உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவசாயத்தில் ரூ.2 கோடி வருமானமா? அமைச்சருக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

விவசாயத்தில் ரூ.2 கோடி வருமானமா? அமைச்சருக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விவசாயத்தின் மூலம் 2 கோடி ரூபாய் வருமானம் ஈட்ட முடியுமா?' என, தமிழக வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து, தி.மு.க.,வைச் சேர்ந்த அமைச்சர் பன்னீர்செல்வத்தை விடுவித்த கீழமை நீதிமன்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இதற்கு எதிராக பன்னீர்செல்வம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'பன்னீர்செல்வம் அடிப்படையில் ஒரு விவசாயி. எனவே, அவர் விவசாயத்தின் வாயிலாக ஈட்டக்கூடிய வருமானத்தையும், அவரது சொத்து மதிப்பில் காட்ட உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது' என வாதங்களை முன் வைத்தார். வழக்கு தொடர்பான ஆ வணங்களை படித்து பார்த்த நீதிபதிகள், 'அமைச்சரின் மனைவி, 2 கோடி ரூபாயை, விவசாயத்திலிருந்து வருமானமாக ஈட்டியதாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்த காலத்தில் 2 கோடி ரூபாயை, விவசாயம் மூலமாக ஒருவர் எப்படி வருமானமாக ஈட்ட முடியும்?' என கேள்வி எழுப்பினர். அதற்கு, 'அமைச்சரின் மனைவி, வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களிலும் ஈடுபடுகிறார். மேலும், வாகன விற்பனையிலும் ஈடுபடுகிறார். இதற்காக முறையாக வருமான வரியையும் செலுத்துகிறார். ஆனால், அவருடைய வருமானத்தையும் அமைச்சரின் வருமானத்துடன் இணைப்பது தான், இங்கு பிரச்னையே' என பதில் அளிக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், 'இது சம்பந்தமாக, உயர் நீதிமன்றத்தை மனுதாரர் நாடலாம்' என அறிவுறுத்தல் வழங்கி, மனுவை திரும்ப பெறுமாறு கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, பன்னீர்செல்வம் தரப்பில் மனு திரும்ப பெறுவதாக தெரிவிக்கப்பட்டது - டில்லி சிறப்பு நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Ethiraj
ஆக 14, 2025 07:34

1 % of gross earnings in agriculture to be levied as incometax .This will reduce black money.


RAMAKRISHNARAJU
ஆக 14, 2025 07:11

18000 முடை நெல்க்கு 300 எக்கர் நிலம் வேண்டும். எங்கு கொள்ளை அடித்தது.


Gajageswari
ஆக 14, 2025 05:31

விவசாய வருமானத்திற்கு குறைந்த பட்ச வரி விதிப்பு தேவை


baala
ஆக 16, 2025 11:00

விவசாயம் பற்றி தெரியுமா?


Kannan
ஆக 13, 2025 15:26

கடந்த 20 ஆண்டுகளில் இவர்களது ஆண்டு வருவாயை கணக்கிட்டாலே சுருட்டி சம்பாதித்தது தெரிந்துவிடும்....


V Venkatachalam
ஆக 13, 2025 12:58

சூப்பர் கோர்ட் நீதிபதிகள் இந்த மாதிரி கேள்வி கேட்டாங்க.அபிஷேக் மன்னு சிங்வி மற்றும் கபீலு சிபலு இவங்க எல்லாம் எங்கே போனாங்க? அடுத்த பிளான் மெட்ராஸ் ஹை கோர்ட்டை மடக்குவது எப்புடி? முரசொலி கையில் வச்சிருக்கவன் அடுக்கி வச்சிருக்கவன் வாங்குறவன் விக்கிறவன் எல்லாரும் ஐடியா தரலாம்.


நாஞ்சில் நாடோடி
ஆக 13, 2025 11:42

விஞ்ஞானத் திருடர்கள்...


திகழ்ஓவியன்
ஆக 13, 2025 12:22

ஜெயா திராட்சை தோட்டத்தில் ஒரு ஏக்கர் 10 கோடி இது எல்லாம் ஜுஜுபி


Anand
ஆக 13, 2025 11:40

ஒருவேளை, தங்கத்தை விளைவித்திருப்பார்களோ?


Anbuselvan
ஆக 13, 2025 11:39

ஒரு பெரிய அளவில் விவசாயம் செய்பவர் 18000 மூட்டை நெல் அறுவடை செய்து விற்றால், இரண்டு கோடி வருமானம் லாபம் இல்லை கிடைக்கும். ஒரு கிலோ நெல்லின் விலை கிட்டத்தட்ட ருபாய் 22 ஆகும். 50 கிலோ மூட்டைக்கு ருபாய் 1100 கிடைக்கும். இவர் லாபம் என கூறி இருந்தால், நீதிபதிகளின் சந்தேகத்திற்கு விவசாய அறிஞர்களிடம் கேட்டு தீர்த்து கொள்ளலாம்.


VSMani
ஆக 13, 2025 11:35

விவசாயம் செய்து நஷ்டமடைந்து விரக்தியில் எத்தனையோ விவசாயிகள் தற்கொலை செய்யும் நம் நாட்டில் விவசாயத்தில் ரூ.2 கோடி வருமானம். நம்புகிறமாதிரியா இருக்கு? அமைச்சருக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி கேட்டால் மட்டும் போதுமா? தண்டனை கொடுக்கவேண்டாமா?


venugopal s
ஆக 13, 2025 10:42

ஈரோடு, கோவை, நாமக்கல் மாவட்டங்களில் வந்து பாருங்கள் எத்தனை விவசாயிகள் வருமானவரி கட்டாமல் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த மாட்டுப்பண்ணை கோழிப்பண்ணை போன்ற தொழில்களில் ஈடுபட்டு கோடீஸ்வரர்கள் ஆகி இருக்கின்றனர் என்று தெரியும்!


Anand
ஆக 13, 2025 11:38

அவிங்க பரம்பரையாக அந்தந்த தொழிலில் ஈடுபட்டு நேர்மையாக சம்பாதிப்பவர்கள். உன் திருட்டு திராவிஷ தலைவனுங்களை போல திருட்டு புரட்டு, ஊரை அடித்து உலையில் போடுவது, ஊழல் என அணைத்து சமூக விரோத செயல்களையும் செய்து சம்பாதித்ததல்ல..


theruvasagan
ஆக 13, 2025 17:37

வேணு. எதுக்கு கஷ்டப்பட்டு இப்படியெல்லாம் முட்டு குடுக்கணும். மணி பிளான்ட் வச்சு சாகுபடி பண்ணாரு. அதுல கோடி கோடியா வருமானம் வரது சாத்தியம்தானே்னு முரட்டு முட்டா குடுக்கலாம்ல.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை