உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா? ராமதாஸ் கேள்வி

தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா? ராமதாஸ் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:'' திருப்பூர் அருகே ஒரே குடும்பத்தில் மூவரை படுகொலை செய்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு சிறப்பாக பாதுகாக்கப்படுவதற்கு இது தான் சான்றா?,'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சேமலைகவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகன் ஆகிய மூவரை கொடூரமாக படுகொலை செய்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்தளவுக்கு தமிழகத்தில் நிலைமை மோசமடைந்திருக்கிறது என்றால், தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா? காவல்துறை அதன் கடமைகளைச் செய்கிறதா அல்லது ஆளுங்கட்சியினரின் குற்றங்களை மறைத்து, எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறாதா? என்ற வினா எழுகிறது. திராவிட மாடல் ஆட்சியில் எத்தனை வினா எழுப்பினாலும் விடை கிடைக்காது என்பது தான் வேதனையான உண்மை.தமிழகத்தின் காவல்துறையினர் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையினருக்கு இணையானவர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் பாராட்டுப் பத்திரம் வாசித்து இரு நாட்கள் ஆவதற்குள் இப்படி ஒரு கொடூரம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்குக் கூட இயலாத நிலையில் தான் தமிழக அரசும், காவல்துறையும் உள்ளன. தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு சிறப்பாக பாதுகாக்கப்படுவதற்கு இது தான் சான்றா? என்பதை அரசும், காவல்துறையும் விளக்க வேண்டும்.தமிழகத்தில் உள்ள மக்களால் நிம்மதியாக வெளியில் தான் நடமாட முடியவில்லை என்றால், நிம்மதியாக வீட்டில் கூட உறங்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது. ஆனால், மக்களின் துயரங்கள் எதையுமே புரிந்து கொள்ளாமல் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதையே மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தமிழகத்தின் சட்டம் -ஒழுங்கை பாதுகாக்கவும், தமிழக மக்கள் அச்சமின்றி நிம்மதியாக வாழவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

anantharaman
நவ 30, 2024 08:06

நாட்டிலேயே இல்லையே!


Mani . V
நவ 30, 2024 05:44

இல்லாத ஒன்றைப் பற்றிக் கேட்டால் எப்படி பதில் சொல்வதாம்?


Ramesh Sargam
நவ 29, 2024 22:33

தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு பத்திரமாக படுத்து தூங்குகிறது.


adalarasan
நவ 29, 2024 22:07

சட்டம் இருக்கு,aanal நடை முறை படுத்துவதில்தான், சிக்கல்? you tube ல் வரும் செய்திகள் திகிலை கிளப்புகிறது? ஒழுக்கம் தமிழ்நாட்டில் போய், ஐம்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, என்பதும் உண்மை ?


Dhurvesh
நவ 29, 2024 21:56

வன்னியர் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு அந்த சங்கத்திற்காக வாங்கிய சொத்துக்கள் எல்லாம் இப்போ யாரிடம் இருக்கிறது? யார் பெயரில் இருக்கிறது அந்த சொத்துக்களை யார் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்? ராமதாஸ் அவர்கள் திரு மோடி அவர்களையும் குஜராத் மாநிலத்தில் மிகவும் குறைவாக மட்டுமே உள்ள மோடி இந்தியாவை ஆட்சி செய்வதா அவரைப் போய் நான் பார்ப்பதா? அமித்ஷா வும் மைனாரிட்டி அவர் உள்துறை அமைச்சராக இருப்பதா அவரைப் போய் நான் பார்ப்பதா எனக்கு அது அவுமானம் என்றும் கூறும் மனவலிமை அய்யா ராமதாஸ் அவர்களுக்கு மட்டுமே உள்ளது, பாமக வெற்றி பெறுதோ இல்லையோ வன்னியர்கள் வெற்றி பெறுகிறார்கள், அது போதும் , அனைவருக்குமான வன்னியர்களின் வெற்றியை ராமதாஸ் அன்புமணி யால் ஒன்றுமே செய்ய முடியாது எவ்வளவு ஜாதி திமிர் இருந்தால் ஸ்டாலினை போய் நான் பார்க்கனுமா - என்று ராமதாஸ் பேசுவார்? Ramadoss proved as level Polician.


திராவிட மாடல் மனித நேய மாடல்
நவ 29, 2024 21:54

ஏன் நீர் துபாய் சென்று வந்தீர் ஒழுங்கா வீடு போய் சேர்ந்து விட்டீர் அப்புறம் என்ன சட்டம், ஒழுங்கு சரியாக இருக்க தானே வீடு போய் சேர்ந்தீர் இல்லை என்றால் ?


hari
நவ 29, 2024 23:05

திராவிட மாடல் சொம்பு மாடல் என்று மக்கள் கூறுகிறார்கள்


Ms Mahadevan Mahadevan
நவ 29, 2024 21:50

சத்தத்தை காணுமே என்று பார்த்தேன். இந்த பாயிண்ட் வைத்தே ஸ்டாலினை ஒரு கிழி கிழித்து விடுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை