உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முருகனின் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சியா?

முருகனின் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சியா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் கந்தர் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதை கண்டித்தும், தொடர் போராட்டம் நடத்துவது குறித்தும் ஜன.12ல் திருப்பரங்குன்றம் சன்னதி தெரு ஆர்.எஸ்.டி., திருமண மண்டபத்தில் முருக பக்தர்கள், ஹிந்து அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் பங்கேற்கும் ஆலோசனைக்கூட்டம் நடக்கிறது.திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவிற்கு சென்று வழிபட எந்த தடையும் இல்லை. ஆனால் சில நாட்களுக்கு முன் ஆடு பலி கொடுக்க ராஜபாளையம் மிலாம்பட்டி சையது அபுதாகீர் 53, என்பவர் முயற்சித்தார். போலீசார் தடுத்தனர். இதை கண்டித்து எஸ்.டி.பி.ஐ., கட்சி மற்றும் சில இஸ்லாமிய அமைப்புகள் தர்காவில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த போலீசார் அனுமதி மறுப்பதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=v3pzsqam&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அரசு மறுப்பு

இதை மறுத்துள்ள தமிழக அரசின் சமூக ஊடக சரிபார்ப்பகம், 'இது முற்றிலும் பொய். தர்காவில் ஆடுகளை பலிகொடுப்பது தொடர்பாக கோர்ட் மூலம் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்ந்து பொய் காரணங்களை கூறி பிரசாரம் செய்து வருவதாக' தெரிவித்துள்ளது. இதற்கிடையே திருப்பரங்குன்றம் கந்தர் மலை புனிதத்தை காக்கும் வகையில் ஜன.12ல் காலை 10:00 மணிக்கு ஹிந்து அமைப்புகள், பக்தர்கள், பல்வேறு கட்சியினர் பங்கேற்கும் ஆலோசனைக்கூட்டம் நடக்கிறது. இதில் ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மலையை அபகரிக்க முயற்சி

இதுகுறித்து அக்கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. பழநி ஆண்டவர் கோயில் மலை பாதை வழியாக காலம் காலமாக காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு வேல் எடுத்து செல்லப்படுகிறது.மலை அடிவாரத்தில் குடி கொண்டிருக்கும் முருகப்பெருமானின் தலைக்கு மேல் 'நாங்கள் ஆடு வெட்டுவோம்' என்று சொல்வது முருகப்பெருமானை இழிவுபடுத்தி அவமானப்படுத்தும் செயல். காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் மனதை புண்படுத்துவதோடு, ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமையையும், மரபுகளையும் பறிக்கும் செயல்.தற்போது திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் கந்தர்மலையை சிக்கந்தர் மலை என்று அழைப்பதும், காலண்டரில் சிக்கந்தர் மலை என்று அச்சிடுவதும், அவர்களது விளம்பரங்களில் சிக்கந்தர் மலை என்று போஸ்டர் அடித்து ஒட்டுவதும், காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களை தடுப்பதுமாக சில அமைப்புகள் போட்டி போட்டு செயல்படுகின்றன.எப்படியாவது முருகப்பெருமானின் மலையை சிக்கந்தர் மலையாக மாற்றவும் நமது முப்பாட்டன் முருகப்பெருமானின் மலையை அபகரிக்கவும் ஆக்கிரமிக்கவும், ஹிந்து - முஸ்லிம் மத கலவரத்தை உண்டாக்கவும் மிகப்பெரிய சதி திட்டத்தோடு சில அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதை தடுப்பது குறித்தும், தொடர் போராட்டம் நடத்துவது குறித்தும் ஜன.12ல் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

AMLA ASOKAN
ஜன 08, 2025 21:57

திருப்பரங்குன்றம் மலையின் மேல் 1000 ஆண்டு கால கோவிலும் உள்ளது , 400 ஆண்டு கால தர்காஹ்வும் உள்ளது . இன்று வரை அனைத்து வரைபடங்களிலும் இந்த மலை திருப்பரங்குன்றம் என்று தான் குறிப்பிட பட்டுள்ளது . முஸ்லிம்களில் சிலர் தான் இந்த இடத்தை சிக்கந்தர் மலை என குறிப்பிடுவார்கள் . 400 ஆண்டுகளாக இந்து முஸ்லீம் ஒற்றுமையுடன் இரண்டிலும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன இதற்கு எந்த ஒரு முஸ்லீம் அமைப்பும் ஆதரவு அளிக்க வில்லை . இதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் ஜன.12ல் ஹிந்து அமைப்புகள், பக்தர்கள் ஆலோசனை என்ற பெயரில் ஒரு கூட்டத்தை கூட்ட உள்ளனர் . இதன் பின் ஒரு பதட்டம் ஏற்படத்தான் செய்யும் . கோவிலிலும் தர்காஹ்விலும் நிறைந்திருக்கும் இறைவன் இந்த சச்சரவை கண்டு சிரிக்கத்தான் செய்வான் . இத்தகு சம்பவங்களால் இன்று இந்து முஸ்லிம் மக்களிடையே பிளவை ஏற்படுத்துவது , முஸ்லிம்கள் மீது வெறுப்பை உண்டாக்குவது எளிதாகி விட்டது . மனிதநேயத்தை போற்றுவோம் .


N Annamalai
ஜன 08, 2025 21:02

முதல்வர் இறங்கி இந்துக்களுக்கு கோவிலை மீட்டுத்தர வேண்டும் என ஓட்டு போட்ட அப்பாவி மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் .அறுபடை வீடையாவது அடுத்த தலைமுறைக்கு கொடுங்கள் .


Natchimuthu Chithiraisamy
ஜன 08, 2025 20:18

கோவில் எதிர் ரோட்டில் உண்மையான கடவுள் ஏசு இந்த வாசகம் பொருந்திய பெரிய கட்டிடம் அதன் எதிரே ஒரு முஸ்லீம் கூல்டிரிங்ஸ் கடை. இதை சொன்னால் இது ஜனநாயகம் என்பார்கள்.


sankaranarayanan
ஜன 08, 2025 18:00

கந்தரை இவர்கள் சி - கந்தர் என்று அழைப்பதிலிருந்தே தெரிகிறது இவர்களுடை வண்டவாளம் எப்படி என்று முருகனை மு - ரீகன் என்பார்கள் சுப்பிரமணியனை சுல்தான்மனி என்பார்கள் ஆறுமுகனை அலெக்ஸ்சாண்டர் என்பார்கள் பழனியை பழனிபாபா என்பார்கள் இப்படியே முருகனுக்கு இன்னும் பல பெயர்கள் சூட்டுவார்கள்


Sampath Kumar
ஜன 08, 2025 16:00

முதல அங்கே பள்ளிவாசல் அமைக்க யாரு அனுமதி கொடுத்தது ?/ அதை சொல்லுங்க முத்தலில் அது தெரியாமல் பேசுவது தும்பை விட்டு வாலை பிடித்த கதை ஆகும்


veera
ஜன 08, 2025 16:22

நீ சொல்லேன்...அதையும் நீயே சொல்லேன்.....சம்பு


Suppan
ஜன 08, 2025 21:45

அது தர்கா சாரே . இதெற்கெல்லாம் அனுமதியா வேண்டும் ? அங்க போய் ஒரு சமாதியை வெச்சா போச்சு. தோண்டியா பார்க்கப்போறாங்க. பள்ளிவாசலுக்கும் தர்காவுக்கும் வித்யாசம் உண்டு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்


SRIRAMA ANU
ஜன 08, 2025 15:15

அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளதாகவும், மனித வளங்களை வளர்ப்பதில் மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களை விட தமிழ்நாடு மாபெரும் சாதனை படைத்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கியின் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” தமிழ்நாடு 8,42,720 மனித உழைப்பு நாள்கள் மகாராஷ்டிரம் 7,29,123 மனித உழைப்பு நாள்கள் குஜராத் 7,21,586 மனித உழைப்பு நாள்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


ghee
ஜன 08, 2025 15:52

முட்டையில் ஆம்லெட் போடலாம்....பொடிமாஸ் பண்ணலாம்.....அப்படி இருக்கு உன் கருத்து ..


vivek
ஜன 08, 2025 15:53

சரி தல...இப்போ அதுக்கு இன்னா சொல்ல வர....


Thirumal Kumaresan
ஜன 08, 2025 16:46

இதை ஏன் இங்கு வந்து சொல்கிறாய், தேவையானதை பேசு. திருப்பரங்குன்றம் தான் அந்த மலையின் பெயர் என்பது எங்கள் வாதம்,நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 08, 2025 15:06

மக்களவை கட்டப்பட்ட இடமே வக்ஃப் இடம் ன்னு சொல்ற khinzir கூட்டம் வேற என்னதான் பண்ணாது ????


Suppan
ஜன 08, 2025 16:29

மஹா கும்ப விழா நடக்கப்போகும் இடமே வக்ப்புக்கு சொந்தம்னு அடிச்சு வுட்றானுங்க. இங்க கந்தரை சிக்கந்தராக்கி அழகு பார்க்கிறானுங்க


ram
ஜன 08, 2025 14:45

எப்போது அவர்களுக்கு பாக்கிஸ்தான் பங்களாதேஷ் என்று நாட்டை வெட்டி கொடுத்தார்களோ appavey அம்பேத்கர் சொன்ன மாதிரி இந்தியாவை ஹிந்து தேசமாக அறிவித்து இருக்கணும்.


Sambath
ஜன 12, 2025 08:13

மிகவும் சரி. இப்பவும் மக்களுக்கு அறிவு வந்து ஓட்டு போட்டால் இந்தியாவை ஹிந்து தேசமாக்கி விடலாம் ஹிந்துஸ்தான் - ஹிந்துக்களின் ஸ்தானம்/ நாடு


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 08, 2025 13:27

ஹிந்துக்களிடையே ஒற்றுமை வேண்டும் ன்னு நாம கதறுவோம் .... ஆனா ஒற்றுமை இருக்காது .... இது மூர்க்க khinzir களுக்கு நல்லாவே தெரியும் .......


GMM
ஜன 08, 2025 13:03

பழக்கம் வழக்கம் மற்றும் அரசு ஆவணத்தில் உள்ள பெயரை மாற்றி அல்லது மத பெயரை இணைக்கும் வழக்கம் சிறுபான்மை மக்களிடம் அதிகரித்து வருகிறது. இது போன்று இஷ்ட பெயர் மாற்றம் சமூக நல்லிணக்கத்தை சிதைக்கும். பிற சமூக, மக்களிடம் இணைந்து வாழ விரும்பாத இரு சிறுபான்மை அந்தஸ்து , சலுகைகள் நீக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை