உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுபான்மை ஓட்டு வங்கியில் ஓட்டை தடுக்க முயற்சிக்கும் தி.மு.க., அரசு?

சிறுபான்மை ஓட்டு வங்கியில் ஓட்டை தடுக்க முயற்சிக்கும் தி.மு.க., அரசு?

சென்னை: நடிகர் விஜய் துவங்கியுள்ள த.வெ.க., வருகையால், சிறுபான்மையினர் ஓட்டு வங்கியில் ஓட்டை விழும் என்பதால், அதை சரிகட்டுவதற்கான முயற்சிகளை தி.மு.க., தலைமை கையில் எடுத்துள்ளது. தமிழகத்தில் இஸ்லாமியர், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் ஓட்டுகள், 13 சதவீதம் உள்ளன. தி.மு.க., கூட்டணிக்கு, இந்த ஓட்டுகள் கிடைத்து வருகின்றன. இதன் காரணமாக, கடந்த 2021 சட்டசபை, 2024 லோக்சபா தேர்தல்களில், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றது. வரும் 2026 சட்டசபை தேர்தலிலும், சிறுபான்மையினர் ஓட்டு வங்கியை தக்கவைக்க, தி.மு.க., தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்காக, சிறுபான்மையினருக்கு பல்வேறு திட்டங்கள், தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசு மட்டுமின்றி, தி.மு.க., சார்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இதற்கிடையே, விஜய் கட்சி வரவால், சிறுபான்மையினர் ஓட்டுகள், தி.மு.க.,விற்கு மொத்தமாக கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும் என தெரிய வந்துள்ளது. பல்வேறு சர்ச்சுகளில், இப்போதே விஜய்க்கு ஆதரவான பிரசார குரல் ஒலிக்கிறது. இது, தி.மு.க., தலைமையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சிறுபான்மையினர் நல ஆணையம் வாயிலாக கிறிஸ்துவர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், அந்த சலுகைகள், தகுதி வாய்ந்த மக்களை சென்றடையவில்லை என தெரிகிறது. சிறுபான்மை நல ஆணையத்தில் உள்ளவர்கள், இதில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. இதனால், சிறுபான்மையின மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதே நிலை தொடர்ந்தால், விஜய் கட்சிக்கு சிறுபான்மையினர் ஓட்டுகள் அதிகளவில் செல்லும் என தெரிகிறது. இதனால், உஷாரான தி.மு.க., அரசு, சிறுபான்மையினர் நல ஆணைய திட்டங்கள், மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க, திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் தலைமையில் சிறப்பு குழு அமைத்துள்ளது. இதில், தமிழ்நாடு வக்ப் வாரிய உறுப்பினர் சுபேர்கானுக்கும் இடம் அளிக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, திசைமாறும் சிறுபான்மை ஓட்டுகளை தக்கவைக்க முடியும் என, தி.மு.க., கணக்கு போடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தமிழன்
செப் 27, 2025 21:54

சர்ச் மற்றும் மசூதிகளில் இந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினால் அந்த குறிப்பிட்ட மத வழிபாட்டுத் தலங்களை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரின் ஓட்டு போட வேண்டுமே தவிர மத நிறுவனங்கள் முடிவு செய்யக்கூடாது இதுவரை திமுக மத நிறுவனங்களிடம் பேசி ஓட்டுகளை திருடி வெற்றி பெற்று வந்துள்ளது கண்கூடாக தெரிகிறது இனிமேலும் திமுக ஓட்டுகளை திருடுவதை மக்கள் அனுமதிக்க கூடாது


தமிழன்
செப் 27, 2025 21:52

திமுக 20 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வாய்ப்பு இல்லை. ஒருவேளை திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் விவசாயத்தை கைவிட வேண்டிய நிலைக்கு வரும் தோட்டக்கலை விவசாயம் இன்கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்து விட்டது நெல் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை கரும்பு கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை அவ்வினில் கலப்பு தீவன விலை பாதிக்கு பாதி உயர்த்தப்பட்டுள்ளது ஆனால் பால் கொள்முதல் விலை கடந்த ஐந்து வருடங்களில் மூன்று ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது விவசாயிகள் நஷ்டத்தில் சிக்கி தவிக்கின்றனர் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் சுத்தமாக விவசாயத்தை கைவிட வேண்டிய நிலைக்கு வரும் தமிழ்நாடு பிச்சைக்கார மாநிலமாக மாறிவிடும்


Sivaji ganesan
செப் 25, 2025 20:53

நான் 1954 முதல் பார்க்கிறேன்...தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தான் எம்ஜிஆர் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் வெற்றி கண்டார்...ஒரே ஒரு முறை கூட்டணி மாற்றினார்...அத்தனை மேப் தொகுதி அவுட்...இது தான் நிதர்சனம்.. கூட்டணி பலம் நிச்சயம் வெற்றி


Sivaji ganesan
செப் 25, 2025 20:50

ஆமாம் காங்கிரஸ் மட்டும் 25 தொகுதியில் வெல்லும்


Sivaji ganesan
செப் 25, 2025 20:48

விஜய் ரசிகர்கள் அனைவரும் பல்வேறு மதங்களில் இருக்கின்றனர்... கிருத்துவ தேவாலயங்களில் யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை... நிச்சயமாக சிறுபான்மை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.. உங்கள் சூழ்ச்சி பலிக்காது


Chandru
செப் 25, 2025 12:35

என்ன செய்தாலும் 25 தொகுதிகள் மேல் ஜெயிக்க வாய்ப்பே இல்லை


Sivaji ganesan
செப் 25, 2025 20:55

ஆமாம் நண்பரே..இந்த முறை அதிமுக பாஜக கூட்டணி 25 இடங்களில் காட்டவே கஷ்டம்...கமலாலயத்தில் வைத்தி சொன்னது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை