமா? முதல்ல நீங்க குட்டைய விட்டு வெளிய வாங்க.


venugopal s
ஜூலை 17, 2025 18:36

பாஜக இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியே வந்தால் அவர்கள் கூடவும் கூட்டணி அமைத்து விடுவார்கள் போல் உள்ளது. மாப்பிள்ளைக்கு அவ்வளவு பதவி வெறி!


மூர்க்கன்
ஜூலை 17, 2025 17:04

ஒரே குட்டை என்று சொன்னதால் காமராஜர் மானம் இருக்கும் பாஜக கட்சி அதிமுகவில் இன்னும் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது??? . அ தி.மு.க., கூட்டணியில் இருந்து பாஜ க ., வெளியேற தயாரா? குறைந்தபட்சம் மானத்தை காப்பாற்றுவதற்காக தனியாக போட்டியிட தயாரா? என்றும் மக்கள் கேட்கிறார்கள். ஆமா கட்சி தலைவர் சொல்லவேண்டியதை அல்லக்கை நீ எதுக்கு புலம்புர அண்ணாமலை ?? எப்படியாவது பாஜக அதிமுக கூட்டணியை உடைத்து நயினாருக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சியா?? திமுகவுக்கு மறைமுகமாக உதவியா?? ஒண்ணுமே புரியல எதிரிகளை கூட நம்பலாம் மன்னிக்கலாம் ஆனால் அனால் துரோகிகளை மன்னிக்க கூடாது??


Mario
ஜூலை 17, 2025 16:41

அதெல்லாம் சரி முதலில் நீங்க ஒரு கவுன்சிலர் ஆக பாருங்க.


Narayanan Muthu
ஜூலை 17, 2025 15:13

அண்ணாமலை தமிழக மக்கள் சோறுவேனா போடுவார்களாம் வோட்டு போடமாட்டங்களாம்


vivek
ஜூலை 17, 2025 14:52

ஏல ஓவியம்...அந்த விசிக கேட்ட 25 சீட்டு என்னாச்சு


மூர்க்கன்
ஜூலை 18, 2025 15:35

பத்து ?? நீ ஒத்து??


Mariadoss E
ஜூலை 17, 2025 14:02

மானமிருந்தா தனியா போட்டியிடனுமா? அப்ப முதல்ல நீங்க டிரை பண்ணுங்க. நீங்களும் சரி பழனிசாமியும் சரி எப்ப பார்த்தாலும் காங்கிரஸ், விசிகே, கம்யூனிஸ்ட் இவங்களையே கூட்டணிய விட்டு வெளிய வர சொல்லுறீங்களே உண்மைய சொல்லுங்க தோல்வி பயம் தானே? ஆட்சிக்கு வந்தா என்ன செய்வேனு சொல்லி ஓட்டுகளை அள்ள வேண்டியது தானே.....


Karthik Madeshwaran
ஜூலை 17, 2025 13:53

. ஆயிரம் தான் இருந்தாலும் எங்களுக்கு மாநில கட்சிகளே போதும். அதுவே சிறந்தது. தேசிய கட்சிகள் தேவையே இல்லை.


vivek
ஜூலை 17, 2025 14:53

காலம் முழுக்க கொத்தடிமை..பரம்பரை கொத்தடிமையாக இரு


Mettai* Tamil
ஜூலை 17, 2025 15:29

பத்தாயிரம் தான் இருந்தாலும் எங்களுக்கு தேசிய கட்சியே போதும். அதுவே சிறந்தது. ஊழல் இந்து விரோத கட்சிகள் தேவையே இல்லை.


Karthik Madeshwaran
ஜூலை 17, 2025 13:49

அண்ணாமலை காங்கிரஸ் கட்சியை பார்த்து சொன்னது உண்மையாகவே இருக்கட்டும். முதலில் பாஜக வரும் தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா ? முடியாதுல?? அடுத்தவரை கேள்வி கேட்கும்முன்பு நாம் அதற்கு தகுதியானவரா என்பதை சிந்திக்க வேண்டும். டெல்லியில் இருந்து டோஸ் விட்டால் தமிழக பாஜக கட்சியினரும் தான் படுகேவலமாக வாயை மூடி கொள்கிறார்கள் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு நீங்கள் தான். காமராஜர் கதை பற்றி பேசுவதால் பத்து பைசாவுக்கு பிரயோஜனம் அல்ல. அவரை ஒரு சாதிய தலைவராக அரசியல் லாபத்திற்காக மாற்றி ரொம்ப நாட்களாகி விட்டன. புதுசா ஏதாவது சொல்லுங்க ப்ரோ...