உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொங்கல் பரிசில் ரூ.1,000 உண்டா?

பொங்கல் பரிசில் ரூ.1,000 உண்டா?

சென்னை: தமிழகத்தில், 2.20 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான அரசாணை, நேற்று முன்தினம் இரவு வெளியானது. அதில், 1,000 ரூபாய் பரிசு இடம் பெறவில்லை. இது, கார்டுதாரர்கருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.கடந்த, 2006 - 11 தி.மு.க., ஆட்சியில், முதல்வராக இருந்த கருணாநிதி, பொங்கலை முன்னிட்டு முந்திரி, திராட்சை, ஏலம், வெல்லம், பச்சரிசி அடங்கிய பரிசு தொகுப்பு வழங்குவதை அறிமுப்படுத்தினார்.கடந்த 2011 - 2016ல், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தலா, 100 ரூபாய் ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, 2 அடி கரும்பு ஆகியவை வழங்கப்பட்டன.பழனிசாமி ஆட்சியில், 2019, 2020ல் பொங்கல் பொருட்களுடன், தலா, 1,000 ரூபாய் ரொக்க பணம் வழங்ப்பட்டது. மிகவும் அதிகமாக, 2021 பொங்கலுக்கு தலா, 2,500 ரூபாய் வழங்கப்பட்டது.கடந்த, 2022 பொங்கலுக்கு, ரொக்க பணம் இல்லாமல், மளிகை பொருட்கள், கரும்பு உட்பட, 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு பொங்கலுக்கு, மீண்டும் 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டில், அது நிறுத்தப்பட்டு உள்ளது.இந்நிலையில், சென்னையில் நேற்று அமைச்சர் உதயநிதி அளித்த பேட்டியில், ''பொங்கல் பரிசு தொகுப்பில், ரொக்கம் வழங்குவது குறித்து, முதல்வர் முடிவு எடுப்பார்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Matt P
ஜன 05, 2024 08:21

கரும்பு வைச்சிருக்கும் அம்மாகிட்ட சிரிப்பை காணலை. வீட்டில போய் சிரிப்பாங்களா இருக்கும் இவனுக பொழைப்பை நினைச்சு.நம்ம வைச்சு நாடகம் காட்டுறானுக என்று.


ram
ஜன 04, 2024 11:45

என்ன இவர்கள் அப்பன் வீடு காசா, மக்கள் மற்றும் கடன் பணம் தானே, இப்போது ஆறு லட்சம் கோடி கடன் இந்த திருட்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இன்னும் ஒரு லட்சம் கோடி கடன் இந்த வருடம் வாங்க போகிறார்கள், அப்புறம் கஜானா காலி என்று அரசு ஊழியர்களுக்கு சம்பளம் ஹோ ஹாயா.


Chennaivaasi
ஜன 04, 2024 11:40

இப்படி செலவு செய்து தான் முதலீட்டு செலவு செய்ய முடியாமல், சாலை மற்றும் உட்புற கட்டமைப்பு செலவுகள் செய்ய முடியாமல், சுமார் நான்கு லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள் இரண்டரை ஆண்டுகளில். 2021 வரை கடன் சுமார் ஐந்து லட்சம் கோடி, இப்போது சுமார் ஒன்பது லட்சம் கோடி.


Matt P
ஜன 04, 2024 09:55

கருணாநிதி வழியில் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறார்கள் ஆண்டுக்கு ஒருமுறை. அப்புறம் தேர்தல் வந்தாலும் இறைவனை அந்த சிரிப்பிலே காண்பார்கள். ஆட்சிக்கு வந்ததும் நானே சகலமும் என்று இறைவனாகவே மாறி விடுவார்கள்.


AMSA
ஜன 04, 2024 09:50

பொங்கலுக்கு 5000₹ கொடுக்க வேண்டும் என்று எடப்பாடிக்கு காசை கொடுத்து வாய அடித்தாகி விட்டது.


Siva
ஜன 04, 2024 08:32

போன தடவை 5000 கொடுக்கனுன்னு இளவரசனும் இளவரசியும் மைக்க புடித்து முழங்குனாங்க .. இப்போம் வீட்டுக்குள் முடங்கிடாங்க


rajen.tnl
ஜன 04, 2024 09:27

எதிர் கட்சி அரசியல் பண்ணாம அவியலா பண்ணும் .. இதுதான் அரசியல் .. ஏமாற்றாமல் எப்படி அரசியல் பண்ணுவது


R S BALA
ஜன 04, 2024 07:34

இது என்ன இவிங்க அப்பன் ஊட்டு பணமா 5000 கொடுக்கணும் பொங்கல் பரிசா..


வெகுளி
ஜன 04, 2024 06:38

பொங்கல் பரிசாக வீட்டுக்கொரு படகு குடுத்தா அடுத்த மழைக்கு உயிர் பிழைக்க ரொம்ப உதவியா இருக்கும்...


raja
ஜன 04, 2024 06:01

கேடுகெட்ட இழி பிறவிகள் ஆயிரம் இல்லை ...அல்வாதான் கொடுப்பானுவோ...இதே ஆட்சியில் இல்லைன்னா 5000 கொடுகணும்முண்ணு கோசம் போடுவானுவோ...


Ramesh Sargam
ஜன 04, 2024 05:51

அந்த லஞ்ச பணம் வேண்டாமே...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை