உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக ஆட்சி திராவிட மாடலா?; ராமரின் மாடலா?: சீமான் கேள்வி

திமுக ஆட்சி திராவிட மாடலா?; ராமரின் மாடலா?: சீமான் கேள்வி

சென்னை: தமிழகத்தில் தற்போது நடைபெறும் திமுக ஆட்சி திராவிட மாடலா? அல்லது ராமரின் மாடலா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தற்போது நடைபெறும் திமுக ஆட்சி திராவிட மாடலா? அல்லது ராமரின் மாடலா?. திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமன் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியது வியப்பு அளிக்கிறது. பகவான் ராமர் சாமியின் வழிவந்தவர்கள் என திமுக அரசின் மிக முக்கிய அமைச்சகப் பொறுப்பை வகிக்கும் அமைச்சரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.திமுகவின் சட்ட அமைச்சரே கூறியிருப்பதால் அறியாமல், தெரியாமல் தவறுதலாக கூறிவிட்டார் என்று யாரும் மறுப்பதற்கில்லை. இதுவரை திமுக தலைமையும் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பதிலிருந்து அக்கருத்தை திமுக முழுமையாக ஏற்று கொள்கிறது என்பதும் உறுதியாகிறது. ராமரை கடவுளாக வணங்கும் மக்கள், ராமரின் ஆட்சி என்பது வறுமை - ஏழ்மை, பசி - பஞ்சமற்ற, கொலை - கொள்ளை வளச்சுரண்டல், வன்புணர்வு அற்ற தூய நல்லாட்சியை, சொர்க்கத்தில் வாழ்வதைப் போன்ற பொற்கால ஆட்சியைத் தந்தார் என்கின்றனர்.

ராமரின் ஆட்சியா?

அப்படி ஒரு ஆட்சி தான் தற்போது தமிழகத்தில் நடைபெறுகிறதா? பட்டப்பகலில் படுகொலை, மலிவு விலையில் அரசே விற்கும் மது, கொத்துக்கொத்தாக கள்ளச்சாராய மரணங்கள், கட்டுக்கடங்காத கஞ்சா விற்பனை, குடிநீர் தொட்டியில் மலம், சத்துணவில் அழுகிய முட்டை, பள்ளிக்கூடம் முதல் பல்கலைக்கழகம் வரை சாதிய மோதல்கள் இதெல்லாம் தான் ராமரின் ஆட்சியா?

திராவிட மாடலா?

தமிழக சட்ட அமைச்சரின் திராவிட ராமர் ஆட்சி பற்றிய கூற்றினால் ஏற்பட்டுள்ள குழப்பத்தைப்போக்க தமிழகத்தில் தற்போது நடைபெறும் திமுக ஆட்சி என்பது திராவிட மாடலா? அல்லது ராமரின் மாடலா? என்பதை ஸ்டாலின் உடனடியாக நாட்டு மக்களுக்கு விளக்கி தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Matt P
ஜூலை 26, 2024 00:00

கருணாநிதி ஜி வழியில் ...கடமை என்று கமிஷன் பெறுவது, கண்ணியத்தோடு collection செய்வது கட்டுப்பாடு தவறாமல் corruption ...இது தான் எங்கள் வழி எங்கள் தலைவன் வழியும் என்று ஆட்சி போய் கொண்டிருக்கிறது .


சுலைமான்
ஜூலை 25, 2024 22:55

இது தான் பிசிறு மாடல் ஆட்சி. உனக்கு வேணும்னா ராஜபக்ஷ மாடல் ஆட்சி நடத்துவாங்க இலங்கைல. அங்க போயி கூவு


Anbuselvan
ஜூலை 25, 2024 22:37

முகமூடி போட்டு இருக்கிறார்கள் என எல்லோருக்கும் தெரியும். முகமூடியை யாராவது கிழித்தால் மறுபடியும் வேறொரு முகமூடி அணிந்து மக்களை ஏமாற்றுவார்கள். மக்களும் ஏமாற்ற படுகிறோம் என தெரிந்தே ஏமாறுவார்கள். தமிழகத்தின் தலை எழுத்து இதுதான்.


S. Narayanan
ஜூலை 25, 2024 21:09

பாவம் தூக்க கலக்கத்தில் உளறி கொட்டினார்.அதனால் தான் நிருபர்களை கண்டதும் ஓட்டம் பிடித்தார்


sankaranarayanan
ஜூலை 25, 2024 20:48

அயோத்தியில் ராமர் அந்த காலத்தில் வாழ்ந்தார் என்று சரித்கிரம் கூறுகிறது ஈரோட்டில் இராமர் - இராமசாமி நாயக்கர் அவர்கள் வாழ்ந்தார் என்பது இன்றைய கால செய்தி நடப்பு அதைத்தான் அமைச்சர் நயமாக எடுத்துரைக்கிறார் இதில் தவறு ஒன்றுமே இல்லை


தாமரை மலர்கிறது
ஜூலை 25, 2024 20:13

உங்களுக்கு புரியும்படி சொன்னால், திமுக ஆட்சி விஜயலட்மி மாடல் அரசு.


Anantharaman Srinivasan
ஜூலை 25, 2024 20:13

இந்துக்கள் ஓட்டை கவர அப்படி ஒரு பேச்சு. பெரியார் ராமசாமி வழி வந்தவர்களுக்கு இந்து கடவுள்களை பிடிக்காது.


Nagarajan S
ஜூலை 25, 2024 19:50

அவர் ஈரோடு ராம சாமியை நினைத்து ராமர் ஆட்சி என்று சொல்லியிருப்பார். ராமர் படத்தை, சிலையை உடைத்த இவர்களா பகவான் ராமர் ஆட்சியை நடத்துவார்கள்?


M Ramachandran
ஜூலை 25, 2024 19:37

இது பற்றி சிக்கன்கேபிநெட் தலைவி மும்முறை மாகா கலந்தாலோசித்து கொண்டிருக்கிறார் அது பற்றி முடிவு தன செல்ல பிள்ளை உதவி சப்பான் முதல்வராக்க அறிவித்த பிறகு சொல்லப்படும்


M Ramachandran
ஜூலை 25, 2024 19:33

இந்த கேள்வி ஒவ்வொரு தீ மு க்கா காரனுக்கும் சந்தேகம் வருகிரது . கடமய் கண்ணியம் கட்டு பாடு அப்பட்டி என்றால் ஏன்னா என்று ஒவ்வொரு ஊபிசுகளுக்கும் எழுகிறது


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை