உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகர் அஜித்துக்கு வலை வீசுகிறதா தமிழக பா.ஜ.,?

நடிகர் அஜித்துக்கு வலை வீசுகிறதா தமிழக பா.ஜ.,?

சென்னை : த.வெ.க., தலைவர் விஜய், கரூரில் கடந்த மாத இறுதியில் பிரசாரம் மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில், விஜய்க்கு ஆதரவாக, பா.ஜ., நிர்வாகிகள் கருத்து கூறி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தற்போது, கார் பந்தயத்தில் வெற்றி பெற்றதற்காக, நடிகர் அஜித்துக்கு, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

நயினார் நாகேந்திரனின் வாழ்த்து செய்தி:

சர்வதேச அளவிலான கார் பந்தயங்களில் களமிறங்கி, பல வெற்றிகளை குவித்து வரும் அஜித்குமாரின் ரேசிங் அணி, 2025ம் ஆண்டிற்கான, 'கிரெவென்டிக் ஐரோப்பிய என்டியுரென்ஸ் சாம்பியன்ஷிப்' தொடரில் ஒட்டுமொத்தமாக மூன்றாம் இடம்பிடித்து, நம் தேசத்துக்கு பெருமை சேர்த்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றியின் வாயிலாக, நம் பாரத நாடு மட்டுமன்றி, நம் தமிழகத்தின் பெருமையையும் உலகறியச் செய்திருக்கிறார் அஜித். மென்மேலும் அவரது அணி பல வெற்றிகளை குவிக்க என் மனமார்ந்த வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நடிகர் அஜித் குமாரை, தங்கள் பக்கம் இழுத்து அவரை, பா.ஜ.,வுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வைக்கும் முயற்சிதான், நாகேந்திரனின் வாழ்த்துச் செய்தி என அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை