உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திவால் ஆகும் நிலையில் இருக்கிறதா தமிழக அரசு? அண்ணாமலை கேள்வி

திவால் ஆகும் நிலையில் இருக்கிறதா தமிழக அரசு? அண்ணாமலை கேள்வி

சென்னை: 'தி.மு.க., ஆட்சியில், தமிழகம் கடன் கார மாநிலமாக மாறியிருக்கிறது. திவால் ஆகும் நிலையில் இருக்கிறதா தமிழக அரசு?' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழகம் முழுவதும் உள்ள 385 மாவட்ட கல்வி அலுவலகங்களில் இணையதள இணைப்புக்கான கட்டணம், பல மாதங்களாகச் செலுத்தப்படாததால், இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிய வருகிறது. இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஆசிரியர்களின் சம்பளப் பட்டியல் தயாரிப்பதில் இடையூறு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிய வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mca90l5w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தி.மு.க., ஆட்சியில், தமிழகம் கடன்கார மாநிலமாக மாறியிருக்கிறது. சுமார் 8.5 லட்சம் கோடி ரூபாய் வரை கடனில் இருக்கிறது தமிழகம். வாங்கும் கடன் முழுவதும், அன்றாடச் செலவுகளுக்குத் தான் பயன்படுகிறதே தவிர, கடன் வாங்கும் உண்மையான நோக்கத்துக்குப் பயன்படுத்தப்படுவதில்லை என்று, சி.ஏ.ஜி., தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கான இணைய தள இணைப்புக் கட்டணம் கூடச் செலுத்த முடியாமல், அன்றாடச் செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலையில் இருக்கிறதென்றால், உண்மையில், தி.மு.க., அரசு, தமிழக அரசின் நேரடி வரி வருமானத்தையும், ஜி.எஸ்.டி.,யில் தமிழகத்தின் பங்காகக் கிடைக்கும் சுமார் 70% நிதியையும் எந்த வகையில் செலவு செய்கிறது என்ற கேள்வி எழுகிறது. இந்த நிதி எல்லாம் எங்கே செல்கிறது? திவால் ஆகும் நிலையில் இருக்கிறதா தமிழக அரசு? முதல்வர் ஸ்டாலின் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

pmsamy
டிச 23, 2024 16:10

பாவம் வயிறு எரிச்சல்


அப்பாவி
டிச 23, 2024 05:55

அண்ணாச்சிக்கு ஒரே சந்தோஷம்.


Anantharaman Srinivasan
டிச 22, 2024 21:28

அரசு தான் திவால். மந்திரி MLA MP கவுன்சிலர்கள் எல்லோரும் மிட்டா மிராசுதாரர்கள்.


Nagarajan S
டிச 22, 2024 20:05

எஸ் எஸ் எ திட்டத்திற்கு மாநில அரசு ஒத்துழைத்தால் நிச்சயமாக மத்திய அரசு மீதமுள்ள நிதியை ஒதுக்கும். மும்மொழி திட்டத்திற்கு பிற மாநிலங்கள் ஒத்துழைக்கும் போது திமுக மட்டும் எதிர்ப்பதால் மத்திய அரசு நிதியை நிறுத்தி வைத்துள்ளது.


ஸ்டாலின் ::"நான் திராவிட இனத்தை சேர்ந்தவன்"
டிச 22, 2024 19:59

திமுக நான்காவது பைலை ரிலீஸ் செய்யவா நான்குமாதம் லண்டனுக்கு சென்றார் அப்போ.... எக்ஸெல் பயிற்சி எடுக்கத்தான் அங்கே சென்றாரா? இங்கேயே எம்எஸ் ஆபீஸ் பயிற்சி நிலையங்கள் நிறைய இருக்கே. ஒருவேளை இங்கே சென்றால் யாராவது பார்த்து அசிங்கமா போயிடும் என்று நினைத்திருக்கலாமோ!


பரதன் ,தமிழக ஒன்றியம்,இந்தியா...
டிச 22, 2024 21:49

திராவிடம் என்றாலே தற்குறி இனம் என்று அர்த்தம்....


SAMANIYAN
டிச 23, 2024 10:15

உங்களை போன்ற கொத்தடிமை இருக்கும் வரையில் திமுகவை ஒருத்தனும் அசைக்க முடியாது..பெருமையா இருக்கு நண்பா..நல்லா இருப்பிங்க..


ஸ்டாலின் ::"நான் திராவிட இனத்தை சேர்ந்தவன்"
டிச 22, 2024 19:58

லண்டன் RETURN :: 2014 இல் காங்கிரஸ் விட்டு சென்ற கடன் 54 லக்ஸ் கோடி , இது 60 ஆண்டுகளில்.ஆனால் உங்க உத்தமர் மோடி ஆட்சியில் இப்போ 205 லக்ஸ் கோடி அதாவது 10 வருடத்தில் 150 லக்ஸ் கோடி கடன் வாங்கி குவித்து உள்ளார் , இதனால் இந்தியா திவால் ஆகாதா , இதற்கு லண்டன் எல்லாம் போக தேவையில்லை சுய அறிவு இருந்தா போதும்.


T.sthivinayagam
டிச 22, 2024 19:27

இதெ சொல்ல அண்ணாமலை சாருக்கு எப்படி மனம் வருது மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய பணத்தை வாங்கி தர முடியாத மத்தியில் ஆட்சி செய்யும் கட்சியின் மாநிலத்தலைவர்


Bala
டிச 22, 2024 20:22

மனசாட்சியே இல்லாம கருத்து போறீங்க?


N.Purushothaman
டிச 22, 2024 18:27

திராவிட மாடலால் தமிழகம் திவால் ...விடியல் அரசின் சாதனை ...


lana
டிச 22, 2024 17:59

காசு கொடுத்தால் மட்டும் இந்த மாங்காய் மாடல் அரசு கலட்டி தள்ளி விடும். 16 கோடி செலவு செய்து கட்டிய பாலம் பல் இளிக்கிறது. 4000 கோடி சென்னை நக்கி கொண்டு சென்றது. இன்னும் பணம் வேண்டும். எதுக்கு


chinnamanibalan
டிச 22, 2024 17:42

கடந்த 20 ஆண்டுகளாக, தொடர்ந்து அரசு வாங்கியுள்ள பல லட்சம் கோடி கடனுக்கு, வட்டி கட்ட பெருமளவில் செலவு செய்வது கண்கூடு. இந் நிலையில், அரசின் அன்றாட செலவுகளுக்கு கூட சிரமம் ஏற்படவே செய்யும்.


சமீபத்திய செய்தி