உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பணம் இல்லாத அளவுக்கு அரசுக்கு நெருக்கடியா?: ஐகோர்ட் கேள்வி

பணம் இல்லாத அளவுக்கு அரசுக்கு நெருக்கடியா?: ஐகோர்ட் கேள்வி

சென்னை : செலவுக்கு பணம் இல்லாத அளவுக்கு, அரசின் நிதி நிலைமையில் நெருக்கடி நிலவுகிறதா' என, 141 கோடி ரூபாய் நிலுவைத்தொகை கேட்டு, சமையல் எண்ணெய் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.சென்னையைச் சேர்ந்த, 'கே.டி.வி.ஹெல்த் புட்' என்ற நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கே.டி.வி.கண்ணன் தாக்கல் செய்த மனு:சமையல் எண்ணெய் உற்பத்தியில், 1971 முதல் ஈடுபட்டுள்ளோம். சென்னை கொடுங்கையூரில் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. 2002ம் ஆண்டு, 'ஏ.டபிள்யு.எல்., அக்ரி பிசினஸ்' உடன் இணைந்து, 'சன்லேண்ட் சூரியகாந்தி எண்ணெய், ரூபினி பாமாயில், ரூபினி வனஸ்பதி' போன்ற சமையல் எண்ணெய் வகைகளை உருவாக்கி உள்ளோம். எண்ணெய் பொருட்களை இறக்குமதி செய்தல், மொத்தமாக பாமாயில் விற்பனை செய்தல் போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறோம்.

நீதிமன்ற உத்தரவு

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழக நுகர்பொருள் வாணிப கழகத்தில், 'டெண்டர்'கள் எடுத்து, பொது விநியோக திட்டத்தின் கீழ், சமையல் எண்ணெய் வழங்கி வருகிறோம். அந்த வரிசையில், 1 லிட்டர் கொள்ளளவு உடைய 600 லட்சம் பாமாயில் எண்ணெய் பாக்கெட்டுகள் வினியோகம் செய்வதற்கான டெண்டர், கடந்த பிப்., 17ல் கோரப்பட்டது.இந்த ஒப்பந்தத்தில் தேர்வு செய்யப்பட்டு, மார்ச் 13ல் அதற்கான உத்தரவை பெற்றோம். பின், டெண்டர் விதிமுறைகளின்படி, ஏப்ரல் முதல் மே வரை சமையல் எண்ணெய் வழங்கினோம். ஒப்பந்தப்படி பொருட்களை கொடுத்து முடித்தும், அதற்கான தொகை உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை.நிலுவை தொகையை விடுவிக்கக்கோரி, அரசுக்கு மே, ஜூன் மாதங்களில் கடிதங்கள் அனுப்பப்பட்டன. அனுப்பிய, 'பில்'களில் பணம் பெற்றது போக, 141 கோடியே 22 லட்சத்து 72,190 ரூபாய் வரை, இன்னும் பாக்கி உள்ளது. ஒப்பந்த நிபந்தனையின்படி, பொருட்களை சப்ளை செய்ததும், 30 நாட்களில் தொகையை வழங்க வேண்டும். உரிய காரணம் இன்றி, 30 நாட்களுக்குள் பணம் தராவிட்டால், வட்டியுடன் கோர உரிமை உள்ளது என, உயர் நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டுள்ளது.

பதில் இல்லை

எனவே, நிலுவைத் தொகையை, 18 சதவீத வட்டியுடன் செலுத்தக்கோரி, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. நிலுவைத் தொகை கேட்டு, பலமுறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பியும், இதுவரை தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் தரப்பில் எந்த பதிலும் இல்லை.பொருட்களுக்கான தொகையை உரிய நேரத்தில் வழங்காததால், எங்கள் நிறுவனத்துக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, நிலுவைத் தொகையை, 18 சதவீத வட்டியுடன் உடனே விடுவிக்க உத்தரவிட வேண்டும். மேலும், இந்த வழக்கில் உரிய முடிவு எட்டும் வரை, நிலுவைத் தொகையை வட்டியுடன் நீதிமன்றத்தில் செலுத்த, தமிழக நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாாரர் நிறுவனம் தரப்பில், 'சமையல் எண்ணெய் தொடர்ந்து வினியோகித்து வருகிறோம். நிலுவைத் தொகை, 200 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. எங்களுக்கு பணம் வழங்காமல், அடுத்த டெண்டர் கோரும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது' என்று, தெரிவிக்கப்பட்டது.

என்ன நடக்கிறது?

இதையடுத்து, நீதிபதி கூறியதாவது:கடந்த இரண்டு வாரங்களாக, ஓய்வுகால பலன்கள் வழங்கப்படவில்லை; அரசு வழங்க வேண்டிய தொகைகள் தரப்படவில்லை என, வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.மாநிலத்தில் என்ன நடக்கிறது; மாநில அரசு முன்னுதாரணமாக திகழ வேண்டும். வழங்க வேண்டிய தொகையை தராமல் இருப்பது, எதைக் காட்டுகிறது; ஒருவேளை வழங்க வேண்டாம் என்ற எண்ணத்தில் இருக்கிறதா அல்லது மாநிலத்தில் அந்தளவுக்கு நிதி நெருக்கடி நிலைமை நிலவுகிறதா? இது, அரசை நடத்தும் வழியல்ல; இதுபோன்ற எண்ணம் ஏற்படுவதை மாற்ற, அரசு முன்வர வேண்டும்.மனுதாரருக்கு நிலுவை தொகை வழங்குவது குறித்து, தமிழக அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்க, அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிடப்படுகிறது.விசாரணை, வரும் 27ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

theruvasagan
ஜூன் 25, 2025 21:51

எல்லா நிதியும் சொல்லாம கொள்ளாம இன்னொரு நிதியில் சேர்ந்து போச்சு யுவர் ஹானர். எங்களால தடுத்து நிறுத்த முடியல.


Barakat Ali
ஜூன் 25, 2025 21:12

திமுக அடிமைகள் கொடுக்கும் முட்டுக்கள் நல்ல சிரிப்பூட்டல் ..... டாஸ்மாக் வருமானத்தை நம்பி ஒரு அரசு .....


ராஜா
ஜூன் 25, 2025 19:30

கருணை அடிப்படையில் காசு வாங்கி தாங்க எசமான்


Sami
ஜூன் 25, 2025 18:55

சமையல் எண்ணெய் நிறுவனமே ,கட்டிங் கமிஷன் எல்லாம் சரியாக கொடுத்தாயா இல்லையா.இந்த கேள்வியை எண்ணெய் நிறுவனத்திடம் கோர்ட் ஏன் கேட்கவில்லை.


Amar Akbar Antony
ஜூன் 25, 2025 17:19

நெருக்கடி? அதுவும் யாருக்கு? இருக்கவே இருக்கு கலாநிதி


Vel1954 Palani
ஜூன் 25, 2025 17:12

அட ஏங்க இப்படி சொல்லிப்பிட்டிங்க . அரசுகிட்ட நிறைய பணம் இருக்கு. 90 சதவீதம் வாக்குறுதி நிறைவேத்திட்டாங்க. கடலுக்குள்ள பேனா சிலை வைக்கிற அளவுக்கு பணம் இருக்கு.


sridhar
ஜூன் 25, 2025 16:14

யார் கேட்டார்கள் இலவச பஸ்ஸும் மாசம் ஆயிரம் ரூபாயும் . பிச்சை எடுத்து தானம் செய்வது அறிவுள்ளவன் செயலா அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மட்டும் இல்லை , சம்பளமே நின்று விடும். அறிவிலி கூட்டம்.


மகிமைசெல்வி
ஜூன் 25, 2025 15:37

மோடி ஏமாற்றி விட்டார் என்று சொல்லுவார்கள்.


Balaji
ஜூன் 25, 2025 11:51

எப்பவும்போல மத்திய அரசு மீது பழி போட்டு தப்பித்துக்கொள்வர். மாநில வருவாய் கொண்டு என்ன செய்கிறார்கள்?


Kjp
ஜூன் 25, 2025 11:38

ஏன் நிதி நெருக்கடி என்பது அரசியலில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு எல்லாம் தெரியும்.ஆனால் முட்டு கொடுப்பது அவர்கள் கடமை.மற்ற மாநிலங்கள் இப்படியா ஆட்சி நடத்துகின்றன.ஆழம் தெரியாமல் காலை விட்டு ஆயிரம் ரூபாய் இலவச பயணம் ஆடம்பரமான விளையாட்டு போட்டிகள் தந்தை பெயரில் சிலைகள் பன்னாட்டு அரங்கம் சமாதி மணி மண்டபம் இன்னும் எத்தனையோ இப்போது இந்தியாவில் கடன் வாங்குவதில் முதல் இடத்திற்கு கொண்டு வந்து விட்டார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை