உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீதிபதி பாகுபாடாக நடந்து கொள்கிறாரா

நீதிபதி பாகுபாடாக நடந்து கொள்கிறாரா

மதுரை: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதித்துறை கடமைகளை நிறைவேற்றுவதில் ஜாதி பாகுபாட்டுடன் நடந்து கொள்வதாக கூறும் குற்றச்சாட்டை இன்னும் வலியுறுத்துகிறாரா என்பது குறித்த நிலைப்பாட்டை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆஜராகி தெரிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. தஞ்சாவூர் தமிழ் பல்கலையில் இணை பேராசிரியராக பழனிவேலு நியமிக்கப்பட்டார். அவருக்கு போதிய தகுதிகள் இல்லை; நியமனம் சட்டவிரோதமானது. அதை ரத்து செய்து அப்பணியிடத்தில் தன்னை நியமிக்க உத்தரவிட வேண்டும் என சென்னை வெற்றிச்செல்வன் உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். தனி நீதிபதி,'தேர்வுக் குழு பரிசீலித்து பழனிவேலுவை நியமித்துள்ளது. விதிமீறல் இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,' என 2022 ல் உத்தரவிட்டார். இதை எதிர்த்து வெற்றிச்செல்வன் மேல்முறையீடு செய்தார்.

நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வு பிறப்பித்த உத்தரவு:

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் எங்களில் ஒருவரான நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது கடமைகளை நிறைவேற்றும்போது ஜாதி, சமூக பாகுபாடு காட்டுகிறார் என அவதுாறு குற்றச்சாட்டுகளை முன்வைப்பது எங்களின் கவனத்திற்கு வந்தது. இவ்வழக்கில் எதிர்மனுதாரரான பழனிவேலு சார்பில் ஆஜராகி வாதிட வாஞ்சிநாதன் வக்காலத்து தாக்கல் செய்ததை கவனித்தோம். எங்களில் ஒருவர் மீது தவறான நோக்கம் கற்பிக்கப்பட்டுள்ளதால் அவரை ஆஜராக உத்தரவிட்டோம். ஆஜரானார். நேரடியாக பதிலளிக்கவில்லை நீதிபதி சுவாமிநாதன் கடமைகளை நிறைவேற்றும்போது ஜாதி பாகுபாட்டை வெளிப்படுத்துகிறார் என்பதை பற்றிய தனது நிலைப்பாட்டை அவர் தொடர்ந்து பராமரிக்கிறாரா என கேள்வி எழுப்பப்பட்டது. வாஞ்சிநாதன் நேரடியாக பதிலளிக்கவில்லை. அவர்,'பழனிவேலுவிற்காக ஆஜராகும் வழக்கறிஞர் நானல்ல. அவருக்கு ஆவணங்களை திருப்பி அனுப்பிவிட்டேன்,' என்றார். இவ்வழக்கில் வாஞ்சிநாதனின் தொடர்பு துண்டிக்கப்பட்டாலும், நாங்கள் துவங்கிய நடவடிக்கை முடிவுக்கு வராது.பொருத்தமற்ற செயல்பாடு காரணமாக வஞ்சிநாதன் வழக்கறிஞராக தொழில் செய்ய இந்திய பார் கவுன்சிலால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்ட பிறகு அவர் தனது செயலை மேம்படுத்திக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் தனது செயல்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. அவர் தொடர்ந்து நீதித்துறையை அவதுாறு செய்து வருகிறார். சமூக ஊடகங்களில் அவரது வீடியோக்கள் நிறைந்துள்ளன. தீர்ப்புகளை விமர்சிப்பது ஒன்று; ஆனால் நீதிபதிகளின் மீது குறை கூறுவது முற்றிலும் வேறு விஷயம்.

உச்சநீதிமன்றம் கூறுவது என்ன

உச்சநீதிமன்றம்,'நீதிமன்ற தீர்ப்புகளை நாட்டின் எந்தவொரு குடிமகனும் விமர்சிக்க முடியும் என்பதில் சந்தேகமும் இல்லை. இருப்பினும், நீதிபதியை குறைகூறவோ அல்லது நீதிபதியின் நல்லெண்ணத்தை கேள்விக்குள்ளாக்குவதோ அல்லது நீதிபதியின் திறன் குறித்து கேள்வி எழுப்பவோ உரிமை இல்லை. நீதிபதிகள் நீதி வழங்கும் அமைப்பின் ஒரு அங்கம். நீதிபதி மீதான அவதுாறான குற்றச்சாட்டுகளை கண்டுகொள்ளாமல் கண்களை மூடிக்கொண்டிருக்க முடியாது. இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாவிடில் முழு நீதி வழங்கும் அமைப்பின் மீது மக்கள் நம்பிக்கை இழப்பர். இது சட்டத்தின் மாண்பை பாதிக்கும்,' என தெரிவித்துள்ளது.வாஞ்சிநாதனின் செயல்பாடு நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகும். நீதிபதி சுவாமிநாதன் தனது நீதித்துறை கடமைகளை செய்யும்போது ஜாதி ரீதியான பாகுபாட்டுடன் நடந்து கொள்வதாகக் கூறும் குற்றச்சாட்டை இன்னும் வாஞ்சிநாதன் நிலைநிறுத்துகிறாரா என நாங்கள் கேள்வி எழுப்பினோம். வாஞ்சிநாதன் பதிலளிக்க மறுத்துவிட்டார். இக்கேள்வியை எழுத்துப்பூர்வமாக எழுப்புமாறு எங்களிடம் வலியுறுத்தினார். அவர் ஜூலை 28 ல் நேரில் ஆஜராகி குற்றச்சாட்டு குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Anbalagan
ஜூலை 26, 2025 11:32

சென்னை நீதிமன்ற அமர்வில் தாக்கலாக வேண்டிய வழக்கு மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப் பட்டால்,அதை ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கப் பட்டால் அது கோர்ட் பிக்கிங் என்ற வகைப்பட்ட ஒழுங்கீனம் தானே? அதைச்சுட்டிக் காட்டி விமர்சித்தால் அது எப்படி நீதிபதியை விமர்சித்தது ஆகும்?


MP.K
ஜூலை 26, 2025 09:51

நீதிபதிகளையும் அவரது சாதிய பின்புலத்தையும் அவர் விசாரிக்கும் வழக்குகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் நிலையில் இருக்கிறோம். இப்படியே போனால் அவளோ தான் ஏற்கனவே ஒரு நீதிபதி வீட்டில் எறிந்த நிலையில் பணத்தை எடுத்துள்ளனர் அது அந்த நீதிபதியை பதவி நீக்கம் செய்யும் அளவுக்கு சென்றுள்ளது என்பது தான் இப்போதைய நிலை. நீதிமன்றங்கள் நிதிக்கு அடிமையாகாமல் இருந்தால் எல்லோருக்கும் நல்லது மக்கள் வைத்திருக்கும் கடைசி நம்பிக்கை நீதிமன்றங்கள் தான்.


pmsamy
ஜூலை 26, 2025 09:48

நீதிமன்றங்களில் பாகுபாடு ஊழல் நடப்பது உண்மை


Ravi Kulasekaran
ஜூலை 26, 2025 08:42

நீதிபதிகள் கடவுள்கள் அல்ல எந்த நீதிபதி தவறு செய்தாலும் உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் என்ற பாகுபாடு பார்க்காமல் பொது வெளியில் விசாரணை நடத்தப்படவேண்டும் தண்டனை வழங்க வேண்டும் நீதிபதிகள் தவறுகள் செய்தால் முதல் தகவல் அறிக்கை கிடையாது என்ற நடைமுறையை மாற்ற ஏன் நாடாளுமன்ற வரை கொண்டு போக வேண்டும்


Muthu Vaijayanthi
ஜூலை 26, 2025 09:59

ஒரு நீதிபதி வீட்டில் எரிந்த நிலையில் கட்டு கட்டாக பணம் கைப்பற்றப்படுகிறது அந்த பணம் அவர் வீட்டிற்கு எவ்வாறு வந்தது என்று வரிகட்டும் ஏமாளி பொது ஜனம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லையா சப்போஸ் ஒரு நீதிபதி வீட்டில் இரண்டு பிணங்கள் கிடைக்கிறது என்றால் கூட எஃப் ஐ ஆர் போடக்கூடாதோ, அதையும் விசாரணை செய்யக்கூடாதோ, நீதிபதிகள் என்பவர்கள் சர்வீஸ் கமிஷன் மூலம் வேலை வாய்ப்பு தேடி வருபவர்கள் தானே அல்லது அவர்கள் வேற்று கிரகத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறார்களா அவர்கள் அவர்களின் ஒரு சதவீதமோ அதற்கு குறைவாகவோ தவறு செய்பவர்கள் இருக்க மாட்டார்கள் என்பதை எவ்வாறு உறுதி செய்ய இயலும் தவறு நடக்கும் போது அது எவ்வாறு நடந்தது என்பதை பொது ஜனங்களுக்கு தெரிவிப்பது தானே நேர்மை நீதி பரிபாலனம் செய்யும் இடங்களிலே நீதி இல்லை என்றால் அவர்கள் செலுத்தும் நீதி எந்த வகையில் நீதியா ஆகும் .


SIVA
ஜூலை 26, 2025 08:37

இரண்டு லட்சம் கோடி ஊழல் நந்தா வழக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெறுகின்றது, ஒரு தனி நபர் அரசு இன்டென்ட் இணைப்பை மௌண்ட்ட் ரோடு வழியாக திருட்டு தனமாக உபயோகித்தார் இதற்கு தீர்ப்பு வழங்க 20 ஆண்டுகள் ஆகும் , கடல் அருகில் கட்டடங்கள் கட்டக்கூடாது என்பது உலக அளவில் உள்ள விதி , இங்கு மெரினா பீச்சை சுடுகாடாக்க மாற்ற இரவு பகல் பாராமல் விசாரணை .....


Murali
ஜூலை 26, 2025 08:14

உண்மை, உண்மை, உண்மை....


DRK
ஜூலை 26, 2025 08:02

உயர்நீதிமன்றத்தில் உள்ள எல்லா பெஞ்சுகளிலும் இரண்டு நீதிபதிகள் கொண்டு அமைக்கலாம்.


sridhar
ஜூலை 26, 2025 09:39

நிறைய பெஞ்சுகள் இருக்குமே . மக்கள் உட்கார கூட பெஞ்சு போட்டிருக்காங்களே , அத்தனை பெஞ்சுகளிலும் ஒவ்வொரு பெஞ்சில் இரண்டு நீதிபதி என்றால் கட்டுப்படி ஆகாதே .


T.sthivinayagam
ஜூலை 26, 2025 07:57

வழக்குகள் நீதிமன்றம் செல்லும் நிலை மாறி நீதிபதிகளை நோக்கி செல்லும் நிலையாக மாறி வருகிறது என்று பரவலாக மக்களும் ஊடகங்களும் கூறி வருகின்றனர்


J.Isaac
ஜூலை 26, 2025 12:58

உண்மை


தியாகு
ஜூலை 26, 2025 07:20

கட்டுமர திருட்டு திமுக நாசமாக்காத துறைகளே இல்லை, அதில் இதுவும் ஒன்னு.


சமீபத்திய செய்தி